Author Topic: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)  (Read 28974 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #60 on: January 28, 2012, 11:42:24 PM »
60.கொட்டும் மழையில் மக்கள் திலகம்


மக்கள் திலகம் அவர்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்களுடைய குறையைக் கேட்கிறார். 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் இது. மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அதிகமாக உள்ளது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது சமயம் வெள்ளம் இந்த ஊருக்குள் புகுந்து விடும் இது வழக்கம். மக்கள் திலகம் அவர்கள் முதல் அமைச்சரான பிறகு, இப்படி மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இது ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் உடனடியாக அந்த இடத்திற்கு சில முக்கிய அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வை இட்டார். அது சமயம் மழை பெய்து கொண்டே இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தது மட்டுமல்லாமல், இனிமேல் இப்படி இந்த ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புச்சுவர் கட்டும்படி உத்தரவு இட்டார். காலதாமதம் செய்யாமல் தடுப்புச் சுவரும் விரைவாக கட்டப்பட்டது. அந்தப் பகுதியல் வசிக்கும் மக்களுக்கு இந்த வெள்ளப் பெருக்கு பற்றிய கவலை அறவே ஒழிந்தது. இப்படிப் பட்ட வள்ளல் வசிக்கும் ராமாபுரம் தோட்டம் வீட்டுக்குள்ளும் இதே ஆற்று வெள்ளம் புகுந்தது வெள்ளத்தின் சீற்றத்திற்கு இவர் யார், அவர் யார் என்று பாகுபாடு கிடையாது. 1985ல் மக்கள் திலகம் அவர்கள் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆன பிறகு, அந்த வருடம் மழை தமிழ்நாட்டில் மிக அதிகமாக பெய்தது. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஒரு வாரமாக ஓயாத பெரும் அளவில் மழைபெய்தது. அது சமயம் எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஆறு அது எம்.ஜி.ஆர். தோட்டத்தை ஒட்டியவாறு செல்கின்றது. இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு கண்மூடித் தனமாக சென்று இரவு நேரத்தில் மக்கள் திலகம் வசிக்கும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்து, அது மேலும் அதிகமாகி வெள்ளம் வீட்டிற்குள்ளேயும் புகுந்துவிட்டது. தோட்டத்தில் உள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் நிலைமை என்ன ஆகி இருக்கும்.
 
மக்கள் திலகம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்த்து உடல் நலம் பெற்று, சென்னைக்கு வந்து மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, இனிமேல் முன்போல் நீங்கள் ரொம்பவும் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடாது இப்படி சில விஷயங்களை சொல்லி உள்ளார்கள் டாக்டர்கள் அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்கள் முன்போலவே அரசுப் பணிகளையும், அரசியலையும் கவனிக்க தவறவில்லை. தனக்கு ஒரு தலைவலி, காய்ச்சல் கூட வரக்கூடாது என்று நினைக்கும் வள்ளலுக்கு, அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கும் அளவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அவர் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார். ஆனால், அவருடைய வாழ்க்கையில் இம்மாதிரி வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து பழகிப் போனவர். ஒரு உதாரணம் இவருடைய தந்தை கோபாலன் அவர்கள் இறந்து போனவர் இவருக்கு முன்னால் பிறந்த இரு சகோதரிகளும், ஒரு சகோதரரும் நோயால் இறந்து போனவர்கள். பிறகு, தான் ஒரு சினிமா நடிகர் ஆனதும், அது சமயம் இவருக்குத் திருமணம் ஆகி, அந்த மனைவி ஒரு வருடத்திலேயே இறந்து போனதும், அடுத்து தன்னுடைய இரண்டாவது மனைவி, சில வருடங்களில் உடல் நலமில்லாமல் இறந்து போதும், இதைவிட தன்னை தங்கமகனே! நீ இந்தத் தரணியில் நீ ஒரு தனி மனிதனாக புகழோடு வாழவேண்டும் என்று தன்னுடைய தாய் அடிக்கடி சொல்வார். அந்தத் தாயும் சிலமாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். பிறகு தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் தனக்கு உறுதுணையாக இருந்து, தன்னுடன் பிறந்த அண்ணனும் இறந்து போனார். இப்படி இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருக்கும் இதயத்திற்கு தன் வீட்டுக்கு தண்ணீர் புகுந்து விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாரே தவிர, கவலைப்படவில்லை. வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த விஷயத்தை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், மேலே இருந்து உடனே கீழே வந்து விட்டார். அது சமயம், கீழே வீடு முழுவதும் ஒரு அடி தண்ணீர் நின்றது. உடனே வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு, வெளியே தோட்டத்தில் தண்ணீர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
 
தன்னுடைய பாதுகாப்பாளர் (போலீஸ்) அவரை அழைத்து வேலை ஆட்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் கூப்பிடுங்கள். இரவில் அவர்களுடைய வீட்டுக்குப் போகாமல், தோட்டத்திலேயே தங்குபவர்கள் ஏழு பேர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் மேலே போய் இருக்கச் சொல்லுங்கள். நீங்களும் மேலே போய் இருந்து கொள்ளுங்கள். ஆடு, மாடுகள் எல்லாம் என்ன ஆச்சு? இப்படி தண்ணீருக்குள் நின்று, தன்னுடைய தோட்டத்திற்கு 1962-ல் குடிவந்த பிறகு, அதாவது 1985 நவம்பர் மாதம் 25 வருடம் ஆகிவிட்டது. இப்படி ஒரு வெள்ளம் தோட்டத்திற்குள் புகுந்தது இல்லை இதுவும் ஒரு சோதனையா என்று பெருமூச்சு விட்டார் இதைபிறகு மற்றவர்களிடமும் சொன்னார். அடுத்தநாள் தோட்டத்திற்குள் புகுந்த தண்ணீர் குறைந்த பாடில்லை. மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மக்கள் திலகம் அவர்களை, உடனே தோட்டத்தில் இருந்து சென்னை நகருக்குள் ஒரு நல்ல ஒட்டலில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் முடிவு எடுத்து, மக்கள் திலகம் அவர்களை தோட்டத்தில் இருந்து அழைத்து வரலாம் என்றால் அவருடைய கார்கள் அனைத்தும் தண்ணீருக்குள் நிற்கிறது. அதனால் அரசாங்கக் காரில் புறப்பட்டார் ஜானகி அம்மாளுடன், மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்க வைத்தார்கள். பிறகு, அங்கிருந்து கொண்டே கோட்டைக்குச் சென்று, வெள்ளநிவாரணப் பணிகளை கவனித்தார். சென்னையில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடிசை வீடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் மிக மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது. ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் புகுந்த வெள்ளம் வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகியது. தோட்டத்திற்குள் இருந்த ஆடு, மாடு, கோழிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல் அனைத்தும் காப்பாற்றப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது.
 
தோட்டதிற்குள் புகுந்த தண்ணீர் வெளியேறிய பிறகு, வீட்டுக்குள் புகுந்த சில பாம்புகளை அடித்துவிட்டு, வீட்டைக் கழுவி, சுத்தம் செய்ய மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு வாரம் ஓட்டலில் தங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு முதல்-அமைச்சருக்கே இந்த கதி என்றால் தமிழ் நாட்டின் ஏழை மக்களுடைய நிலைமை எப்படி இருந்து இருக்கும். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் இதுவும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். மழையில் நனைந்து கொண்டு, மக்கள் குறைகளை கேட்டு அறிந்து, அவர்களுக்கெல்லாம் நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடு செய்த, அந்த முதல்வருடைய வீட்டுக்குள் பெரும் வெள்ளம் புகுந்து, அவர் வெளியே வரமுடியாமல் இருந்ததை என்னவென்று சொல்வது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #61 on: January 28, 2012, 11:43:16 PM »
61.தங்கத்தம்பியை காணத்தவித்த அண்ணன்


இதைவிட ஒரு முக்கியமான விஷயம் அது என்னவென்றால்! தம்பியை காண தவித்த அண்ணன். 1985-ல் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் மழைவெள்ளம் புகுந்துவிட்டது என்ற செய்தியை அறிந்த பெரியவர் சக்கரபாணி அவர்கள், சென்னை ராயப்பேட்டை என்ற இடத்தில் இருந்து சுமார் ஏழு மைல் கடந்து வரவேண்டும். அது ஒரு முக்கிய விஷயம் அல்ல எப்படி எந்தப் பக்கம் சுற்றி வந்தாலும், எம்.ஜி.ஆர். தோட்டத்திற்குள் நுழைய முடியாமல் இருந்தது. தோட்டத்திற்குள் 3 அடி தண்ணீர் அதாவது ஏறக்குறைய இடுப்பு அளவு தண்ணீர் உள்ளது. அண்ணன் வர துடிக்கிறார் என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள், உடனே அண்ணன் எம்.ஜி.சி அவர்களுக்கு இங்கு வரவேண்டாம் நானே நாளை வந்து அண்ணனை அங்கு பார்க்கிறேன் என்று சொல்லுங்கள் என்று தகவல் அனுப்பினார். அந்த சமயம், தொலைபேசி, மின்சாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இது ஒரு முக்கிய விஷயம் இதனால்தான் மக்கள் திலகம் அவர்கள் ராமாபுரம், தோட்டத்தில், ராமாபுரம் தோட்டமா! ராமருடைய தோட்டமா, இங்கு இருந்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் போய் தங்குவதற்கு சம்மதித்தார். இந்த சமயம் தன்னுடன் பிறந்த பாசப் பிறவியான அண்ணன் எம்.ஜி.சி. அவர்கள் சற்று உடல்நலக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். ஓட்டலில் தங்கி இருந்த மக்கள் திலகம் அவர்கள் ஜானகி அம்மாளுடன் சென்று தன் அண்ணனை அவருடைய இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.
 
