Author Topic: இரு மலர்கள்..  (Read 828 times)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
இரு மலர்கள்..
« on: October 23, 2016, 10:38:04 PM »



ஏக்கத்துடன் நான்   
காரின் உள்ளே சோகமாய் பார்த்திட ...
ஏளனமாய் என்னைபோல்  ஓர்  சிறுமி
காரின் வெளியே பார்த்து சிரித்திட...

என்  பிஞ்சு கரங்களில் ரோஜா மலர்கள் ஏந்திட...
என்னை  ஒரு  சொகுசு காரில் உள்ள சிறுமி  திட்டிடா..
கபடமே இல்லாமல் திரும்பவும் கேட்டிட ..
கருணையே  இல்லாமல் துரத்திட..

சுடும் வெயிலில்  நான்  பசியால் வாடிட..
சொகுசுக்காரில்  அந்த  சிறுமி   சந்தோஷமாகிட..
அவஸ்தையில்  நான்   கண்ணீர்விட ...
அவள்  அம்மா  என்னைப்  பார்த்து  மனம்  உருகிட..

மலர்களை  அவர்கள்  வாங்கிட ..
மலர்களைப் போல்   என்  முகத்தில்  புன்னகையிட..
நான்  சந்தோசமாய்   வீட்டிக்கு ஓடிட..
காரின்னுளே உள்ள சிறுமி  கோபமாய்ப்  பார்த்திட...

அன்பாய்  ஆசையாய்  இன்பமாய்  நான்  வீட்டுக்கு   சென்றிட ...
ஈகையாய்  உதவியாய் ஊக்கமாய் பெற்றோர்கள் பார்த்திட...
எளிமையாய்  ஏக்கமாய்  ஐயமாய் மனதில் கவலையாகிட..
ஒளிந்திட ஓரத்தில்  ஔவியமாய்ப்  பேசிட ..

இன்று  போல்  இன்பமாய்  கடந்திட ..
இறைவனிடம் வேண்டிட ..
இன்பத்தில்  இறைவன்  அனுக்கிரமிட ..
இன்பமாய் மகிழ்ந்திட....


முற்றும்
« Last Edit: October 25, 2016, 06:44:34 PM by BlazinG BeautY »

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: பூ வாங்குங்கள்
« Reply #1 on: October 23, 2016, 10:50:29 PM »
வாக்கியத்தின் வடிவம் வசீகரம் ...வாழ்த்துக்கள்

Offline SweeTie

Re: பூ வாங்குங்கள்
« Reply #2 on: October 24, 2016, 05:49:34 AM »
ஒரு கதை படித்த மாதிரியே இருக்கு.   சூப்பர்
 வாழ்த்துக்கள்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இரு மலர்கள்..
« Reply #3 on: October 24, 2016, 08:48:51 AM »

பேபி வணக்கம் ....
மீண்டும் அழகானப்  படைப்பை
வழங்கியுளீர் .......அற்புதம் ....
ஒரு கொத்து பூவில் அச்சிறுவனின்
சந்தோசம் வெளிவந்தது .....
அருமை அருமை .....
வாழ்த்துக்கள் அக்கா .....
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் .....


~ !! ரித்திகா !! ~
« Last Edit: October 24, 2016, 09:48:20 AM by ரித்திகா »


Offline AnoTH

Re: இரு மலர்கள்..
« Reply #4 on: October 24, 2016, 09:44:02 AM »
மலர் ஏந்திய மழலையின் உணர்வில்.
கவிதையின் ஆளம் வெளிப்படுகிறது.
ஓர் மனம் மறுத்திட இனொரு மனதின்
தவிப்பை அழகாக உணர்த்திவிட்டீர்கள்.
இறுதியில் ரோஜா பூக்களுடன் வாடிக்கிடந்த 
அந்த மலரும் பூத்துவிடுவது அழகை சேர்க்கிறது.
வாழ்த்துக்கள் என் அன்பிற்கினிய  தமக்கை.



Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: இரு மலர்கள்..
« Reply #5 on: October 24, 2016, 11:32:26 AM »
என் அருமை தோழர் பிரபா ,தோழி  ஸ்வீட்டி, ரீதி  செல்லம், குட்டி ரொம்ப நன்றி .என் மனம் ஆனந்தத்தில் உள்ளது.. என்னை எழுத வைத்தது அந்த சிறுமி.ஏக்கத்தில் ஒரு கனவு. எழுத வேண்டும் எண்ணம் , நன்றி அனைவர்க்கும்.எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Offline இணையத்தமிழன்

Re: இரு மலர்கள்..
« Reply #6 on: October 24, 2016, 12:31:03 PM »
அக்கா அருமையான வரிகள் அக்கா மேலும் உங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Maran

Re: இரு மலர்கள்..
« Reply #7 on: October 24, 2016, 07:38:19 PM »



கவிதை மிக அருமையாக உள்ளது தோழி, சிந்தனை மிக சிறப்பு, வாழ்த்துக்கள் மேலும் மேலும் கவிதைகள் எழுத...




Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: இரு மலர்கள்..
« Reply #8 on: October 24, 2016, 09:04:03 PM »
என் செல்ல தம்பி பிபி , அருமை தோழர் மாறன்..மிக்க நன்றி.உங்கள் உதவியால் தான்..சில நண்பர்கள் சொல்லி தந்த விதம்.இது சரி இல்லை, இன்னும் அழகான படைப்பை வழங்கலாம். முயற்சி செய்.. முடியாதது ஒன்றும் இல்லை, வார்த்தை வரவில்லை.அவர்கள் வேலை பணியிலும் உதவி செய்த என் நட்புக்கு (நண்பர்களுக்கு ) நன்றி. கடைசியா ஒன்று சொல்ல வேண்டும். நான் இன்னும் LKG தான் தோழர்களே..

Offline GuruTN

Re: இரு மலர்கள்..
« Reply #9 on: October 25, 2016, 02:25:16 PM »
ஏழ்மையின் காரணமாக பிஞ்சு ஓவியங்கள் யாவும் வீதி வரை வந்து, அந்த நாள் பொழுது பசி போக்க போராடும்போது ஏற்படும் உணர்வுகளை, நம் மனதில் நாம் உருவகப்படுத்தும்போது, நம் உயிரிலும் ஒருவித வலி ஏற்பட்டு, கண்களை கசிய வைக்கின்றது...

உருக்கம் நிறைந்த ஆழமான கவிதை என் அன்பு தோழி பிளேசிங் மா... அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...
« Last Edit: October 25, 2016, 05:19:12 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0