Author Topic: புரியாத புதிர்  (Read 414 times)

Offline ChuMMa

புரியாத புதிர்
« on: January 12, 2017, 06:53:36 PM »
புரியாத புதிர்

முதன் முதல் எனை பார்த்த போது
உன் உணர்ச்சியை நான் காணவில்லை

என்றும் எனை பற்றியே -உன்
சிந்தனை இருந்திருக்கக்கூடும்

எனக்காகவே நீ மறைத்திருப்பாய்
உன் துக்கங்களை என்னிடமிருந்து

நீ சோகமாய் இருந்தோ கண்ணீர்விட்டோ
நான் கண்டதில்லை...

நான் கேட்கும் எதையும் நீ
தர மறுத்ததில்லை இதுவரை....

என்னை பொறுத்தவரை -நீ
ஒரு புரியாத புதிர் தான்..

அந்த புதிருக்கான விடை காண
இதோ காத்திருக்கிறேன்

மருத்துவமனையின் முன்
அப்பா ஆகும் தருணத்திர்காக..


PURIYADHA  PUDHIR
Muthan mudhal unai paarthapodhu
Un unarchiyai naan kaanavillai

Endrum enai patriye –un
Sinthanai irundhirukka koodum

Enakaagave nee maraithirupaai
Un thukkangalai ennidamirundhu

Nee sogamaai irundho    kanneervitto
Naan kandathillai

Naan ketkum ethaiyum –Nee
Thara maruthathillai idhuvarai

Ennai portuhavarai nee
Oru puriyadha pudhir than

Andha pudhirukaana vidai kaana
Idho kaathirukiren

Maruthuvamaniyin mun
Appa aagum tharunathirkaaga   
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: புரியாத புதிர்
« Reply #1 on: January 13, 2017, 09:47:59 AM »
வணக்கம் தோழா...    vanakkam thozla

அப்பா ஆகும் தருணங்கழும்                appa aakum tharunangkalum
தாய்மை எனும் புனிதமும்                                  thaaimai enum punithamum
ஈடு இணை இல்லாதவை                                   eedu inai illathavai

தாய்மைப் பேறடையும் தருணங்களை                 thaaimaipeeradaiyum tharunangkalai
அருகே அமர்ந்து அனுபவிக்கும் விலி                  arukee amarnthu anupavikkum vali
கணவனுக்கு கிடைக்க பெற்ற                              kanavanukku kidaikka petra
வரமா சாபமா?                                                   varama saapama?


வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது               vaarthaikalil solli vida mudiyaathu
 
ஆனால் வாசலோரம் நிக்கையிலும்                     aanaal vaasal ooram nikkaiyilum
அலறும் குரல் ஒலி                                            alarum kutal oli
இதயத்தின் இயக்கம் பறிக்குமே!                          ithayaththin iyakkam parikkumee!

மனைவியின் வலியின் ஒலி - அன்பான               manaiviyin valiyin oli - anpana
கணவன் உயிர் பறிக்கும்                                     kanavan uyir parikkumee
மனைவி மகவு ஈகையில் அவள்படும்                  manaivi makavu eekaiyil avalpadum
வலிகள் காணும் கணவன்                                   valikal kaanum kanavan
இன்னோர் பிரசவம் கேளான்.                               innoor pirasavam keelaam.


உணர்ந்திடு உன்னவள் ஈகம்                                unarnthidu unnaval eeham
அன்பாய் பேணு தாய்மை...                                 anpaai peenu thaaimai...

பிரசவிக்கையில் இறக்கும்                                  pirasavikkaiyil irakkum
பெண்கழும் உண்டு                                             penkalum undu             
சிலபொழுது மகப்பேறிலும்                                  sila pozluthu makappeerilum                   
மனைவியே குழந்தையாதல் இன்பம்                   manaiviyee kuzlanthaiyaathal inpam
அனைத்துமே இறைவன் ஈவது                            anaiththumee iraivan eevathu 

வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.                        vaalka valamudan, vaalthukkal.

 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: புரியாத புதிர்
« Reply #2 on: January 13, 2017, 03:50:18 PM »

வணக்கம் சும்மா ....

   சும்மா இல்லமே கிறுக்கிட்டிங்க போல இருக்கே ....


~ !! பெண் என்பவள் என்றும் ஒரு
          புரியாத புதிர் தான் .... !! ~
 ~ !! புரிந்துக்கொண்டோர் எவருமில்லை இப்பூவியில் !! ~
~ !! புரிந்துக்கொண்டாள் அதுவே சிறப்பு !! ~
    ~ !! சும்மா கிறுக்கினாலும் ....செம்மையாக கிறுக்கியுள்ளீர் !! ~

~ !! சும்மாவின் கிறுக்கல் பயணம் !! ~
~ !! மென்மேலும் சிறப்பாகத் தொடர !! ~
~ !! இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~



~ !! ரித்திகா !! ~

Offline ChuMMa

Re: புரியாத புதிர்
« Reply #3 on: January 13, 2017, 07:10:35 PM »
நன்றி சரிதா, ரித்திகா

உங்கள் கருத்துக்கு என் வணக்கங்கள்

புரியாத புதிர் என் கிறுக்கல்கள்
உங்கள் இருவரின் பார்வையில்
அதன் அர்த்தம் மாறுபட்டிருக்கிறது

எதுவாயினும் என் கிறுக்கல்களை
படித்தமைக்கு என் சிரம் தாழ்ந்த
வணக்கங்களும் நன்றிகளும்


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".