Author Topic: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~  (Read 1686 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« on: November 12, 2016, 11:57:11 AM »


அந்திச்சாயும் வேளை...
கடற்கரையோரம் நடைப்பயணம் ...
மணலில் பாதங்கள் புதைய நடந்துச்செல்ல... 
பாரங்கள் சுமந்த மனதில் ...
தென்றல் வந்து தீண்ட ...
இதயமும்  லேசானதே ...

கரடு முரடான பாதைகளைக்
கடந்து வந்த எமது பாதங்கள்...
ரத்த கீறல்களோடு நின்றிருக்க ...
வந்து வந்து பாதங்களை வருடி  ...
என்னுடன் கொஞ்சி விளையாடு என
முத்தமிட்டு சென்ற கடலலைகள் ....
காயங்களையும் ஆற்றியதே

ஒற்றை விளக்காய் பூமிக்கு
ஒளி தரும் கதிரவன் ....
அவரின் நிழலை ஏந்திருக்கும்
கடலலைகள் ....
நீல சாயம் பூசிய வானம் ....
வெண்பஞ்சிகளாய் மேகங்கள்
அங்கங்கே கூடிருக்க ...
சூரியனின் நிழலை ஏந்திநிற்கும்
கடலலைகளின்
அழகிற்கு அழகேற்றப் போட்டிப்
போடுகின்றனவோ ....

கதிரவன் எமது கடமை முடிவுகிறது
என விடைபெற்றுச்செல்ல .....
சென்று வா சூரியனே ...மீண்டும்
காலை சந்திப்போமென
சல சலவென முன்னும் பின்னும்
ஓடி ஆடும் கடலலைகள் வழியனுப்பிவைக்க ....
எத்தனை அழகான காட்சிகள்   ....
படைத்த இறைவன் அவன் கலைஞனே....

விழிகள் இமைக்க மறுத்து
அவ்வழகினை ரசித்து நான் நிற்க ....
இதமாய் தென்றல் எம் தேகத்தைத்
தடவிச்செல்ல ....
சேர்த்து வாய்த்த துன்பங்கள் விலகியதே ....
போர்பூமியாய் வெடித்து எரிமலையாய்
பொங்கியிருந்த எம் மனதில் ...
அமைதி நிலவியதே  ....

இருக்கண்கள் போதவில்லையே ....
வர்ணிக்க வார்த்தையில்லையே ....
அலைகள் வந்து வந்து முத்தமிட்டு
செல்கின்றதே ....இந்த நொடி இவ்வாறே
நீண்டிடாதா....?நிலைத்திடாதா ...??
மரணித்த பின்னரே சொர்கத்தைக்
காண்போம் என்பது பொய்த்ததே ....
வாழும் எமது வாழ்நாளிலே ....
யாம் கண்டேன் சொர்கம் ....
எமது கடற்கரைப்பயணத்தில் .... 


~ !! நன்றி !! ~
~ !! தோழி ரித்திகா !! ~

« Last Edit: November 12, 2016, 12:18:31 PM by ரித்திகா »


Offline AnoTH

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #1 on: November 12, 2016, 12:17:05 PM »


அன்புத்தங்கை ரித்திகா,


கடற்கரையில் நடந்து செல்லும் போது
ஏற்படக்கூடிய உன்னதமான உணர்வை
மிக அழகான வரிகளால் ஒருங்கிணைத்து
கவிதையில் இரசனையையும் இதமான
அந்தக்காட்சியையும் கண் முன்னே
நிறுத்திவிட்டீர்கள்.


ஒற்றை விளக்காய் பூமிக்கு
ஒளி தரும் கதிரவன் ....
அவரின் நிழலை ஏந்திருக்கும்
கடலலைகள் ....
நீல சாயம் பூசிய வானம் ....
வெண்பஞ்சிகளாய் மேகங்கள்
அங்கங்கே கூடிருக்க ...
சூரியனின் நிழலை ஏந்திநிற்கும்
கடலலைகளின்
அழகிற்கு அழகேற்றப் போட்டிப்
போடுகின்றனவோ ....


வரிகளின் சொற்பிரயோகத்திலும்
வர்ணனை சிறப்பிலும் ஆற்றல்
மிஞ்சி நிற்கிறது.


