Author Topic: என்றென்றும் காதல் - கவிதை நிகழ்ச்சி  (Read 1942 times)

Offline Global Angel

நண்பர்களுக்கு ...
எதிர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு  நண்பர்கள் இணையதள வானொலி ஊடக நீங்கள் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உங்கள் மனதை வெளி படுத்தவோ ... இல்லை அவர்களுக்கு உங்கள் கவிதையோடு காதலை பகிரவோ  வாழ்த்துகளை பகிரவோ ஆசை படுகிண்றீர்களா ....  உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செயுங்கள் ... எதிர் வரும் வெள்ளி கிழமை  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் ....என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் உங்கள் இதயங்களை வந்தடையும் ....

                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
« Last Edit: February 11, 2012, 04:10:46 PM by benser creation »

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Yenada Maraikirai
Unnaval Mel Ulla Kaathalai
Ullathai maraithai
Yenagalai Maraithai
Varthaigalai Maraithai
Yeno Unnal Un Kannerai Maraika
Mudiyavillai
Un Kanneeruku therikirathe
Nan Unakanaval endru
Unaku Matum yenada inum
Puriyavillai?
Oru velai arinthum ariyathavanai
Irukirayo
En thavipai parka?

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் காதலை சொல்ல
ஒரு தினம் போதுமா
என் காதலா ..
உன்னைக் கொண்டாட
ஒரு தினம் போதுமா
காதலோடு காத்திருக்க
ஒரு தினம் போதுமா
தினம் தினம் வேண்டும்
உன்னோடு உண்டான
என் காதலை கொண்டாட
காதலர் தினம்....

காற்றாய் மாறி
காதலிக்க ஆசை
உன் மூச்சுக்காற்றாய்
உன் இதயத்தை
முத்தமிட ஆசை..

உன்னை நினையாமல்
ஒரு நாளும் முடிவதில்லை
உன்னை மறந்தாலே
என் உயிர்
எனக்கு சொந்தம் இல்லை...
என் அன்பில்
நிறமாற்றம் இல்லை.


கனவுகளில் நீ
விழித்திருக்கையில்  நீ
நினைவுகளாய்  நீ
உன் காதலில்
விழுந்ததால்
எனக்குள் எல்லாமே நீ

இமைக்கும் நொடியில்
உன்னை பார்க்க
தவறினும்

என் இதயபார்வையில்
ஒரு நொடியும் இமைக்காமல்
பார்த்து வருகிறேன்

பூக்கும் மலருக்கு
மரணம் ஒருநாள் தான்
நீ பேசாததால் தினமும்
மரித்து போகிறேன்

எனக்காக நீ
வரமாட்டாயென அறிந்து
நேரம் போவதை அறியாமல்
காத்திருக்கிறேன்...

என தலையணை அருகே
தொலைபேசியோடு
தவமிருப்பேன்
நீ அழைக்க மாட்டாய் என
அறிந்தும்..

உன்னையே நினைத்து
துடித்திருகிறேன்
நீ என்னை நினைக்கமட்டாய்
என அறிந்தும்..

எனக்காக நீயில்லை
என அறிந்தும்...
உனக்கவே காத்திருக்கிறேன்....

நீ படிக்க மாட்டாய்
என்று தெரிந்தும்..
உன்னைப்பற்றிய..
உனக்கான..
கவிதைகளைத்தான்..
எழுதிக்கொண்டிருகிறேன்..

இவை வெறும் வரிகள் அல்ல
உன்னால் நான் படும் வலிகள்
காதல் வலிகள்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

இடம் கேட்கின்றேன்


உனக்காக அலைந்தேன்
என் கால்
ரேகை தான்
அழிந்தது ...
உன் இதயத்தில்
என் பாதச்சுவடு
பதியவே
இல்லை...

தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறை நிலவை போல 
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...
மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
கதிரவனை  போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...

நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது உன் நினைவுகள்...

உன்னை நான்
பார்த்த நாளிலிருந்து
என் இதயத்தை
தொலைத்தேன் ..

நீ என்னை
பார்த்த நாளிலிருந்து
என் தூக்கத்தை
தொலைத்தேன் ...

உன் மார்பை 
தொட்டிலாக்கி
எனை தாலாட்டி
உறங்க வைப்பாயா....'?


என் ஆசைகள் எல்லாம்
கருவிலேயே
தொலைந்து போகின்றன..
உன்னை காதலித்த நாள்முதல் ....

உனக்காக கவிபாட பலர் இருந்தாலும்
இது எனக்காக நான் பாடும் கவிதை....

அடுத்த காதலர் தினத்தில்
உன்னுடன் நான் வாழ
வரம் கேட்கவில்லை
என் நினைவுகள் உன்னிடம் வாழ
இடம் கேட்கின்றேன்
உன் இதயத்தின் ஓர் ஓரத்தில்

                    

Offline kanmani

காதலும் கற்று மற
எப்படி முடியும்
கற்ற காதலை மறக்க...
மறக்க நினைக்காமல்
நினைத்து துடிப்பது கூட
சுகம் தான்..
கண்ணில் காதலும்
நெஞ்சில் ஏக்கமும்
ஒவ்வொரு நொடியும்
நினைத்துக் கொண்டிருக்கையில்
என் நினைவுகளில் உன்னை
பாதுகாத்து வைத்திருக்கிறேன்....
பார்த்தும் பாராமல்
இருக்க நினைத்து
பார்த்த நொடியில்
விலக முடியவில்லை
உன்னில் நிலைத்து போன
என் பார்வையை..
ஒரு யுகம் வாழ்ந்த
சுகத்தை கண்ணில் கண்டேன்
மீண்டும் ஒரு யுகம்
வாழ ஆசை
ஒரு பார்வை வீசி விடு
பாவி இவளும்
வாழ்ந்து விடுகிறேன்
உன் பார்வையை
பார்த்துக்கொண்டே...
« Last Edit: February 11, 2012, 10:27:11 AM by kanmani »

Offline Yousuf

சொல்லாத காதல்

என் காதலை
எப்போதும் நான்
உன்னிடம் கூட
சொல்ல துணிந்ததில்லை.
ஆனால்
அந்த சொல்லாத காதலிலும்
சுகமொன்று
இருக்கத்தான் செய்கிறது.