பெரியவர் சின்னவர்
 
இதில் அன்புள்ளம் கொண்ட அண்ணன் தம்பி இதில் வல்லவனுக்கு வல்லவன் அஞ்சா நெஞ்சுடையவன் அவனுக்கு இப்படி ஒரு உடல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் கவலைப்பட்டு கொண்டு இருந்த பெரியவர் எம்.ஜி.சி. அவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 1986 ஆகஸ்டு மாதம் மறைந்துவிட்டார். தன் அன்பு அண்ணன் இறந்ததை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் உடனே ராயப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தன் அண்ணனின் கன்னத்தை தடவிக் கொண்டு கண்ணீர் விட்ட காட்சி அது சமயம் அந்த இடத்தில் நின்று கொண்டு இருந்த அத்தனை பேர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. தாய் மறைவுக்குப் பிறகு எனக்கு தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்கு தாயாகவும் எனக்கு அறிவுரைகளை சொல்லிக் கொண்டு எனக்கு ஆதரவாகவும் இருந்த, அண்ணன் என்னைவிட்டு சென்றுவிட்டாரே என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். அன்று அண்ணனுடைய உடல் அடக்கம் செய்யும் வரை அண்ணனின் உடல் அருகிலேயே எதுவும் சாப்பிடமால் இருந்தார். தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இறந்தபோன செய்தியை அறிந்த சினிமாதுறையினரும், அரசியல் துறையினரும், பொது மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து மரியாதை செய்து அனுதாபத்தை தெரிவித்து சென்றார்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்ட மக்கள் திலகம் அவர்கள் அன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இது வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவம்.
 
குறிப்பு :
 
எல்லா அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் சினிமா ஸ்டூடியோ மற்றும் பிரமுகர்கள் அனுதாபத்தை தெரிவித்து மக்கள் திலகம் அவர்களுக்கு ஆறுதலையும் சொல்லிக் சென்றார்கள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #62 on: January 28, 2012, 11:44:04 PM »
62.மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமியக் கலைகள் மிகவும் பிடிக்கும்

பொதுவாகவே மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமிய கலைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை மிகவும் பிடிக்கும். இதில் குறிப்பாக சிலம்பாட்டம் இதை அவரே பிரமாதமாக ஆடுவார். இதே போல், கர்நாடக சங்கீதத்தில் இசைக்கச்சேரி வகையில் நாதஸ்வரம், வயலின், வாத்தியம் போன்றவைகள் ஆகும். மாண்டலின் இசை கருவியை பத்து வயது பையன் பெயர் மாஸ்டர் சீனிவாசன் ரொம்பவும் பிரமாதமாக வாசிப்பான் இவனுடைய கச்சேரி சபா மேடைகளில் நடந்தது. இப்படி ஒரு சிறுவன் டி.வி.யிலும் மாண்டலின் வாசிக்கிறான் கச்சேரிகளும் செய்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், 1983ல் சென்னையில் கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்தப் பையனுடைய கச்சேரி நடந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் அந்தக் கச்சேரியைப் பார்த்து ரசித்தார். சுமார் 1 மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்தவுடன் மேடைக்கு வந்து பையனை தட்டிக் கொடுத்து பாராட்டி வாழ்த்திப் பேசிவிட்டு தன்னுடைய ஜிப்பாவின்பையில்வைத்திருந்த 4 பவுன் எடை உள்ள தங்க மைனர் செயினை (சங்கிலி) அவனுடைய கழுத்தில் போட்டு சென்றார்.
 
இதேபோல் 1976ல் ஒரு முக்கியஸ்தர் குடும்பத் திருமணத்திற்கு மாலை வரவேற்பு விழாவிற்காக 7 மணிக்கு சென்னையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு ஏ.வி. ரமணன் மெல்லிசை பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கச்சேரியில் ஏ.வி. ரமணன் என்பவர் பாடிக்கொண்டு இருந்தார். திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள மக்கள் திலகம் அவர்கள் மணமக்களைப் பார்த்து ஆசிர்வாதம் செய்து, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டு கச்சேரி நடக்கும் மேடைக்கு அருகில் போய் அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து பலவிதமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இருக்கும் ரமணன் அவர்கள் மேடையை விட்டு இறங்கி வந்து கலைத்துறை அரசரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எதுவுமே பேசாமல் மேடைக்கு சென்று பாடத் தொடங்கிவிட்டார். இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்ந்து பாடிக்கொண்டு இருக்கையில், அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்த கலை அரசருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
 
இதை கவனித்த பாடகர் ரமணன் அவர்கள் பாடுவதை நிறுத்தினார். உடனே மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய, வாட்சில் நேரத்தைப் பார்க்கிறார் நேரம் 8.45 ஆக இருந்தது ஆச்சர்யத்துடன் பின்னாடி திரும்பிப் பார்த்தார் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள் மண்டபம் நிறைந்து இருந்தது. இந்தத் திருமண விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து பாட்டுக் கச்சேரியைக் கேட்டு கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் சாப்பாட்டு ஹாலுக்கும் செல்லாமல் திரும்பி வீட்டுக்குப் போகாமல் வந்தவர்கள் எல்லாம் அமர்ந்து விட்டார்கள். பிறகு, மக்கள் திலகம் பாட்டுக்களைப் பாடிய ரமணனையும், இசை வாத்தியங்கள் வாசித்தவர்களையும் பாராட்டிப் பேசிவிட்டு, ரமணன் அவர்களுக்கு, தன் கையிலே கட்டியிருந்த விலையுயர்ந்த வாட்சை கழற்றி ரமணன் கையிலே அவரே கட்டி வாழ்த்திச் சென்றார் என்பது மிக ஆச்சர்யத்திற்குள்ள விஷயமாக இருந்தது எல்லோருக்கும்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #63 on: January 28, 2012, 11:45:10 PM »
63.எம்.ஜி.ஆர். பித்தன் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுடைய ரசிகர் ஆரம்பகாலத்தில் இருந்தே இவர் ஒரு தீவிர ரசிகராக இருந்தவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் பார்த்து பேச பல வருடங்கள் முயற்சித்துள்ளார். மக்கள் திலகம் நடித்த படங்களை பார்க்க தவறுவதில்லை. இப்படி இருந்த இவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று இவரும் ஒரு பிரபல நடிகராகிவிட்டார். பிறகு, என்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை ஈசியாக பார்த்து விடலாமே என்று நினைக்கும் போது, அவர் தமிழக முதலமைச்சராகிவிட்டார். இருந்தாலும் சத்யராஜ் அவர்களுடைய முயற்சியை விடவில்லை. இவருடைய நண்பர்களிடம் இதற்கு வழியை கேட்டு கொண்டே இருந்தார். பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருந்த இவருக்கு ஒரு வழி கிடைத்தது. அதாவது சத்யராஜ் அவர்களுடைய தங்கைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிகை அடித்து கோயம்புத்தூரில் உறவினர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் சினிமா துறையில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க பத்திரிகை வந்து விட்டது. இது 1987 மே மாதம் கடைசியில் தன் தங்கையின் திருமண பத்திரிகையை முதல்வரிடம் நேரில் தானும் தன் மனைவியும் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு சென்று கொடுத்து அவரிடம் பேசி வணங்கி வாழ்த்தும் பெற்று வரனும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தார் அதற்கான பலன் இரண்டே நாளில் கிடைத்துவிட்டது. ஒரு நாள் காலை 9 மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு திருமண பத்திரிகையுடன் தன் மனைவியையும் அழைத்து கொண்டு போனார். தோட்டத்திற்குள் போக தடை ஒன்றும் இல்லை. வீட்டு வராண்டாவில் அரசாங்க அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இருப்பார்கள். அவர்கள் சத்யராஜ் மனைவியுடன் வந்து இருப்பதை மேலே உள்ள இன்டர்காம் வழியாக மக்கள் திலகம் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு, மக்கள் திலகம் ஜானகி அம்மாளுடன் 15ந்து நிமிடத்தில் கீழே வந்து விட்டார். இந்த இருவரையும் பார்த்த அந்த இருவரும் நாம் யாரை பார்க்கிறோம் என்பது போல், பிரமித்து நிற்கிறார்கள். முதல்வரும், ஜானகி அம்மையாரும் அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் அமர சொல்கிறார். சத்யராஜ் அவர்களுக்கு சற்று நேரம் ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. பிறகு, தன் தங்கைகளுடைய திருமண பத்திரிகையை கொடுக்கிறார். அதை வாங்கி உடனே படிக்கிறார். முதல்வர் பத்திரிகையில் எந்த பிரமுகர் பெயரும் இல்லை மிக எளிமையான குடும்பப் பத்திரிகையாக இருந்தது. சற்று நேரம் மக்கள் திலகம் அவர்கள் எதையோ யோசித்து கொண்டு இருந்தார்.
 
