Author Topic: காதலில் விழுந்தேன்  (Read 457 times)

Offline thamilan

காதலில் விழுந்தேன்
« on: January 19, 2017, 07:59:16 AM »
               

தொட்டுப் பேசுவது
நட்புக்கு அழகு
தொடாமல் பேசுவது
காதலுக்கு அழகு
நம் கண்கள் நான்கும்
காதலில் இருக்க
உதடுகள் மட்டும்
நட்பிலேயே இருப்பது ஏன்?..............

உனக்கான கவிதைகள் ஒவ்வொன்றும்
எனக்குள் இருக்கும் உன்னால்
சரிபார்க்கப்பட்ட பின்னரே
அனுப்பப்படுகின்றன ..........


என் நினைவினில்
ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊஞ்சலாடுபவளே
நிறுத்திவிடாதே உன் ஆட்டத்தை
நின்றுவிடும் எனது ஓட்டம் .........


மழைத்தூறல் நின்றதும்
எழுமே மண்வாசனை
அப்படித்தான்
உலகமே உறங்கியபின்
என்னில் எழும்
உனது நினைவுகள் .......

அன்பே இது எனது
கடைசி காதல் கடிதம்
படித்து முடித்து விட்டு
பதில் எழுது
என் முகவரிக்கு இல்லை
நரகத்துக்கு!!!!
உன்னைப் பிரிந்து
நான் வாழ்வது அங்கே தான்........

உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்த
மகிழ்ச்சியில் உயிர் விட்டன
பூக்கள்........ 
« Last Edit: January 20, 2017, 02:03:03 PM by thamilan »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காதலில் விழுந்தேன்
« Reply #1 on: January 20, 2017, 09:31:10 AM »

~ !! வணக்கம் தோழர் தமிழன் !! ~

அழகான கவிதை .....!!!!

'' மழைத்தூறல் நிறுத்தும்
எழுமே மண்வாசனை
அப்படித்தான்
உலகமே உறங்கியபின்
என்னில் எழும்
உனது நினைவுகள் .......''

அழகான வரிகள் ....
தொடரட்டும் கவிப்பயணம் ....
 ~ !! வாழ்த்துக்கள் !! ~



~ !! ரித்திகா !! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: காதலில் விழுந்தேன்
« Reply #2 on: January 31, 2017, 07:49:38 PM »
வணக்கம் ஐயா தமிழன்!

நித்தமும் ஊஞ்சலாடுபவளே
நிறுத்திவிடாதே உன் ஆட்டத்தை
நின்றுவிடும் எனது ஓட்டம் .........

பதில் எழுது
என் முகவரிக்கு இல்லை
நரகத்துக்கு!!!!


காதலை வாழ முயல்வேம்
இல்லை வாழ்த்தி மகிழ்வோம்
காதலில் மாழ்தல் மறைதல்
முடிவின்றி தொடரும் நிலை
முடிவுக்கு வரட்டும்!


அழகியலாய் அன்பு சொல் கவிதை!
வாழ்த்துக்கள் ஐயா!
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....