தங்கைக்கு வணக்கம்,
உனது கவியிலும் அதன் நடையிலும்
எழிலுண்டு.
கண்களால் காண்கையில் மனதுக்கு
புரியும் எழிமையுமுண்டு.
விழிகள் இமைக்க மறுத்து
அவ்வழகினை ரசித்து நான் நிற்க ....
இதமாய் தென்றல் எம் தேகத்தைத்
தடவிச்செல்ல ....
சேர்த்து வாய்த்த துன்பங்கள் விலகியதே ....
போர்பூமியாய் வெடித்து எரிமலையாய்
பொங்கியிருந்த எம் மனதில் ...
அமைதி நிலவியதே ....
நீண்ட நெடும் காலம் கடந்து
கடற்கரை சென்ற அனுபவம் கொண்டேன்.
தளத்தில் காணும் தங்கையின்
எழிமை
பொறுமை
பணிவு
பக்குவம்
அலுக்காத தொடர்செயல்
நடைமுறை வாழ்விலும் நிலைபெறுக!
உனது எதிர்காலம் வரலாறாய் நிலைபெறும்
கடவுள் கூடவே இருப்பார்
இதயத்தால் வாழ்த்துகின்றேன், நன்றி
வாழ்க வளமுடன்.