சத்யராஜ் இப்போ ஒரு பெரிய நடிகர் மக்களுக்கெல்லாம் மிகவும் அறிந்தவர் நல்ல நடிகர் இவர். எந்த வித விளம்பரமும் இல்லாமல் தன்னுடைய தங்கைகளுடைய திருமணத்தை நடத்துகிறாரே இந்த திருமணத்திற்கு நாம் எப்படியும் போகவேண்டும் என்ற யோசனைதான் அது. பிறகு, சத்யராஜ் அவர்களை பார்த்து நானும் ஜானுவும் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என்றார் உடனே சத்யராஜ் அண்ணே நீங்கள் இந்த திருமணத்திற்கு வரவேண்டாம். இந்த பத்திரிகையில் உங்கள் பெயரை போடவில்லை. மேலும் காலை 4 மணிக்கு திருமணம் தயவு செய்து வரவேண்டாம்.
 
உங்களுடைய வாழ்த்துச் செய்தி மட்டும் கிடைத்ததால் போதும், அண்ணே உங்களை எப்படியாவது நேரில் பார்க்கனும் உங்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசனும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறனும் என்ற ஆசையோடு தான் வந்தேன். நீங்கள் இந்த நாட்டின் முதல்-அமைச்சர் நீங்கள் தயவு செய்து வர வேண்டாம்.
 
உங்களுடைய வாழ்த்து செய்தியே போதும் நீங்கள் நேரில் வந்த மாதிரிதான் என்னை மன்னிக்கனும் என்று சொல்லி முடித்தவுடனே மக்கள் திலகம் அவர்கள் சத்யராஜ் அவர்களுடைய தோள் பட்டையை தட்டிக்கொண்டே நான் வருவேன் என்று சொல்லி கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார். பிறகு, அந்த பத்திரிகையை தன்னுடைய அரசு உதவியாளரிடம் கொடுத்து நாங்கள் இந்த திருமணத்திற்கு போகனும் மறக்காமல் ஞாபகப்படுத்துங்கள் முதல் நாளே போகனும் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்யுங்கள் இந்த விசயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிய மக்கள் திலகம் அவர்கள் பிறகு, காண வந்து இருந்த மற்றவர்களை எல்லாம் அழைத்து பேசினார். சத்யராஜ் அவர்களுடைய தங்கைகள் திருமண விழாவிற்கு முதல்நாளே தன் மனைவி ஜானகி அம்மாளுடன் கோயம்புத்தூர் புறப்படுகிறார். கூடபேச்சு துணைக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி அவர்களையும் அழைத்துச் செல்கிறார்.
 
இந்த விசயத்தை உடனடியாக முதல்வருடைய தனி செகரட்ரி கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கிறார். இந்த தகவலை கேட்ட கலெக்டர் உடனே சத்யராஜ் வீட்டுக்கு சென்று முதல்வர் கோவைக்கு புறப்பட்டுவிட்டார். உடனே, ஏர்போர்ட்டிற்கு போகனும் நீங்களும் ஏர்போர்ட்டிற்கு வருவதுதான் நல்லது என்று சற்று கோபமாக பேசிவிட்டு, கலெக்டர் அவர்கள் முதல் அமைச்சரை வரவேற்க ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார். கலெக்டர் கோபமாக ஏன் சத்யராஜிடம் பேசினார். முதல்வர் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வருகிறார் என்பதை ஏன் எனக்கு முன்னதாக தெரிவிக்கவில்லை என்றதற்காகத்தான். இதை அறிந்த சத்யராஜ் அவர்களும் உடனே ஏர்போர்ட்டுக்கு கிளம்பி சென்று மிக மிக ஆச்சர்யத்தோடு ஏர்போர்ட்டில் பிளைட்டில் இருந்து மாலை சுமார் 6 மணிக்கு தங்கத் தலைவன் மின்னும் ஒளியோடு தன் மனைவியோடு இறங்கும் காட்சியை சத்யராஜும் மற்றவர்களும் பார்க்கிறார்கள். மக்கள்திலகம் மைதானத்திற்கு வந்தவுடனே, சத்யராஜ் ஓடோ டி வந்து ராமருடைய பாதங்கள் தொட்டதுபோல் இந்த ராமச்சந்திரனுடைய பாதங்களை தொட்டு வணங்கி வரவேற்றார். பிறகு, விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ள விடுதிக்கு செல்ல காரில் ஏறும் போது அருகில் நின்று கொண்டிருந்த சத்யராஜை தன் காரிலே ஏற்றிக்கொண்டு உடன் வந்த அமைச்சர் முத்துசாமியும் அதே காரில் செல்கிறார்கள்.
 
அடுத்த நாள் காலையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டே செல்கிறார்கள். இதன்படி அடுத்த நாள் காலை 4 மணிக்கு நடைபெறும் திருமணத்திற்கு முதல்வர் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் செல்கிறார். திருமண மண்டபத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் முதல்வர் வந்ததை அறிந்து எல்லோரும் சென்று வரவேற்கிறார்கள். தமிழக முதல்வரான மக்கள் திலகம் அவர்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று வந்து இருக்கிறாரே என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். இந்த விசயம் அப்போதைக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண மேடையில் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி செல்கிறார். இந்த சம்பவத்தை நினைத்து சத்யராஜூம் அவரது குடும்பமும் “தெய்வமே” நேரில் வந்து வாழ்த்தி சென்றது போல, நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
 
மக்கள் திலகம் அவர்கள் திருமண மண்டபத்தில் ஒரு மணி நேரம் அதற்கு மேல் இருக்கிறார்கள். மேடையில் ஐயர்கள் பூஜை அதாவது மாங்கல்ய பூஜை நடக்கும். இதற்கிடையில் இந்தத் திருமணத்திற்கு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து இருக்கிறார். மேடைக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தியை திருமணத்திற்கு வருகிறவர்கள் அறிந்ததும், உடனே முதல்வர் இருக்கும் இடத்திற்கு வந்து, அவரைப் பார்த்து வணங்கிச் செல்பவர்களும், அவருக்கு அருகிலேயே அமருபவர்களும் உண்டு. இப்படி இருக்கும் நேரத்தில் சிவாஜி, சிவகுமார் ஆகியோர் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மக்கள் திலகம் திருமணத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மக்கள் திலகம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நடிகர் திலகமும், சிவகுமாரும் வந்து நடிகர் திலகம் மக்கள் திலகத்தை கட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொண்ட காட்சியை கண்டவர்கள் மனமகிழ்ந்தார்கள். சிவாஜிக்கும், சிவகுமாருக்கும் முதல்வர் அருகிலேயே சேர்கள் போடப்பட்டது. மக்கள் திலகம், ஜானகி அம்மாள், சிவாஜி, சிவகுமார் இவர்கள் மேடைக்கு அருகில் வரிசையாக அமர்ந்து இருக்கும் அழகான காட்சியை பார்த்து பார்த்து ரசித்து அளவற்ற அளவிற்கு ஆனந்தப்பட்டார்கள். சத்யராஜ் அவர்களும், அவரது குடும்பமும் இதற்கு இடையில், திருமண மேடைக்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த நாதஸ்வரத்தையும், மேளத்தையும் கவனிக்கத் தவறதில்லை. மக்கள் திலகம் அவர்களுக்கு மேளக்கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு ஏற்ற மாதிரி அவர்களும் நல்ல நயத்துடன் வாசித்தார்கள். காலை 5 1/2 மணிக்கெல்லாம் திருமணம் முடிந்தது. மக்கள் திலகம் அவர்களும், ஜானகி அம்மாவும் இவர்கள் தங்கி இருக்கும் அரசு மாளிகைக்கு சென்றார்கள். அன்று கோவையிலேயே தங்கி இருந்து அடுத்த நாள் நடக்கும் சத்யராஜுடைய மற்றொரு தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னைக்கு புறப்படும் போது, சத்யராஜ் அவர்களும் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப வந்தார். வந்தவர் விமானம் நிற்கும் இடம் வரை வந்து, முதல்வர் படிக்கட்டில் ஏறி, விமானத்தில் நுழையும் வரை படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்த சத்யராஜைப் பார்த்து கை அசைத்து வாழ்த்தினார் மக்கள் திலகம் இதில் ஒரு முக்கிய விஷயம் விமானப் பயணிகளைத் தவிர வேறு யாரும் விமானம் வரை போகக்கூடாது இது விமான நிலைய சட்டம். இதை மீறி சத்யராஜ் விமானம் வரை அருகே சென்று மக்கள் திலகம் அவர்களை வழிஅனுப்பியது மக்கள் திலகம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. இதில் மற்றொரு விஷயம் சத்யராஜையோ அவரது குடும்பத்தையோ முன் அறிமுகம் இல்லாமல் அந்தக் குடும்பத் திருமண விழாவிற்கு கோயம்புத்தூருக்குப் போய், தன் மனைவியுடன் சென்று, இரண்டு நாள் அங்கேயே தங்கி, வேறு எந்தவித நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், அந்தத் திருமணத்திற்கு சென்று வந்தது. அதுவும், தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் எப்படி என்று இந்த விஷயத்தை ஆச்சரியமாக சினிமா துறை, அரசியல் துறையினர்கள் பரவலாக பேசினார்கள்.
 
