இலை
இரண்டு இட்லி
கொஞ்சம் சட்னி
சுட சுட சோறு
கொதிக்க கொதிக்க குழம்பு
மழைச்சாரலாய் நெய்
மனம் மணக்க மீன் வறுவல்
நாக்கு ஊற நண்டு பொரியல்
காரமாய் கோழி குருமா
அள்ள அள்ள ஆட்டுக்கறி
இவை அனைத்தும் இலவசமாய்
சாப்பிட்டு விட்டு வந்தேன்
ஒரு சேவை வரி மட்டும் ஆர்டர் செய்து