தொட்டுப் பேசுவது
நட்புக்கு அழகு
தொடாமல் பேசுவது
காதலுக்கு அழகு
நம் கண்கள் நான்கும்
காதலில் இருக்க
உதடுகள் மட்டும்
நட்பிலேயே இருப்பது ஏன்?..............
உனக்கான கவிதைகள் ஒவ்வொன்றும்
எனக்குள் இருக்கும் உன்னால்
சரிபார்க்கப்பட்ட பின்னரே
அனுப்பப்படுகின்றன ..........
என் நினைவினில்
ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊஞ்சலாடுபவளே
நிறுத்திவிடாதே உன் ஆட்டத்தை
நின்றுவிடும் எனது ஓட்டம் .........
மழைத்தூறல் நின்றதும்
எழுமே மண்வாசனை
அப்படித்தான்
உலகமே உறங்கியபின்
என்னில் எழும்
உனது நினைவுகள் .......
அன்பே இது எனது
கடைசி காதல் கடிதம்
படித்து முடித்து விட்டு
பதில் எழுது
என் முகவரிக்கு இல்லை
நரகத்துக்கு!!!!
உன்னைப் பிரிந்து
நான் வாழ்வது அங்கே தான்........
உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்த
மகிழ்ச்சியில் உயிர் விட்டன
பூக்கள்........