மனிதநேயமுள்ள அன்புள்ளம், வள்ளல் குணம் உள்ள மக்கள் திலகம் அவர்களுக்கு, சொந்தம், பந்தம், பாசம் தன்னை ஒரு பெரிய புகழ் உள்ள நடிகன் என் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திய கலைத்துறையில் உள்ள அத்தனை பேர்களும் தான் என்று அடிக்கடி சொல்வார். சத்யராஜ் அவர்களும் ஒரு நடிகர் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர். மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய உயர்வுக்கு அதிக செல்வாக்கை கொடுத்தது சினிமாவா? அரசியலா? என்பதை அடிக்கடி அளந்து பார்க்கக்கூடியவர். ஆனாலும் தனக்கு சினிமாதான் முதலில் அப்புறம்தான் அரசியல் என்று மக்கள் திலகம் நினைப்பவர்.
 
மக்கள் திலகம் அவர்களை புகழ் ஏணியில் ஏற்றுவிட்டது சினிமாதான் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மக்கள் திலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சினிமாதான். சத்யராஜ் அவர்கள் தன்னுடைய பரம ரசிகர் இப்போது அந்த மாமனிதருடைய பக்தராக உள்ளார். அவருடைய இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து வணங்கி வருகிறார்.
 
பிறகு? ஒரு நாள் திரு. சத்யராஜ் அவர்கள் தன் மனைவியுடன் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு முதல்வரை சந்திக்க நேரத்தை தெரிந்து கொண்டு காலை 8.30 மணிக்கு செல்கிறார்கள். தோட்டத்திற்கு சென்றவுடன் சத்யராஜும் அவரது மனைவியும் வந்திருக்கும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல்வரும் துணைவியார் ஜானகி அம்மையாரும் கீழே இறங்கி வந்து இவர்கள் பார்த்து குடும்ப நலனை விசாரிக்கிறார்.
 
அது சமயம் உடனே சத்யராஜ் அவர்கள் தனது தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்ற, உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நானும் என் மனைவியும் நன்றி சொல்ல வந்து இருக்கிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்களை வாழ்த்தி விட்டு சத்யராஜ் அவர்களை பார்த்து தம்பி உனக்கு வேற ஏதாவது என்னால் உதவி வேண்டும் என்றால் கேள்! எதுவாக இருந்தாலும் செய்கிறேன் என்று அன்புடன் சிரித்து கொண்டே கேட்கிறார். உடனே, சத்யராஜ் அண்ணே நான் இப்போ நிறைந்த வசதியுடன் இருக்கிறேன். எனக்கு உங்களுடைய உடற்பயிற்சி பொருள்களில் இருந்து ஏதாவது ஒன்றை தாருங்கள். அதை நான் உங்களுடைய ஞாபகமாக தினமும் உடற்பயிற்சி எடுத்து செய்றேன் என்றார். உடனே மக்கள் திலகம் அவர்கள் சற்று யோசித்து அருகில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்திடம் மேலே உள்ள என்னுடைய கர்லா கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். உடனே கர்லா கட்டை வந்தது மக்கள் திலகம் அவர்கள் அந்த கர்லாகட்டையை தன் கைபட கொடுத்தார். அத்துடன் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும் உடல் நல்ல இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதை மறக்காமல் சத்யராஜ் அவர்கள் நடந்து வருகிறார் என்பதை நான் அறிவேன். இது வள்ளலுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவம்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #64 on: January 28, 2012, 11:47:08 PM »
64.வள்ளல் வாழ்ந்த இறுதி ஆண்டில் அவரின் வித்தியாசமான அணுகுமுறைகள்



ஜானகி ராமனாக, ஜானகி அம்மையுடன் எம்,ஜி.ராமச்சந்திரன்

இதில் ஒரு முக்கிய விஷயம் 1917ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அவர் 1987ம் ஆண்டில் சில முக்கிய குறிப்பிடத்தக்கக்கூடிய விஷயங்களில் கலந்து கொண்டு செயல்பட்டுள்ளார். குறிப்பு 1987 ஜனவரி 1ந் தேதி, ஆங்கில வருடப்பிறப்பன்று, எப்போதுமே “ஆப்பி நியூ இயர்” என்று சொல்லாதவர் இந்த வருடம் பலரிடம் ஆப்பி நியூ இயர் என்று சொல்லி வாழ்த்தி இருக்கிறார் ஏப்ரல் மாதம் 14ந் தேதி சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று எப்போதுமே இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக கொண்டாடினார். அன்று காலை 6 மணிக்கெல்லாம் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு புத்தாடை உடுத்தி ஜானகி அம்மையாருடன் தன்னுடைய தாயின் உருவம் பொதித்த டாலர் (மைனர் சங்கிலி) அணிந்து கொண்டார்.
 
அன்று மக்கள் திலகம் அவர்களை காண வந்தவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் நோட்டு தான். பிறகு, அன்று மக்கள் திலகம் அவர்களிடம் வாழ்த்து பெற வந்தவர்கள் எல்லாம் போன பிறகு மேலே தன்னுடைய ரூமுக்கு சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்கிற தொழிலாளர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக மேலே அவர் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து அவர்கள் தன்னிடம் எத்தனை வருடமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு நல்லதொரு தொகையை காகிதத்தில் மடித்து பொட்டலமாக கொடுத்தார். பணப் பொட்டலத்தை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் மக்கள் திலகம் காலை தொட்டு வணங்கி ஆனந்த கண்ணீருடன் மன மகிழ்ச்சியோடு சென்றார்கள். பிறகு அந்த வருடம் அவரிடம் உதவி கேட்டு வந்தவர்களை எல்லாம் அவர்களுடைய நிலைமையை அறிந்து பண உதவிகளை செய்தார். இதை போல் தான் அந்த வருடம் மே மாதம் நடிகர் சத்யராஜ் அவர்கள் தங்கைகளுடைய திருமணத்திற்கு யாருக்கும் சொல்லாமல் விளம்பரம் இல்லாமல் கோயம்புத்தூருக்கு போனார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #65 on: January 28, 2012, 11:48:00 PM »
65.உணவு விஷயத்தில் வள்ளலின் மனித நேயம்

1977ல் மக்கள் திலகம் முதல் அமைச்சர் அன பிறகு, முதல் அமைச்சருக்கு ஒரு தனி அதிகாரி உதவியாளர், ஒரு துணை உதவியாளர், ஒரு போலீஸ் அதிகாரி, செகரட்டரி ஆபிசர் இவர்கள் தினமும் காலை முதல் அமைச்சர் அவர்களுடைய வீட்டுக்கு வந்து விடுவார்கள். அன்று முழுவதும் முதல்வர் கூடவே இருப்பார்கள். இரவு வீட்டிற்கு போய்விடுவார்கள் இது வழக்கம். இவர்களுக்கு காலை – மதியம் சாப்பாடு முதல்வர் கூடவே சாப்பிடுவார்கள். மதியம் முதல்வர் கோட்டையில் அல்லது மாம்பலம் ஆபிசில் இவர் எங்கே இருக்கிறாரோ அங்கே சாப்பாடு வந்து விடும். சுமார் 20 பேர்கள் சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு வரும். அசைவமும், சைவமும் இருக்கும் அன்று மதியம் மாம்பலம் ஆபிசுக்கு சாப்பாடு கொண்டு வர சொன்னோம் அன்று முதல்வருடன் சில மந்திரிகள் இருந்தார்கள். மதியம் 2 மணி ஆகிவிட்டது பந்தி பாய் விரித்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. அன்று கறி வருவல், கறி கோலா உருண்டை, முட்டை, மசாலா, கூட்டு, பொறியல், கீரை, சாம்பார், ரசம், ஊறுகாய், தயிர்.
 
முதல்வர் மற்ற 3 அமைச்சர்கள் மேலே இருந்தார்கள் கீழே அதிகாரிகள் இருந்தார்கள் சாப்பாடு பறிமாறியதும் முதல்வரிடம் சாப்பாடு ரெடி என்றேன். சாப்பாடு ஹாலுக்கு வந்த முதல்வர் கீழே இருக்கும் அதிகாரிகளையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னார். நான் கீழே சென்று பசியோடு அமர்ந்து இருந்த தனி அதிகாரி, ஐ.ஏ.எஸ். இவர் தனி உதவியாளர், அடுத்து துணை அதிகாரி, காவல் துறை செகரட்ரி, இவர்கள் மூவரையும் மேலே வாருங்கள் சாப்பிட அழைக்கிறார் முதல்வர் என்றேன்.
 
