"காதல் கவிதை தீட்டலாம் என்று
என் தேகம் அதையே காகிதமாய்
ஊனின் உதிரம் கொண்டுதான் கவிதை
அதை நான் தீட்டுவேன்
(பலபொழுது ) சிந்திப்பதும் (சிலபொழுது ) சந்திப்பதும் அஞ்சல்காரர்களாய்
காலவரை ஏதுமின்றி
கவிதை உனக்காய் ப(டி)தித்திடுவேன்
முத்தே உன் உத்தரவை ,பெரும் சொத்தாக மதிக்கின்றேன்
உன் மதிப்பின் நன்மதிப்பாய் இப்பதிப்பை பதிக்கின்றேன்
இப்பதிப்பின் பதிப்புகளில், பெரிதாக எதுவுமில்லை
இருந்தால், உன் பெருமை அன்றி நிச்சயமாய் வேறெதுவுமில்லை
என்ன செய்து என்னை இப்படி ஆக்கிவிட்டாய் ?
கிறுக்கவும் லாயக்கற்றவனை கத்துக்குட்டி கவிஞன் ஆக்கிவிட்டாய்
கவி யே உன் கவிதைகளில், வரியாக வாழ்வேன் நான்
பிறையே நீ உறங்கும்போதும் பிரிய மாட்டேன் நான்
கிறுக்கன் நான் கிறுக்கிதள்ளும் கிறுக்கல்கள் அத்தனையும்
ஒருத்தி யின் நினைவுகளில் பிறந்திட்ட பே(பொ)ருக்கல்களே
தப்பாய் ஏதும் இருந்தால் பொறுத்துக்கொள் கவியே
பருத்தியே , உனக்கு பொருத்தம் போல் திருத்தம் தருவேன் நான் .."
இப்பகுதியில் மற்றவர் உயர் கவிதைகள்போல் இல்லாமல் போனாலும்
இதையும் ஒரு கவிதையாய் ஒப்பு கொண்டால்
இப்பதிப்பு ..
என் யாரோ அவள், கால்களுக்கு காணிக்கை
கவிதைக்கு அர்ப்பணம்
காதலுக்கு சமர்ப்பணம் .