Author Topic: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்  (Read 16881 times)

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #15 on: January 31, 2012, 03:11:00 AM »
படம்: லேசா லேசா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனைவிப்போல் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
(ஏதோ..)

நல்ல மரம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா

குழந்தையும் குமரியின் ராயாச்சா
கொஞ்சிடும் பருவம் போயாச்சா
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
(ஏதோ..)

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
(உன் பாதம்..)

 
 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #16 on: January 31, 2012, 03:11:38 AM »
படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட


 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #17 on: January 31, 2012, 03:12:14 AM »
படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, மஹதி

என் சோனாலி சோ சோனாலி
மை சோனாலி சோ சோனாலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும்..)

சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி
(காதலிக்கும்..)

உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி..
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #18 on: January 31, 2012, 03:13:46 AM »
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், மஹதி


ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல
(ஐயய்யோ..)

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு
காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு
(ஐயய்யோ..)

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் புடிக்கும்முன்னா
இன்று காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்
காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
(துணிச்சல் புடிச்சிருக்கு..)
புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
..
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #19 on: January 31, 2012, 03:14:21 AM »
படம் : லேசா லேசா
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்


அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #20 on: January 31, 2012, 03:14:55 AM »
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், கேகே, ஸ்ரீலேகா பார்த்தசாரதி

ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே (கல்யாணம்தான்..)

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா
(கல்யாணம்தான்..)

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே
ஓ குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்
பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ
மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது
வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா
(கல்யாணம்தான்..)


                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #21 on: January 31, 2012, 03:15:52 AM »
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா


இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)


                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #22 on: January 31, 2012, 03:16:25 AM »
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி


யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன தின்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்களம்
போக போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே
உள் நெஞ்சில் உடைய செய்
(மழை மழை..)
(யார் வந்தது..)

நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
(மழை மழை..)
தீண்டாமல் சருகாவேன் நீ வந்து
தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உலியாக
நீ வந்தால் கலையாவேன்
ஹேய் நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலிகள் ஏன்?
(மழை மழை..)

                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #23 on: January 31, 2012, 03:16:54 AM »
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், மதுமிதா


என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொல்ல வாராயோ
(என்னை பந்தாட..)

செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்னதின்னதென
செயற்கை கோல் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்னதென்ன
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லு
அந்த ப்ரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே சிறு வெயிலே
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே

இனியவனே எனையனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே என்னவனே
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்
(என்னை பந்தாட..)


                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #24 on: January 31, 2012, 03:17:25 AM »
படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ


முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #25 on: January 31, 2012, 03:18:04 AM »
படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், திப்பு

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
(குல்முஹர் மலரே..)

மலரின் தொழிலே உயிரை கொல்லுதல் இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பெயர் மலரே இல்லையடி
அதன் பெயர் மலரே இல்லையடி
(குல்முஹர் மலரே..)
(மலரே மலரே..)

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
(குல்முஹர் மலரே..)

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
(மலரே மலரே..)

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே


 
 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #26 on: January 31, 2012, 03:18:56 AM »
படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா


உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)


 
 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #27 on: January 31, 2012, 03:19:28 AM »
படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்


முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #28 on: January 31, 2012, 03:20:04 AM »
படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: அருண், க்ரீஷ்


ஜூன் போனால் ஜூலை காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!

ஆரைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா!
இந்த பூமிப் பந்து, எங்கள் கூடைப் பந்து!
அந்த வானம் வந்து, கூரை செய்ததின்று!
கறை இருக்கும் நிலவினை சலவை செய்!
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்!
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

இருப்போமா வெளிப்படையாய்?
சிரிப்போமா மனதுடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே!
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்,
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்,
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே
!


 
 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #29 on: January 31, 2012, 03:21:06 AM »
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: முன்தினம் பார்த்தேனே
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்


ஹாய் மாலினி
அ யாம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகா இருக்க
இங்கே எவனும் இவ்வளவு அழகா ஒரு…ஹா
இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…

கோலார் தட்டில் உன்னை வைத்து
நிழல் செய்ய பொன்னை வைத்தால்
கோலாரும் தோற்க்காதா பேரழகே…
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ….
வருகிறேன்….

ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி….
விரலால் ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக….
உள்ளமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…

கடல் நீளம் அங்கு சேரும்
அலை வந்து தீண்டும் துரம்
மனம் சென்று பார்க்காதோ… ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்க்கப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்…. துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே….
உயிர் இரண்டும் உறையக்கண்டேன் நெருங்காமலே…
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே….

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே….
இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

வெண்ணிலா….

வெண்ணிலா….