அவர்களுக்கு இப்படி நான் சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது மேலே வரவே யோசித்தார்கள் அதிலே ஒருவர் வர மறுத்தார் நான் உடனே ஐயா, சீக்கிரமாக வாங்க காத்துகிட்டு இருக்காங்க என்றதும், அச்சத்துடன் மேலே வந்தார்கள் அவர்களை பார்த்து முதல்வர் வாங்க வாங்க சாப்பிடுவோம் என்றார். இவர்கள் வரும் வரை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடாமல் காத்து இருந்ததை அறிந்த இவர்கள் மிக ஆச்சர்யத்துடன் அமர்ந்தார்கள். இதில் செகரட்டரி நான் சைவம் என்றார். அடடே அப்படியா, முத்து! அவருக்கு வேற இலை போட்டு கரண்டியை கழுவி விட்டு பரிமாறு என்றார். இனிமே சைவ அயிட்டங்கள் எல்லாம் தனி கேரியரில் வரவேண்டும் என்றார் முதல்வர். இந்த சொல்லை கேட்ட அந்த சைவ உணவு சாப்பிடும் அதிகாரி உடனே சார், அதெல்லாம் வேண்டாம் இப்போ சைவமும் அசைவமும் தனித்தனி பாத்திரங்களில் தான் இருக்கு இதுவே போதும் சார் என்றார். இந்த மூன்று பேரும் தலையை குனிந்து கொண்டே சாப்பிட்டார்கள் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிடுவதை கவனிக்கத் தவரவில்லை சாப்பாடு வகைகள் சாப்பிடும் முறைகளைப் பற்றி அந்த தனி அதிகாரி பிறகு என்னிடம் கேட்டார் என்ன முத்து எப்போதுமே இப்படித்தானா என்றார். உடனே, நான் வெள்ளிகிழமை அன்று மதிய சாப்பாடு முழுக்க முழுக்க சைவ சாப்பாடு தான் அன்று ஸ்பெசல் உருளை கிழங்கு மசாலா, அவியல், பாயாசம் அப்பளம் இருக்கும் என்றேன்.
 
இதை கேட்ட அவர் என்னை விடவில்லை, முத்து, ஒரு விசயம் முதல்வர் அவர்கள், மனித நேயத்துடன் நடந்து கொள்கிறார். எல்லோரும் சமம் என்று நினைப்பவர் அவர் மனித நேயமுள்ள நல்லவர் பல பட்டங்களை ஏற்கனவே பெற்றவர் இப்போ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அவருடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவது சரி இல்லை, முறையும் இல்லை. இப்படி நாட்டில் உள்ள எந்த முதல் அமைச்சரும் தன்னுடைய தனி அதிகாரிகளை தன்னுடன் அமர்ந்து சாப்பிட சொல்ல மாட்டார்கள் அப்படி சொன்னதாக சரித்திரமே இல்லை, நான் மிக சுருக்கமாக சொல்கிறேன். மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ளவும். நாங்கள் அவருடைய சாப்பாட்டை சாப்பிட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் எனவே இனிமேல் நாங்கள் கீழ்தளத்திலேயே சாப்பிட ஏற்பாடு செய்யவும். இது உன்னால் முடியும் என்றார் அதன்படி, அடுத்த நாளே இந்த விசயத்தை நான் மக்கள் திலகம் அவர்களிடம் மிகவும் பக்குவமாக சொன்னேன். இதில் எனக்கு மிக உதவியாக இருந்த சொல் அண்ணே, அவுங்க தனியாக கீழே சாப்பிட்டால் அவர்கள் மனம் போல் கூச்சம் இல்லாமல் சாப்பிடுவார்கள் அவுங்க இவ்வளவு ருசியோடு பல வகைகள் உடன்சாப்பிடுவதைப் பற்றி மிகப்பொருமையாக நினைக்கிறார்கள். பேசி கொள்கிறார்கள் என்றதும், அப்படியா சரி சரி சாப்பாட்டில் அவுங்க அவுங்க இஷ்டபடி இருப்பதில் தவறு இல்லை என்றார் மக்கள் திலகம். பிறகு அடுத்த நாள் மாம்பலம் ஆபிசில் சாப்பிட நேர்ந்தது முதல்வர் மாம்பலம் ஆபீசுக்கு அன்று 10 மணிக்கே கோட்டைக்கு போய்விட்டு சில அமைச்சர்களுடன் வந்துவிட்டார், சாப்பாடு எப்போதும் போல் தோட்டத்தில் இருந்து 1 மணிக்கெல்லாம் வந்து விட்டது. அது சமயம் கீழே உள்ள அலுவலக அறைகளில் அமர்ந்து இருந்த தனி உயர் அதிகாரியிடம் சார், முதல்வர் உங்களுக்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டார் என்றதும் அவர்கள் சற்று யோசித்தபடி என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் முதல்வர் உங்களை எங்கே வேண்டுமானாலும் அமர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டார்.
 
இதை கேட்ட அந்த மூன்று பேரும் எனக்கு நன்றி சொன்னார்கள். மக்கள் திலகம் அவர்களுடைய மனித நேயத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்படி பல விஷயங்களை சொல்லாம். ஒரு மனிதருக்கு மனிதாபம், மனித நேயம் இதை பற்றி மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள் எப்படி எல்லாம் பேசினார்கள், என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். மக்கள் திலகம் அவர்களை எட்டாவது வள்ளல் என்பதோடு முடித்து விட்டார்கள். ஆனால், மனித நேயத்தைப் பற்றி கணக்கிட முடியாது இப்போது, மக்கள் திலகம் முதல்அமைச்சர் ஆனபிறகு அவருடைய மனித நேயத்தைப் பற்றி எழுதிய பிறகு 1977க்கு முன் உள்ளதையும் எழுத உள்ளேன்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #66 on: January 28, 2012, 11:50:39 PM »
66.முப்பிறவி கண்டவர்


வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வம்பு வழக்குகள் எதுவுமே வராது. ஆனால், 5 அல்லது 10 வருடத்திற்கு ஒருமுறை உடல் பாதிப்பு ஏற்படும். வள்ளல் அவருடைய கிரகப்படி அவைகளையும் சமாளித்து விடுவார். இதில் அவருடைய சொந்த நாடகத்தில் 1958ல் சீர்காழி என்ற ஊரில் நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் அந்த நாடகத்தில் ஒரு கட்டத்தில் குண்டுமணி என்பவர் சண்டை காட்சியில் நடிப்பவர் சுமார் 200 கிலோ எடை உள்ளவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 70 கிலோதான் எடை. குண்டுமணியை சண்டைகாட்சியில் அவரை தூக்கி கீழே போட வேண்டும். இது தொடர்ந்து “இன்ப கனவு” என்ற நாடகத்தில் வரும் காட்சி அன்றைய தினம் சீர்காழியில் இந்த நாடகம் நடந்து கொண்டு இருக்கையில் குண்டுமணியை தூக்கும்போது எதிர்பாராமல் குண்டுமணி கீழே விழபோவதை அறிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கீழே உட்கார முயலும்போது அவரது முழங்கால் எலும்பு முறிந்துவிட்டது. குண்டுமணியுடன் கீழே உட்கார்ந்த எம்.ஜி.ஆர். அவர்களால் மீண்டும் எழுந்து நடக்க முடியவில்லை உடனே நாடகம் நிறுத்தப்பட்டது. அன்று நாடக கொட்டகை நிறைந்து வழிந்தது இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்களின் குரல் நாடக கொட்டகையே அதிர்ந்துவிட்டது.
 
உடனே ஒரு நாற்காலியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மேடையில் (அமர்ந்து கொண்டு) மைக் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு ஆறுதல் சொன்னார். அதோடு நான் என் கால் குணமானவுடன் மீண்டும் இதே ஊரில் இந்த நாடகத்தில் நடிப்பேன் இது உங்கள் மீது ஆணை என்று சொல்லி பொதுமக்களை கலைந்து போகும்படி வேண்டி கேட்டுகொண்டார். அதன் பிறகு, அடுத்த நாள் சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் செய்யப்பட்டது. இந்த செய்தி அப்போ சினிமா உலகத்தில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அது மட்டும் அல்ல மீண்டும் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க முடியுமா, என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், மக்கள் திலகம் அவர்களுக்கு முழங்கால் எலும்பு முறியவில்லை.
 
எலும்பு சற்று பிசகி இருந்தது. மிகவும் தீவிர சிகிச்சைக்கு பிறகு கால் முன்போல் சரியாகிவிட்டது. எந்த வித மாற்றமும் இல்லாமல் 4 மாதம் கழித்து மீண்டும் துள்ளி குதித்து கொண்டு படப்பிடிப்புக்கு சென்றார். மீண்டும் சீர்காழியில் அதே நாடகம் நடத்தப்பட்டு பெரும் பாராட்டுகளைப் பெற்றார். வள்ளல் அவர்களுக்கு அவர் செய்த தர்மம் தலையை மட்டும் காக்கவில்லை உடலையும் காத்தது. சத்தியம், நியாயம், தர்மத்தோடு சேர்ந்து கொண்டது மக்கள் திலகம் அவர்களிடம்.
 