வாழ்த்துக்கள் எனதருமை தங்கை


Offline GuruTN

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #2 on: November 12, 2016, 12:20:14 PM »
எங்களுக்கும் கூட மாலை நேரம், கடற்கரை ஓரம் அலைகளின் கொஞ்சல்களை அனுபவித்துக்கொண்டே ஒரு பயணம் செய்த அனுபவத்தை தந்துவிட்டது உங்கள் அழகான வரிகள்... அருமையான கவிதை தோழி... அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்...

Offline SweeTie

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #3 on: November 12, 2016, 09:27:44 PM »
சொர்க்கம் உ ங்கள் கவிதை சொர்க்கம்.  வாழ்த்துக்கள்

Offline Maran

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #4 on: November 13, 2016, 10:10:06 PM »



அருமை தோழி... சில்லென்று வீசும் தென்றலாய் வரிகள்...  :)

தொடரட்டும் கவிக்குயிலின் கூவல்கள்...  :)





Offline இணையத்தமிழன்

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #5 on: November 14, 2016, 10:05:19 AM »

அன்பு தங்கை ரித்திகா உமது கவிதையை வாசிக்கும்போதே அக்கட்சிகள் என்கண்முனே வந்து செல்கின்றன அருமையான கவிதை ரித்தி வர்ணிக்கத்தான் வார்த்தை இல்லை என்று கூறி முழுவதுமே வர்ணித்துவிட்டாய்  மேலும் உனது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் எனது அருமை தங்கையே

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #6 on: November 14, 2016, 12:49:25 PM »

அன்பு அண்ணா அனோத்க்கு ....
          எமது வணக்கம் ....!!!!

நேரமோதிக்கி எமது கவிதையை வாசித்து ....
தங்களின் கருத்தையும் பாராட்டுகளையும்
மிக அழகாக தெரிவித்தமைக்கு ...
மிக்க மிக்க நன்றி அண்ணா .....

ஒரு சிறு முயற்சி ....
பயிற்ச்சித்து முயற்ச்சித்தேன்....
அழகாக அமைந்திருக்கும்  என்ற சிறு  நம்பிக்கை ....

~ !! பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா ...!! ~

~ !! உங்கள் கண்ணா !! ~
~ !! ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #7 on: November 14, 2016, 01:03:45 PM »

வணக்கம் நண்பர் குரு .....

நேரமோதிக்கி கவிதையை வசித்து
பாராட்டு தெரிவித்தமைக்கு
~ !! மனமார்ந்த  நன்றிகள்  !! ~
அசத்தல் தொடர் கட்டாயம் முயற்சிப்பேன் ....

வாழ்த்துக்களுக்கு நன்றி !!!


~ !! தோழி ரித்திகா !! ~


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #8 on: November 14, 2016, 01:48:39 PM »

என் ஸ்வீட் ஸ்வீட்டி பேபி ....

~ !! வணக்கம் வணக்கம் வணக்கம் !! ~

நேரமொதுக்கி வந்து கவிதையை
வசித்தமைக்கு மிக்க மிக்க நன்றி ....

''சொர்க்கம் உ ங்கள் கவிதை சொர்க்கம்''
எனும் தங்களின்  பாராட்டில்
மனமகிழ்தேன் .....

~ !! நன்றிகள் ஸ்வீட்டி பேபி ...!!! ~


~ !! தோழி  ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #9 on: November 14, 2016, 02:15:55 PM »

~ !! வணக்கம் தோழர் மாறன் !! ~

நேரமொதுக்கி வசித்து பாராட்டு
தெரிவித்தமைக்கு
மிக்க மிக்க நன்றி !!!

குயிலா காக்கவா என்று சரியாக தெரியவில்லை .... ;D ;D ;D ;D
ஆனால் கூவல்கள் தொடர முயற்சிப்பேன் ....

~ !! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !! ~   


~ !! தோழி ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #10 on: November 14, 2016, 02:35:30 PM »

என் அன்பு தங்க அண்ணா ....

~ !! மணி அண்ணா @ இணையத்தமிழரே !! ~

வணக்கம் வணக்கம் வணக்கம் ...!!!

