உயிர் போவதை அவளும் அறிவாளா?
இல்லை போனதும் எண்ணி அழுவாளா?
காரணம் தேடி அலைவாளா!
காதலே என்றால் கலைவாளா?
நேசித்து பிரிதல் நியாயமில்லை
நேற்றுபோல் இன்று நீயுமில்லை
இனி நினைவினில் வாழ்ந்திட போவதில்லை
என் இதயம் துடிக்கும் ஓய்ந்துவிடாது
உனக்குள்ளே என்று நம்பிக்கையோடு போய்விடவா

?
சக்தி ராகவா