இந்த தர்மராஜாவுக்கு 9 வருடம் கழித்து தலைக்கு ஒரு அபாயம் ஏற்பட்டது அது தலைப்பாகையோடு போய்விட்டது. அது தான் 1967 ஜனவரி 12ல் எம்.ஆர். ராதாவின் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தலைக்கு வைத்த குறி தப்பி காதோரம் கழுத்துக்குள் சென்று இரும்பு குண்டு கல்லாய், மணலாய் கரைந்து போய்விட்டது இது தான் வள்ளல் செய்த தர்மம்.
 
அடுத்து 1967க்கு பிறகு 1984 அக்டோ பர் வரை அதாவது 17 வருடம் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் விக்ரமாதித்தன் 18 படிகளையும் கடந்த பிறகு, சிம்மாசனத்தில் அமர வேண்டும் அதே போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பல சோதனைகளை சந்தித்து வெற்றியோடு 1977ல் தமிழக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றிகளையும் பெறுவது என்பது முடியாத விஷயம். ஆனால், மக்கள் திலகம் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளார். சினிமாவில் புரட்சி நடிகராகவும், அரசியலில் புரட்சித்தலைவராகவும், அரசாங்கத்தில் சத்துணவு கதாநாயகனாகவும், பொது மக்களுக்கு தொண்டனாகவும் வெற்றி வாகை சூடியவர். இது நாடறிந்த விஷயம் இப்பேர்ப்பட்ட நாயகனுக்கு, வள்ளலுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. 1984 அக்டோ பரில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவுக்கு சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்து நல்ல குணம் அடைந்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தார். 1985க்கு இடையில் மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாதங்களில் அதாவது அக்டோ பர் 1984ல் பிப்ரவரி 1985க்குள் தமிழ்நாட்டில் பொதுதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது பெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தி.மு.க. முழு முயற்சியோடு மிக கடுமையாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பே என்று அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்றது. மக்கள் திலகம் அவர்கள் முதன் முறையாக எம்.எல்.ஏ. வாக ஆகும் போது 1967ல் எம்.ஆர். ராதா உடைய துப்பாக்கி சூட்டில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தார்.
 



துப்பாக்கி சூட்டிற்குப்பின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்

அதே போல் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும்போது, மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக வந்தார். இதுவும் நாடு அறிந்த விஷயம். இருமுறை ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டே எம்.எல்.ஏ. ஆனார். மூன்று முறை முதல் அமைச்சர் பதவி பெற்றார். 10 வருடம் ஆட்சி புரிந்தது போதும் என்ன நினைத்தாரோ அல்லது வாழ்ந்தது போதும். நாம் நினைத்தது எல்லாம் நடந்தது. இனி நமக்கேன் இந்த பதவி பட்டம் நம்மைவாழ வைத்த மக்களிடம் இருந்து விடைபெற்று கொள்வோம் என்று நினைத்தாரோ? மக்கள் திலகம் அரசியல் அரசாங்கம் தனக்கு தனியாக எந்த விளம்பரமும் இருக்க கூடாது தனக்கு ஆள் உயர போஸ்டர்கள், கட் அவுட்டுகள் எங்கேயும் வைக்கக்கூடாது, தனக்கு சிலைகள் வைக்கக்கூடாது கட்டிடங்களுக்கு தன் பெயரை வைக்கக்கூடாது. அரசியலாக இருந்தால், அண்ணா பெயரையும், அண்ணா உருவச் சிலையும் தான் வைக்கவேண்டும் தான் முதன் முதலாக வாங்கிய ராயபேட்டை வீட்டிற்கு “தாய் இல்லம்” என்று பெயர் வைத்தார். இதே போல் ராமாபுரம் தோட்டம் வீட்டிற்கு பெயரே வைக்கவில்லை. ஆனாலும், அந்த பகுதியில் சினிமா நடிகர்கள், சிலர் தோட்டங்கள் வாங்கி இருப்பதால், அப்பகுதிமக்களும், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்டவர்களும் “எம்.ஜி.ஆர். தோட்டம்” என்று சொல்வார்கள். இது நாளடைவில் தமிழ்நாடு எங்கும் பிரபலமாகிவிட்டது. அடுத்து அடையாரில் வாங்கிய ஸ்டூடியோவிற்கு “சத்யா ஸ்டூடியோ” என்று பெயர் வைத்தார். இந்த மாதிரி அவருடைய பெயரை வைக்க விரும்பமாட்டார். பிறகு, “MGR பிக்சர்ஸ் லிமிடெட்”. “எம்.ஜி.ஆர். நாடக மன்ற குழு” என்ற பெயர் இயங்கியது. இப்படி இருக்கையில் அவர் முதலமைச்சர் ஆன பிறகு அரசாங்கத்தில் “மெடிக்கல் யூனிவர்சிட்டி”, தமிழ்நாடு வைத்திய பல்கலைக்கழகம். இதற்காக சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் எல்லா வேலைகளையும் முடித்து சுமார் ஒரு வருட காலமாக “திறப்பு விழா” நடக்காமல் இருந்தது. காரணம் யார் பெயரை சூட்டுவது, வைப்பது என்ற பிரச்சனை, ஏற்கனவே சென்னையில் “சென்னை பல்கலைக்கழகம்”, “அண்ணா பல்கலைக்கழகம்”, மதுரையில் “காமராஜர் கல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கட்டிடத்திற்கு “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சர் ஆன பிறகு அவருடைய அனுமதியில் கட்டப்பட்ட கட்டிடம்.
 
எனவே, எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை வைத்துவிடலாம் என்று அரசாங்க உயர் அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும், கவர்னரும் முடிவு எடுத்து அரசாங்க சட்டப்படி தீர்மானத்தில் கையெழுத்துப்போட்டு முதல் அமைச்சரிடம் ஒப்புதல் கையெழத்து வாங்கிய பிறகு, தான் பெயர் வைக்கவேண்டும். இதற்கு மக்கள் திலகம் அவர்கள் தன் பெயரை வைக்க ஒப்புகொள்ளவில்லை. ஆனாலும், கவர்னரும், மற்ற மந்திரிகளும் விடாமுயற்சி எடுத்து 24.12.1987ந் தேதி வைத்துவிட்டார்கள். இந்த “எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக”க் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு கவர்னர், மற்றும் மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரும் முதல்வர் விழாவுக்கு வரும்படி பத்திரிகை அடித்து கொடுக்கப்பட்டது. அதோடு தின பத்திரிகைகளுக்கும் விளம்பரம், மற்றும் செய்திகள் கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.இ.அ.தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் அத்தனை பேர்களையும் கட்சி சார்பில் அழைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடனும் என்று கட்சி நினைத்தது, அதன்படி அந்த பல்கலைக்கழக கட்டிடம் திறப்புவிழாவிற்கு வெளியூர்களிலிருந்து வருபவர்கள் எந்த எந்த வழியில் வரவேண்டும் என்று சென்னை நகர காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
 
1987 டிசம்பர் மாதம் 24ந்தேதி வியாழக்கிழமை காலை “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” (யுனிவர்சிட்டி) தமிழ்நாடு இந்த கட்டிடம் அமைந்து உள்ள இடம் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கிண்டி வழியாக நகரத்திற்குள் நுழையும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மக்கள் திலகம் “ராமாபுரம் தோட்டம்” வீட்டில் இருந்து மாம்பலம்அலுவலகம், கட்சி அலுவலகம், கவர்னர்மாளிகை முதல்அமைச்சர் அரசு அலுவலகம், கோட்டை இந்த இடங்களுக்கு போகும் வழியில் இந்த கட்டிடம் அமைந்து உள்ளது. இது ஒரு குறிப்பு.
 