உன்னில்
விதைபோடாமலே
என்னில் ஆசைகள்
விருட்சமானது.

உன் நினைவூகளை
என்னில் போட்டு
புதைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது
விதைத்தேன் என்று.

கற்பனை கூடாரத்தில்
உன்னோடு
கனவு வாழ்க்கை
வாழ்ந்து வருகிறேன்.

உனக்கே தெரியாமல்
நமது குடும்பம்
நடந்து கொண்டுதானடி இருக்கிறது.

என் மனசுக்குள்ளேயே
நான் மௌனமாய்
மானசீகமாய்
அரங்கேற்றிய நாடகத்தில்
நான் தலைவன்
நீ தலைவி.
« Last Edit: February 11, 2012, 10:37:08 AM by Yousuf »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வாழ்வதும் வீழ்வதும்

என் இதய கூட்டில்
குடிருப்பவளே
என் நினைவிலே
எப்பொழுதும் சுழல்பவளே

எங்கே சென்றாய்
உன்னை காணாது
நொடியும் யுகமானது
பெண்ணே........?

என் தவிப்பை
உனக்கு எப்படி எடுத்துரைப்பேன்
என்ன சொல்லி புரிய வைப்பேன்
நீ எனக்கானவள் என்று

நினைவில் நிழலாய்
தொடர்பவளே
நிஜமாய் ஆவது
எப்போது.....?

கடிதம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல்
தூது வந்த
அணைத்து உக்திகளுக்கும்
பதில் எப்போது .?

உலக காதலுக்கு ஒரு தினம்
உண்டெனில் நீ மௌனம்
கலைக்கும் தினம்
நம் காதலின் தினம்

நான் வாழ்வதும் வீழ்வதும்
உன் கைகளில்
நீ என்ன சொன்னாலும்
எனக்கு சம்மதம்தான்

எனக்கு பேதம் பிரித்து
பார்க்க தெரியாதடி பெண்ணே
காதல் சாதல் இரண்டுமே
எனக்கு சுகம்தான்

காதல் என்றால் உன்னோடு
வசந்த வாழ்வு
இல்லை என்றால் உன்
நினைவோடு சேர்ந்த மறைவு

வாழ்ந்தால் உன்
இதய கருவறை
இல்லை மரித்து
வீழ்ந்தால் கல்லறை

கருவறை சுகம் நிஜம் என்றால்
கல்லறை சுகம் நிழல்
நான் நிஜமாவதும் நிழலாவதும்
உன் பதிலில்தானடி பெண்ணே.......?

 


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
« Last Edit: February 12, 2012, 06:54:21 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
"காதல் கவிதை தீட்டலாம்  என்று
என் தேகம் அதையே காகிதமாய்

ஊனின் உதிரம் கொண்டுதான் கவிதை
அதை நான் தீட்டுவேன்

(பலபொழுது ) சிந்திப்பதும் (சிலபொழுது ) சந்திப்பதும் அஞ்சல்காரர்களாய்
காலவரை ஏதுமின்றி

கவிதை உனக்காய் ப(டி)தித்திடுவேன்   

முத்தே உன் உத்தரவை ,பெரும் சொத்தாக மதிக்கின்றேன்
உன் மதிப்பின் நன்மதிப்பாய் இப்பதிப்பை பதிக்கின்றேன்

இப்பதிப்பின் பதிப்புகளில், பெரிதாக எதுவுமில்லை
இருந்தால், உன் பெருமை அன்றி நிச்சயமாய் வேறெதுவுமில்லை 

என்ன செய்து என்னை இப்படி ஆக்கிவிட்டாய் ?
கிறுக்கவும்  லாயக்கற்றவனை கத்துக்குட்டி  கவிஞன் ஆக்கிவிட்டாய்

கவி யே உன் கவிதைகளில், வரியாக வாழ்வேன் நான்
பிறையே நீ உறங்கும்போதும் பிரிய மாட்டேன் நான்

கிறுக்கன் நான் கிறுக்கிதள்ளும் கிறுக்கல்கள் அத்தனையும்
ஒருத்தி யின் நினைவுகளில் பிறந்திட்ட பே(பொ)ருக்கல்களே

தப்பாய் ஏதும் இருந்தால் பொறுத்துக்கொள் கவியே
பருத்தியே , உனக்கு பொருத்தம் போல் திருத்தம் தருவேன் நான் .."

இப்பகுதியில் மற்றவர் உயர் கவிதைகள்போல் இல்லாமல் போனாலும்
இதையும் ஒரு கவிதையாய் ஒப்பு கொண்டால்

இப்பதிப்பு ..

என் யாரோ அவள், கால்களுக்கு  காணிக்கை
கவிதைக்கு அர்ப்பணம்
காதலுக்கு சமர்ப்பணம் .