நேரமோதிக்கி வந்து வாசித்து ....
பாராட்டு தெரிவித்தமைக்கு
மிக்க மிக்க மிக்க நன்றி
அன்பு சகோதரரே ....!!!

பயணம் மென்மேலும்  தொடர முயற்சிப்பேன் ....!!!
 
~ !! நன்றிகள் அண்ணா !! ~


அன்பு தங்கை
~ !! ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! Yaam Kanda Sorgam !! ~(Lochi bby specially for u )
« Reply #11 on: November 14, 2016, 03:26:26 PM »


Anthichhaayum velai
kadarkkaraiyoram nadaippayanam ....
manalil paathangal puthaya nadanthuchella....
Baarangal sumantha manathil...
ThenDral vanthu theenda ....
ithayamum lesaanathey .....

karadu muradaana paathaigalai
kadanthu vantha emathu paathangal
ratha keeralgalodu nindrirukka ....
vanthu vanthu paathangalai varudi...
ennudan konji vilaiyaadu ena
muthamittu sendra kadalalaigal
kaayangalai aatriyathey .....

ottrai vilakkaai boomiku
oli tharu kathiravan ....
avarin nizhazhai eanthirukkum kadalalaigal ....
neela saayam poosiya vaanam ...
venpanjugalaai megangal
angangey koodirukka ..
sooriyanin nizhazhai eanthirukkum kadalalaigalin
azhagirku azhagetra potti podugindranavo...

kathiravan emathu kadamai mudivurugirathu
Ena vidaippetruchella ....
sendru vaa sooriyane ...meendum kaalai
santhippomena sala salavena munnum pinnum
oodi aadum kadalalaigal vazhiyanuppi veikka
eathanai azhagaana kaatchigal ....
padaiththa iraivan avan kalaigyane...

vizhigal imaikka maruthu ...
avvalaginai rasithu naan nirka...
Ithamaai thendral em thegathai thadavichella ....
serthu veiththa thunbangal vilagiyathey ...
porboomiyaai  vediththu earimazhaiyaai
pongiyiruntha em manathil amaithi nilaviyathey ....

irukangal pothavillaiye...
varnikka vaarthai illaye ....
alaigal vanthu vanthu muththamittu selgindrathey ....
intha nodi ivvaare neendidaathaa..?? nilaithidaathaa...??
maranitha pinnare sorgathai kaanbom
enbathu poiththathey..
vaazhum emathu vaazhnaalile...
yam kanden sorgam....
emathu kadarkkaraippayanathil.... 


~ !! nandri !! ~
~ !! RiThikA !! ~


Offline LoShiNi

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #12 on: November 15, 2016, 07:39:13 AM »

Miss U BaBY GaL...

Offline LoLiTa

Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #13 on: November 15, 2016, 04:30:35 PM »
Superb ritu cyg!!

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ~ !! யாம் கண்ட சொர்கம் !! ~
« Reply #14 on: December 10, 2016, 09:14:55 PM »
தங்கைக்கு வணக்கம்,

உனது கவியிலும் அதன் நடையிலும்
எழிலுண்டு.

கண்களால் காண்கையில் மனதுக்கு
புரியும் எழிமையுமுண்டு.

விழிகள் இமைக்க மறுத்து
அவ்வழகினை ரசித்து நான் நிற்க ....
இதமாய் தென்றல் எம் தேகத்தைத்
தடவிச்செல்ல ....
சேர்த்து வாய்த்த துன்பங்கள் விலகியதே ....
போர்பூமியாய் வெடித்து எரிமலையாய்
பொங்கியிருந்த எம் மனதில் ...
அமைதி நிலவியதே  ....

நீண்ட நெடும் காலம் கடந்து
கடற்கரை சென்ற அனுபவம் கொண்டேன்.

தளத்தில் காணும் தங்கையின்
எழிமை
பொறுமை
பணிவு
பக்குவம்
அலுக்காத தொடர்செயல்
நடைமுறை வாழ்விலும் நிலைபெறுக!
உனது எதிர்காலம் வரலாறாய் நிலைபெறும்
கடவுள் கூடவே இருப்பார்

இதயத்தால் வாழ்த்துகின்றேன், நன்றி
வாழ்க வளமுடன்.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....