உலகத்தில் நடக்கும் எல்லா விஷயத்தையும் கவனித்து கொண்டு இருக்கும் கடவுள் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்காமல் இருப்பது இல்லை, இந்த விஷயத்தில் திடீரென்று எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி 23.12.1987 அன்று கடவுள் நினைத்தார். அடடா இவர் மூன்று முறை செத்து பிழைத்தவர் “நல்லவர்”, “வல்லவர்”, “வள்ளல் குணம் உடையர்”, இவரிடம் “தர்மம்”, “சத்தியம்”, “நியாயம்”, “பக்தி”, எல்லாம் உள்ளது. மேலும், தன்னுடைய கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் உறவினர்களை விட மற்றவர்களை நேசிப்பவர், பிள்ளைகுட்டி இல்லாதவர், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, பொதுமக்களின் அன்பை பெற்றவர் அன்னதானம் செய்பவர், அளவோடு வாழ்பவர் ஒரு நல்ல கொள்கை எண்ணம் உள்ளவர். இப்படிபட்ட இவருக்கு நாம் இன்று நல்ல உதவியை செய்யவேண்டும் என்று நினைத்தார். நாளை இவர் பெயர் வைத்த ஒரு கட்டிடத் திறப்பு விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இது தான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய பரோபகாரம் என்று நினைத்த கடவுள் மக்கள் திலகம் மனதில் உதித்தார். பக்தா உன்னை காண நாளை காலையில் நாடெங்கும் இருந்து லட்சோப லட்சம் பேர்கள் வருகிறார்கள். உடல் நல குறைவு ஏற்பட்டு சற்று மன நிம்மதி இல்லாமல் இருக்கும் உனக்கு உதவி செய்ய வந்துள்ளேன். இப்ப நீ என்னுடன் வந்து விட்டால் நாளை உன் உடலுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை கிடைக்கும். கடவுளே நேரில் வந்து வள்ளலின் உயிரை கொண்டு போன மாதிரிதான் அன்றைய, சம்பவம் இருந்தது. இது கற்பனை அல்ல, கதையும் அல்ல, மேலும் மக்கள் திலகம் வாழ்நாள்களின் “திருமண பத்திரிகை”, “புதுமனை புகுவிழா”, “பிறந்தநாள் விழா” இப்படி எதற்குமே பத்திரிகை அடித்து கொடுத்தது இல்லை. அப்படி பட்ட மக்கள் திலகம் அவர்களே பொது மக்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் நான் 23.12.1987 புதன் கிழமை இரவு 11.45க்கு இறந்து விடுவேன் என் இறுதி சடங்குக்கு எல்லோரும் வந்துவிடுங்கள் என்று பத்திரிகை அடித்து அனுப்பியது போல் இருக்கிறது. இதன்படி இந்த “மன்னாதி மன்னன்” மறைவு செய்தியை அறிந்த மக்கள் வெள்ளம் திரண்டு 24.12.1987 அன்று காலை சென்னைக்கு வந்து விட்டார்கள். ஏற்கனவே “எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்” திறப்பு விழாவிற்கு வந்து கொண்டு இருந்தவர்கள் வழியில் மக்கள் திலகம் மறைந்து போன செய்தியை கேட்டவர்கள் மனம், இதயம் எப்படி இருந்து இருக்கும், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில், தமிழக கவர்னர் தலைமையில், இந்திய ஜனாதிபதி அவர்கள் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிருடன் இருக்கும் வரை என் பெயரில் எந்த கட்டிடத்திலும் என் பெயரை வைக்கக்கூடாது, என்று மிகவும் வற்புறுத்தி வந்தார். அதையும் மீறி, நடக்க இருந்த இந்த விழாவை நடக்க விடாமல் நிறுத்தினார். “நினைத்ததை முடிப்பவர்”, “சாதனை நாயகன்” எம்.ஜி.ஆர். அவர்களுடைய சரித்திரம் படைத்த வரலாறு இது.
 
இந்த மாமனிதர் 5வயதில் கும்பகோணம் பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் விளையாடியதும், வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று, காவேரி ஆற்றில் தன்னுடைய அண்ணனுடன் குளிக்கசென்று அங்கு நீந்தி விளையாடியதையும் பள்ளிக் கூடத்தில் மாணவர் தலைவரிடம் கணக்கு கேட்டு, சண்டை போட்டதையும் 10 வயதில் வறுமைபிடியில் இருந்து தப்பி பிழைக்க நாடக கம்பெனிக்கு, சென்றதையும், நாடக கம்பெனியில் கடுமையான பயிற்சியின் போது ஏற்பட்ட சிரமங்களையும், பிறகு சென்னை வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி நடந்த நடைகளை பற்றி மற்றும் சில சம்பவங்களை மக்கள் திலகம் மாம்பலம் ஆபிசில் சில சமயங்கள் சில முக்கியஸ்தர்களிடம் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சுவிடுவார்.
 
இதேபோல், அவருக்கு ஏற்பட்ட பல சிரமங்களை எல்லாம் சமாளித்து இப்போ பெரிய வசதியுள்ளவன் ஆனேன், என்பதையும் சொல்வார். எனக்கு மக்கள் கொடுத்த வரபிரசாதம் தான் இது அவர்கள் கொடுத்த தைரியம், ஊக்கம் நம்பிக்கைதான் நான் பாராட்டு பெற இவ்வளவு பிரபலம் அடைய அவர்கள் தான் காரணம் என்றும் சொல்வார். இப்படி அவரே அவருடைய “வாழ்க்கை வரலாறு” பற்றிய சில நேரங்களில் சில விஷயங்களை பேசும்போது உதாரணத்திற்கு சொல்வார். இப்படி விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. இது மாதிரி ஒருநாள் ஒரு சம்பவத்தை சொன்னார் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு கம்பெனிக்கு போனேன் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து ராயபேட்டைக்கு நடந்தே சென்றேன். அங்கு எல்லோரும் ஸ்டூடியோவிற்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள். அதன்படி, ராயப்பேட்டையிலிருந்து அடையாருக்கு நடந்து வேகமாய் போய் சேர்ந்தேன். பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தது. நான் அப்பவே “டீ, காபி” சாப்பிட மாட்டேன் தண்ணீர் தாகத்துக்காக “சோடா அல்லது சர்பத்” வாங்கி காசுக்கு தகுந்தபடி சாப்பிடுவேன்.
 
அப்போ எல்லாம் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் அதிக பட்சம் ஐந்துரூபாய் காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து ஏதோ வேலைக்கு போற மாதிரி அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கி புறப்பட்டு விடுவேன். இந்த மாதிரி சமயங்களில் சில நேரம் சில இடங்களில் என்னை மாதிரி சினிமா சான்ஸ் தேடி அலைகிறவங்ககிட்ட மாட்டிக்கிடுவேன். அவுங்ககிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், என்கிட்ட ராமச்சந்திரா சாப்பிட காசு இல்லை. பசிக்குது உன்கிட்ட காசு இருந்தால் கொடு என்பார்கள். நானும் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் என்னிடம் ஒரு ரூபாய் இருந்தால் 1/4 ரூபாய் கொடுப்பேன். மீதியை நான் வச்சிக்கிடுவேன். அந்த எட்டணாவில் 4 அணாவுக்கு ஏதாவது சாப்பிட்டு மீதம் “4″ அணாவை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவேன். இப்படி ஒரு உதாரணத்திற்கு சொல்வார். அதாவது, ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கிறது என்பார். இப்படி எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிற வரை நடையை பற்றி கவலையே படுவதில்லை. கையிலே காசு இருந்தால் கூட அப்போ, எல்லாம் பஸ் வசதி இல்லை. “டிராம் வண்டி” ரயில்மாதிரி தண்டவாளத்தில் ஓடும் அப்போ எல்லாம் “கைரிக்ஷா” இல்லை ஆளை உக்கார வைத்து ஆள் இழுத்து கொண்டு போறது. அது எனக்கு பிடிக்காது. குதிரை வண்டி உண்டு காசு அதிகம் கேட்பார்கள். வீடு வால்டாக்ஸ் ரோடு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்து ரோடு அங்கு இருந்து ராயப்பேட்டை, மைலாப்பூர், மாம்பலம், கோடம்பாக்கம் இந்த இடங்களுக்கு போக வேண்டும் என்றால் தூரத்தை நினைக்காமல் நடந்தே போய்விடுவேன். எனக்கு வசதி வந்தவுடன் முதலில் சொந்த வீடு வாங்கனும், பிறகு ஒரு கார் வாங்கனும் எங்கே எங்கே எல்லாம் நடந்து போனோமோ அங்கே எல்லாம் காரில் போகனும் இப்படி இதை எல்லாம் நினைத்துக்கொண்டே நடந்து விடுவேன். கோயிலுக்கு போய் சாமி கும்பிட மாட்டேன். கடவுளை மனசுக்குள்ளே நினைச்சிக்கிடுவேன். ஆனால், அம்மா, அண்ணன் இருவரும் ஒரு கோயில் விடமாட்டாங்க பசிக்குது என்றால் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டேன். எவ்வளவு பசிவந்தாலும் பொருத்துகிட்டு வந்துடுவேன். இது அம்மாவுக்கு தெரியும் வீட்டில் எனக்குனு ஏதாவதும் வச்சு இருப்பாங்க.
 
சாயங்காலமோ, ராத்திரிக்கோ எப்போ வந்தாலும் குளிக்காமல் சாப்பிடமாட்டேன். இப்படி மக்கள் திலகம் பல சம்பங்களை இதற்கு தகுந்தவர்களிடம் தான் பேசுவார். நல்ல மூடில் இருக்கும் போது, ஆபிஸில் அல்லது பகலில் காரில் வெளியூருக்கு போகும்போது காரில் அவருக்கு பேச்சு துணைக்கு அவருக்கு தகுந்தாற் போல் ஒருவர் உதவியாளர் ஒருவர் காரில் குடிதண்ணீர் திண்பண்டங்கள் இருக்கும் அது சமயம் இப்படி ஜாலியாக பேசிகிட்டோ வருவார்.
 
இப்படி இதில் சில சமயம் காரில் நான் உதவியாளராக போவதும் உண்டு. அந்த சமயம் அவர் சொல்லும் இம்மாதிரியான விஷயங்களை நான் மனதில் பதியவைத்து கொள்வேன். ஒரு மாமனிதர் எப்படி இதற்கு முன்னால் வாழ்ந்து உள்ளார் என்பது முக்கியம். இதை அவரே சொல்வதென்றால் இதை விட பெரிய விஷயம் எதுவுமே இருக்க முடியாது.
 
