வணக்கம் தோழர் லியோ அவர்களே ....
எமது கவிதைக்கு தங்களின் கருத்தைப்
பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி ....
தங்களின் கருத்திற்கு(கவிதைக்கு ) எவ்வாறு பதில்
கொடுப்பது என்று தெரியவில்லை ...
இருந்தாலும் முயற்சிக்கிறேன் ....
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் .....
ஜில்லென குளிர வைக்கும்
கடலலைகள் பாதங்களை முத்தமிட ...
குரங்குப்பிடியாய் சுட்டெரிக்கும்
மணலில் நிர்ப்பதேனோ ....
சுட்டெரிக்கும் வெயிலில் ரோஜாவும்
வாடிதான் போகும் .....
அறியாமல் உருண்டு வழிந்திடும்
கண்ணீருக்கும் பதில் சொல்லத்
தெரியாவிடில் ....
காத்திருப்பதும் வீணே....
காதலும் மரணமும் ஒன்றே ....
இரண்டும் அழையா விருந்தாளியே....
அழையா விருந்தாளிக்குக்
காத்திருந்து காலத்தை அழிப்பதேனோ ....
நன்றி லியோ !!!!!
~!!ரித்திகா !!~