Author Topic: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்  (Read 16867 times)

Offline Global Angel

ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« on: January 31, 2012, 02:22:42 AM »
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுருதி ஹாஸன், பென்னி டயால், கிரீஷ்
வரிகள்: தாமரை


அடியே கொல்லுதே!
அழகோ அள்ளுதே!
உலகம் சுருங்குதே!
இருவரில் அடங்குதே!

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே!

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே!
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ?

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ!

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே!
பொன் நேரம் வந்ததே!

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே!
என் மீது பாய்ந்ததே!

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே!
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி!
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே!

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே!

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே!

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே!

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே!
(அடியே..)
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #1 on: January 31, 2012, 02:25:22 AM »
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை


அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)


                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #2 on: January 31, 2012, 02:25:54 AM »
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்


நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கவர்கின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னைப் பிரிய மாட்டேன்
துளி தூரம் நகரமாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே..

ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் கொன்றாய் கொன்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
(நீ இன்றி..)

விரலோடு விழியும் வாடும்
விரகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
(ஓ ஷாந்தி..)


                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #3 on: January 31, 2012, 02:36:56 AM »
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி




பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே
ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

சரணம் 1
‍========
பெ: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆ: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெ: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆ: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா

பெ: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

சரணம் 2
========
ஆ: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெ: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆ: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெ: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆ: வாராயோ வாராயோ மோனாலிசா
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #4 on: January 31, 2012, 02:49:06 AM »
படம்: கோ
பாடல்: என்னமோ ஏதோ
இசை: ஹரிஸ் ஜெயராஜ்

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையிது விழியில்
அன்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

என்னமோ ஏதோ
சிக்கி தவிக்கிது மனதில்
இறக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..
முத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அஞ்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமாய்
யாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..

lets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ
your looking so black

மறக்க முடியலையே என் மனம் அன்று
உம்மனம் so lovley இப்படியே இப்ப
உன்னருகில் நானும் வந்து சேரவா இன்று

Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா
Lady looking like a Cinderella Cinderella naughty லுக்கு விட்ட தென்றல்லா
Lady looking like a Cinderella Cinderella என்னை வட்டமிடும் வெண்ணில்லா

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
காண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்

என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி ஏறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை

ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #5 on: January 31, 2012, 02:53:01 AM »
படம்: கோ
பாடல்: கள கள காலா கேங்கு
இசை: ஹரிஸ் ஜெயராஜ்


கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூகல்தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு..
போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

நதிகளும் தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்

வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லை சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்..

கள கள.. காது வந்து கிட்ஸ்..
பல பல.. Yeah Bala Bala..
கள கள.. Drop You Say..
பல பல.. Boombastha..
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #6 on: January 31, 2012, 02:53:29 AM »
படம்: கோ
பாடல்: வெண்பனியே முன்பனியே
இசை:ஹரிஸ் ஜெயராஜ்


வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னலே தேய்கிரதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

ஒரு எமை குளிர, ஒரு எமை வேளிர
உன்னகுலே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்..
ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்..

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

Everything Is Chilled Now..
All Is Gonna Be Alright..
Oh I’ll Be There, I’ll Be There For You..
Everything Is Chilled Now..
Frozen In Love..
Lets Warm And Close Around Now..

இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுல்லே என்னகுல்லே

எவ்வணம் அதில் இவளொரு செவானம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்..

 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #7 on: January 31, 2012, 02:57:28 AM »
படம்: எங்கேயும் காதல்
பாடல்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா


ஆண்:
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

பெண்:

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி

வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன்

ஆண்:
உருகாதே உயிரே விலகாதே மனதே

பெண்:

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும்

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய்
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே

பெண் :
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க

ஆண் :

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வானம் வேலை காட்டுதோ
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

பெண்:

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #8 on: January 31, 2012, 02:59:22 AM »
படம்: எங்கேயும் காதல்
பாடல்:தீ இல்லை, புகை இல்லை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : பிரபு தேவா


ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

விலையை தந்தேனே என்னை

வாங்கிகொண்டேனே உன்னை

ஆடை கொண்டதோ தென்னை

பெண்:
வெகுநாளாய் கேட்டேன் விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்து உன்னாலே

விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே

விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோத காதல் ஆகாத

ஆண்:

ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

புனல் மேலே வீற்று பனிவாடை கற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு

பெண்:
கடற்கரை நாரைகூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து

சிலு சிலுவென்று குளிரெடுக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க

எதிர்கால வாழ்வே நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒழிப்பாயா

ஆண்:
தீ இல்லை, புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடல் இல்லை
புது தேனை சொரிகிறாய் மனதிலே

என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்

முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #9 on: January 31, 2012, 03:00:52 AM »
படம்: எங்கேயும் காதல்
பாடல்: எங்கேயும் காதல் .. விழிகளில்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை


எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #10 on: January 31, 2012, 03:03:38 AM »
படம்: எங்கேயும் காதல்
பாடல்: லோலிதா ஹா லோலிதா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பிரஷாந்தினி
வரிகள்: தாமரை


லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
(பொன்மஞ்சள்..)
(லோலிதா..)