முக்கிய குறிப்புகள்
 
1987 ஜூலை 25ந்தேதி இலங்கை ஒப்பந்தம்
 
1987 ஆகஸ்டு மாதம் 5ந்தேதி சென்னை கடற்கரையில் இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரமாண்டமான பொதுக்கூட்டம்
 
1987 ஆகஸ்டு 7ந்தேதி அமெரிக்கா பயணம்
 
1987 ஆகஸ்டு 30ந்தேதி சென்னை வருகை
 
1987 டிசம்பர் 22ந்தேதி கத்திப்பாரா ஜவகர்லால் நேரு உருவச்சிலை திறப்புவிழா
 
1987ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். 23ந்தேதி இரவு இறைவனடி சென்றுவிட்டார்.
 
கடற்கரையிலே உறங்கினாலும் அவர் உலக மக்களின் மனதில் குடிகொண்டு உள்ளார். அந்த மக்கள் திலகத்தை நினைத்துக் கொண்டு அவருடைய நினைவில்லத்தில் இரவு பகலாக இருந்து கொண்டு அவருடைய வரலாற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
 
மக்கள் திலகம் அவர்களுடைய மனிதநேயமிக்க பண்புகளை “மக்கள் திலகமும் – மனித நேயமும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.
[/b]
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #67 on: January 29, 2012, 04:22:53 AM »
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் – பாகம் 1

சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.
 
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
 
2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
 
3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
 
4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
 
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
 
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.
 
6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
 
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #68 on: January 29, 2012, 04:27:03 AM »

8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
 
9. ஒரு மனிதனின் எண்ணமும்,நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்
 நாட்டில் நல்லவை நடக்கும்.
 
10. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குடோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கக் கூடியவை.
 
11. கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தைக் காட்ட முடியும்.
 
12. கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
 
13. பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும்.பிறர் ரசிப்பதற்காகக அல்ல! ஆடலும் அது போலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
 
14. கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல. தரத்தை மட்டுமல்ல, அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
 
15. குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
16. கலை எப்போதும் நிரந்தரமாய் இருக்கும். ஆனால் கலைஞர்கள் நிரந்தரமாய் இருக்கமாட்டார்கள்.
 
17. இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
 
18. சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #69 on: January 29, 2012, 04:27:46 AM »
19. ஒரே கட்சி ஆட்சி தான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி , இது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக கூற விரும்புகிறேன்.
 
20. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
 
21. உயர்ந்த கல்வி கற்கும் போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
22. பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்ற உத்தரவு போட வேண்டும். இசைத் தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களும் அந்தப் பாடல் பாட வேண்டும்.
 
23. நமது நாடு, நமது மக்கள், நமது மொழி என்ற உணர்வு நமக்கு வேண்டும்.
 
24. நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.
 
25. கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் ; அப்போது தான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
 
26. மதத்தின் பெரால் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால் தான் பிரச்சனைகள் வருகின்றன.
 
27. உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.
 
28. நமக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம் ; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.
 
29. கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக் காரர்கள் தான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #70 on: January 29, 2012, 04:28:58 AM »

 
 
30. இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக் கூடாது.
 
31. நீதித்துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது. வந்து விட்டால் நீதி செத்துவிடும்.
 
32. நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்.
 
33. சக்தி குறைந்தர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
 
34. சொந்தக் காலில் நிற்பது நல்லது மட்டுமல்ல. நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.
 
35. ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பது தான் தியாகம்.
 
36. நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
37. மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றர்வர்களும் அந்தப் பணியைச் செய்தால் தான் நிலைமை சீர்படும் ; எந்தத் திட்டமும் நிறைவேறும்.
 
38. உடலைப் பேணிக் காப்பது, தேகப் பயிற்சி செய்வது, உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத் தூய்மையைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது ; தற்காப்புக்கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமை ஆகும்.
 
39. எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மை தான் நிலைக்கும் என்பதை மனிதற்கொண்டு விமர்சியுங்கள்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #71 on: January 29, 2012, 04:29:47 AM »
40. மக்களையே மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால் தான் கலைஞர்களின் வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
 
41. வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான, பயங்கர விஷவாயு ஆகும்.
 
42. ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும்.ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுவத்துவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.
 
43. சராசரி மனிதனின் எண்ணங்கசளையும்,அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.
 
44. என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும் போது அன்போடு பேசுவதற்குக் காரணமே, அவர்ளது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம் என்பதனாலும் தான்.
 
45. அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத் தான் சொந்தம் ; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
 
46. மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காகப் பெற்றோரைத் துன்பப்படுத்தக் கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப் படக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
 
47. சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடிவரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.
 
48. கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #72 on: January 29, 2012, 04:31:19 AM »
49. திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அது தான் அஸ்திவாரம்.
 
50. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால் தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
 
51. நீங்கள் உண்பவற்றில் மிகச்சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
 
52. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்க வேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில் தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
 
53. எல்லோரும் நமக்கு வேண்டிவர்கள் தான் ; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
 
54. நல்ல நண்பர்களைப் பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
 
55. கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.
 
56. சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன்கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.
 
57. மக்களுக்கம் அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைக் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #73 on: January 29, 2012, 04:32:03 AM »
58. உழைக்கும் வர்க்கம் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது ; ஆனால் அதற்கு முன்பே நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
59. ஒரு மொழியை நாம் புரிந்து கொள்ள முடியாதபோது அந்த மொழியை கட்டாயப்படுத்தக்கூடாது.
 
60. ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
 
61. இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்குப் பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
 
62. என்னைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது. மதம் கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எனது கடவுள் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
 
63. அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.
 
64. சமுதாயத்தின் கட்டுப்பாடுகள்.ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.
 
65. தன்னலம் தேவை தான். ஆனால் அது பொதுநலமாகப் பரிணமிக்க வேண்டும்
.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 600
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #74 on: January 29, 2012, 04:39:17 AM »
லண்டன் ரேடியோவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி

லண்டன் (பி.பி.சி.) ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார். 1974_ம் ஆண்டு, ரஷியத் தலைநகரான மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு “பி.பி.சி.” க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
என்னுடைய 2 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். ஆனால்; கேரளத்தில் தந்தையின் சொத்துகள் குழந்தைகளுக்கு இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டோம். என் தாயின் அரவணைப்பில்தான் வளர வேண்டி இருந்தது.
 
என் தந்தை மாஜிஸ்திரேட்டாக இருந்தார். பிரின்சிபாலாகவும் இருந்தார். பிரின்சிபாலாக அவர் இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியிலே நான் பிறந்தேன். 2 வயதில் தந்தையை இழந்து அதற்கு பிறகு 4, 5 வயதில் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டோம். என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர் போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றினார். அவரது ஆதரவில் நாங்கள் வளர வேண்டி இருந்தது.
 
முதன் முதலில் நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான் பார்த்துக்கொண்டு, பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது, சூடு தணியாமல் இருக்கிறது, நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.
 
ஆகவே, தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதிகமாகக் கல்வி பெறுகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. எனது 7_வது வயதில், நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். நாடகங்களில் நடித்து, பிறகு திரை உலகில் சேர்ந்தேன்.
 
தொடக்கத்தில் நான் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாமல் ஊழியனாக இருந்தேன். 1933_ 34_ம் ஆண்டில் உறுப்பினரானேன். அதன்பிறகு அங்கே சில குறைபாடுகளை கண்டதால், நான் விலகி, அஞ்சாதவாசம் என்று சொல்வார்களே, அதுபோல எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் இருந்து கொண்டிருந்தேன்.
 
ஆயினும் நான் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பும், நம்பிக்கையும் கொண்டவன். தமிழகத்தில், அக்கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்த ஒரே தலைவராக அமரர் அண்ணாதான் இருந்தார்கள். அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.
 
1972_ல் தி.மு.கழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தொண்டர்களுடைய, மக்களுடைய வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை உருவாக்கினேன். அதில் நான் முதல் தொண்டனாக இருக்கிறேன்.” இவ்வாறு “பி.பி.சி.”க்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
 
திரைப்படத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில் பிரிய நேரிட்ட போதிலும் தொடக்க காலத்தில், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கோவையில் ரூ.14 வாடகையில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்கள். திரைப்படத்துறையில் முன்னேற, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது வழக்கம்.
 
சென்னையில் குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.
 
1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-
 
சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.
 
பார்த்தவுடனே, “தம்பி வா!” என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான் வேண்டும்’ என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில், அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_ அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர் மு.க. எப்படித்தான் மறப்பாரோ?
 
இன்பத்தைப் பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால், அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.”
 
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
 
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார் சிறந்த நடிகர்? யார் வசூல் சக்ரவர்த்தி?” என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம்.
 
ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.
 
எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும் இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-
 
“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.
 
என் மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.
 
எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். “சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம் கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார் கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.
 
அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே” என்று சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது.”
 
இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.