தந்தையின் கண்டிப்பும்
தமையனின் பாசமும்
தாயின் ஆதுரமும்
தோழியின் அண்மையும்
சகோதரியின் சீண்டலும்
ஒருசேர உருக்கொண்டவன் நீ
உடனிருக்கையில் கவலைகளின்றியும்
நீயில்லாத நேரம்
நகர மறுக்கும் சண்டிக்குதிரையாய்
எனை தாக்குகையில்
கனன்றுகொண்டிருக்கும் நெருப்பும்
வெறுப்பினை என்னில் உமிழ
தாயைத் தேடும் பிள்ளையாய்
கலக்கமுற்ற மனதுடன்
அமைதியாய் ஓரிடத்தில் வீற்றிருக்கும் நான் .
நீ
பாசமாய் பேசுகையில் நெகிழ்ந்தும்
கண்டிககையில் பயந்துமே
உன்னுடனான என் நாட்கள் போயினும்
நின் கைத்தலம் பற்றி
பற்றுடன் நீங்கிடாது
யாவும் நீயாய்
வாழ்ந்திட சித்தம் <3 <3 <3