கொட்டும் போதே மழை குட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை குள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில்கூட பல வென்னிலா

மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே
(லோலிதா..)

தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே
ஓ (லோலிதா..)
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #11 on: January 31, 2012, 03:04:13 AM »
படம்: எங்கேயும் காதல்
பாடல்:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

(நெஞ்சில்..)

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

(நெஞ்சில்..)

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

(நெஞ்சில்..)

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

(நெஞ்சில்..)
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #12 on: January 31, 2012, 03:06:28 AM »
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்

ஏஹே ஆஹா…
லாலா… லாலா….

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…

ஆஹா…..ஓஹோ..ஹோ…
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ஆஹா ஹ ஹா ஹா
ச ச ச ச ச ச….

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ… கோபம் இல்லா
நீ நின்ற இடமெல்லாம்
விலையேறிப் போகாதோ
நீ சிந்தும் வழியெல்லாம்
பனிக்கட்டியாகாதோ
என்னோடு வா
வீடுவரைக்கும்
என் வீட்டைப்பார்
என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சு போகாதே
போகாதே தே…தே… தே…

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
ஓஹோ….ஹோ
நில்லாம் வீசிடும் பேரலை…
ஹோ… ஹோ….
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
ஆஹா…..

துக்கங்களை தூக்கிச் சென்றாய்
தூக்கிச் சென்றாய்…
ஏக்கங்களைத் தூவிச் சென்றாய்
உன்னைத்தாண்டி போகும் போது
போகும் போது…..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று என் காலும்
என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் என்னைக்கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத்தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே…. உன் மேல் பிழை…
நில்லாம் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை…
பொன்வண்ணம் சூடிய காரிகை….
பெண்ணே நீ காஞ்சனை….

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
ஓஹோ ஹோ…
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி…..
அந்தாதி…

ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆ ஆஹா ஹா
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
ஊ ஊ ஊஹூ
சா……….
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #13 on: January 31, 2012, 03:08:57 AM »
படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: மச்சி மச்சி மொரைச்சிட்டான்டா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்

மச்சி மச்சி
மொரைச்சிட்டான்டா
மடக்கி மடக்கி
அடிச்சிட்டான்டா
அண்ணாநகரு
டவரு நீடா
மல்லுக்கட்டி அடிடா
செக்கைப்போடு
போட்டுட்டான்டா
சைக்கிள் கேப்பில்
கவுத்துட்டான்டா
பார்ட்டி இப்போ
உனக்குத்தான்டா
டொம்முனு கட்டிப்புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

பங்க் அடிச்சு தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன் ரைசைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
போடு….
லைட் ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாத்தான் நெருப்பு…
பட்டாத்தான் பொறுப்பு….

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

ஹா ஹா ஹ ஹா ஹா ஹா….

தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட போல ஏத்தி அம்சமா போவோம்…
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸன்டாவோம்…
இரவுண்டுக்கட்டி கெலப்புங்கடா
இரத்தம் சூடாக இருக்கு..
பவருக்கட்டி நொறுக்குங்கடா
பறக்க இறக்கைகள் எதுக்கு…
காத்தாடிப் போல…
போவோண்டா மேலே

ஏத்தி ஏத்தி ஏத்தி..
ப பா பா ப பா ப பா
மாத்தி மாத்தி மாத்தி …
ப பா பா ப பா ப பா

சூது வாது தெரியாது…
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது…
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

 
 
                    

Offline Global Angel

Re: ஹரீஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்
« Reply #14 on: January 31, 2012, 03:10:23 AM »
படம்: பீமா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுநாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
(சிறு பார்வையாலே..)

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகனவே
மறைக்கும் முகிலிடையே ஸ்ரீக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொருங்கி உடைகிறதே

உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னை தேடி வந்தாய் பாராட்ட
(சிறு பார்வையாலே..)

சிலிர்க்கும் ச்டிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதல் சுவையே
விழுந்தேன் இரவினிலே எழுந்தேண் கனவினிலே
கனவ்ல் நீ இருந்தால் மறந்தேன் வெளி வரவே

ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
(சிறு பார்வையாலே..)