Author Topic: ~ !! உன்னில் சிக்கி தொலைகிறேனடி !!~  (Read 1239 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

நான் தேடிய தேடல் நீயடி ....
 தேடலில் என்னை தொலைத்தேனடி .....
 தென்றலென என்னை கடந்து சென்றாயடி...
 விழி மூடி உன்னை யாசித்தேனடி ...
 கண் முன் தோன்றினாயடி ....
 விடியும் பொழுது உந்தன் தரிசனம்
 ஒன்று போதுமடி ....
 எந்தன் பிறவி பயனடைந்ததடி .
 உந்தன் கன்னக்குழி புன்னகையில் ....
 மோட்சம் கொண்டேனடி....
 நான் கண்ட அழகு ஓவியம் நீதானடி ....
 கண்கள் இரண்டை பறித்து சென்றாயடி ....
 நீ பிரம்மன் படைத்த காவியமடி ...
 என்னை கவிஞனாய் மாற்றினாயடி ...
 எந்தன் தேவதை நீதானடி ....
 இப்புவியில் அவதரித்தது யாம் பெற்ற வரமடி ....
 உயிரே ஒரு வார்த்தை பேசடி...
 எந்தன் செவியில் தேன் வழிந்தோடுமடி ....
 உன் ஒரு பார்வை போதுமடி
 விடியும் என் விடியல் அழகாகுமடி ...
 நீ செல்லும் பாதையில்
 உன் நிழலென மாறினேனடி ....
 எந்தன் அருகில் நீ  வேண்டுமடி ...
 எந்தன் மனசில் ஆசைகள் ஆயிரம் ...
 என் தேவதயே அதை உணர்ந்திடடி ...
 உன் புன்னகை ஒன்று போதுமடி
 என் வாழ்வின் தேடல் முடியுமடி ...
 தடைகள் தாண்டி உன்னை நெருங்குவேனடி ...
 கடலிலே மூழ்காமல் உன்னிலே மூழ்குவேனடி ....
 கண்களில் இருந்து  ஒரு சொட்டு
 கண்ணீரும்  சிந்திடவேண்டாமடி  ....
 எந்தன்  இதயம் உடைந்திடுமடி  ...
 உன் இமை அசைவினிலே
 என் இதயம் தொலைத்தேனடி ...
 உந்தன் கரு விழிகளுக்குள் குடியேறிட
 இடம் தேடினேனடி .......
 சிக்கித்  தவித்தேனடி உந்தன் அழகினிலே ...
 என்னை தொலைத்தேனடி
 உந்தன் காந்த பார்வையில் ....
 என்னை சிக்க வைத்து கண்ணாமூச்சி ஆடியதுபோதுமடி...
 உன்னில் சிக்கி தொலையும் என்னை
 சீக்கிரம் கண்டுபிடித்து கொடுத்திடடி   ....!!!!!!!
 

~ !! ரித்திகா !! ~
« Last Edit: September 10, 2016, 11:01:56 AM by ரித்திகா »


Offline Maran




மிக அழகான காதல் கவிதை தோழி ரித்திகா..!  :) வாழ்த்துக்கள்!!  :)


ஒரு ஆணின் மனதில் அவன் பார்வையில் தோன்றும் காதல் மொழியை மிக அழகாக ரசித்து எழுதி விட்டீர்கள்,  தங்கள் கவித் திறமையை படித்து வியந்தேன்!!.  :)

நம் நண்பர்கள் தமிழ் பொதுமன்றத்தின் கவிதாயினி தாமரை (பாடல் ஆசிரியர்) நீங்கள் தான் போங்க..!!  :)

அதுவும் தனித்துவமாக தங்கள் பதிவிட்டு இருப்பது எவரையும் கவரும் வண்ணம் உள்ளது. வாழ்த்துக்கள் தோழி.


(எழுத்துப் பிழைகளை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்)



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

வணக்கம் தோழரே ...!!!


மிக்க நன்றி மாறன் ...!!!
எனது கவிதையைப் படித்து  வியந்ததிற்கு ....!!!!
நான் ஆணாக பிறந்திருந்தால் என்னவளை
எவ்வாறு வர்ணிப்பேன் என்று ஒரு கற்பனையில்
எழுதிய கவிதை இது .....
என்னுடைய  ஒரு சிறு  முயற்சி ....
தங்களின் நேரத்தை ஒதுக்கி ,எமது கவிதையை
வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு
மிக்க நன்றி .....!!!

கண்டிப்பாக எழுத்துப்பிழைகளைத்
திறுத்திக்கொள்கிறேன் ....முயற்சிக்கிறேன் ....

நன்றி ....
நான் தோழி ....
~ !!... ரித்திகா ...!! ~

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முன்னமே சொன்னது போல்
சிந்தை சிறப்பு ! கவித்துவம்  கைக்கொள்ளவேண்டும் !

எழுத்துப்பிழை எக்கச்சக்கம் கொஞ்சம் கவனித்து ஒன்றிற்கு இருமுறை படித்து பின் பதிக்கவும் !!

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

தோழர் மாரனுக்கும் ஆசைஅஜித்துக்கும்
நன்றிகள் கலந்த வணக்கம் .......!!!!

எனது அஜாக்கிரதையாலும் கவனக்குறைவாலும்
ஏற்பட்ட பிழைகள் ....
மீண்டும் வாசித்தேன் ....
பிழைகளை அறிந்தேன் ...
திருத்தினேன் .....
எம் பிழைகளைச் சுட்டிக்காட்டி
திருத்தியமைத்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே...
நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு முறைப்
வாசித்து சரிப்பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன் .....

மீண்டும் மிக்க நன்றி ....
நான் தோழி
 ~ !!... ரித்திகா ...!! ~


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கன்னங்குழி - கன்னக்குழி
மோச்சம்     -  மோட்சம்
எந்த            -  எந்தன்


மற்றபடி சரி ..

அடுத்து சரி செய்யவேண்டியது கவித்துவம்
எதுகை முனைகள் கொண்டு நல்ல உவமை  உவமேயங்கள் புகுத்தி ...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

மிக்க நன்றி தோழரே ....
திருத்தினேன் .....

கவித்துவம் எதுகை முனைகள்
இவற்றைப்பற்றி அவ்வளவாக
அறிந்ததில்லை ....
இப்பொழுதுதான் என் நண்பர்களிடம்
கேட்டு பயில்கிறேன் ....
சீக்கிரம் கற்றுக்கொள்வேன் ....

 நன்றி தோழர் ஆசைஅஜித்
அவர்களே ...பாராட்டியதற்கும் ....
பிழைகளைத் திருத்தியதற்கும் .....



Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மற்றபடி சரி ..

அடுத்து சரி செய்யவேண்டியது கவித்துவம்
எதுகை மோனைகள் கொண்டு நல்ல உவமை , உவமேயங்கள் புகுத்தி ...

Offline LoLiTa

Riti sis super
.

Offline Maran



நல்லது, நன்றி தோழி ரித்திகா  :)

நாம் இன்னும் கத்துக்குட்டிதான், நாம் ஒன்றும் தமிழ் புலவர் ஆசை அஜித் இல்லை..!  :)
 
கீழே விழுந்துதான் நடை பழக முடியும் கருத்துக்களையும், அறிவுரைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். தமிழைக் கொலை செய்யாமல் கவிதை எழுத முயற்சி செய்யுங்கள் அது போதும், ஒரே கவிதையில் வைரமுத்துவும் ஆகிவிட முடியாது.  :)


நிறைய தமிழ் புத்தகங்கள் வாசியுங்கள் தமிழ் வார்த்தைகள் வசப்படும், இலக்கணம் புரியும். எழுத்துப்பிழை, சந்திப்பிழை தெரியும். எதுகை, மோனை, தளை, யாப்பு, அணி வசப்படும்.


எப்பொழுதும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் தோழி  :)



« Last Edit: September 11, 2016, 06:25:47 AM by Maran »