Author Topic: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)  (Read 22124 times)

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #45 on: January 28, 2012, 11:15:29 PM »
44.இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை




1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.
 
மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்
 
கலைத்துறையில் பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும் என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.
 
தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார் மற்ற மந்திரிகளிடமும், 1960ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்கனும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார். இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியல் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கைரிக்ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்கனும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விசயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விசயங்கள்.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #46 on: January 28, 2012, 11:16:42 PM »
45.மக்கள் திலகம் விரும்பிக்கொண்டாடும் விழா


மக்கள் திலகம் மிக விரும்பி கொண்டாடும் விழாக்களில் ஒன்று தைப்பொங்கல் அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து 7 மணிக்கு குளித்து புத்தாடை உடுத்தி சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டு மாடியில் இருந்து கீழே உள்ள ஹாலுக்கு வந்து விடுவார். பொங்கல் வாழ்த்து சொல்ல வந்து இருப்பவர்களையும் பார்ப்பார். பிறகு, சாப்பாடு ஹாலில் பந்தி பாய் விறிக்கப்பட்டு தலைவாழை இலைபோட்டு நெய் மணக்கும் சர்க்கரை பொங்கலும், உளுந்து வடையும், மல்லிகைப்பூ இட்லியும், சட்டினியும், சாம்பாரும் இருக்கும். வள்ளல் வந்து இருப்பவர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ஸ்பெசலாக ஐயர்கள் சமையலுக்கு வந்து இருப்பார்கள். அன்று ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்து இருப்பவர்களுக்கு வேஷ்டி சட்டையும், புடவைகளையும் அதோடு, பணமும் இவர்கள் மாடிக்கு வரவழைத்து ஜானகி அம்மையார் கொடுப்பார்கள்.
 
அன்று தோட்டத்தில் திருவிழா போல் இருக்கும் அடுத்து சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று மாடியில் அவருடைய ரூமில் பல தட்டுக்களில் நவதானியங்கள், தேங்காய் பழம் வகைகள் புதுவேஷ்டி சட்டை, புடவை நிறைய நகைகள் ஒரு ரூபாய் நாணயங்கள் இவைகள் எல்லாம் தாம்பூலத்தில் வைக்கப்பட்டு இருக்கும். வருடப்பிறப்பு காலை படுக்கையில் இருந்து எழுந்த உடன் தாம்புலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைத் தொட்டு கும்பிட்ட பிறகு, தான் மற்ற வேலைகள். அன்று காலை 8 மணிக்கு எல்லாம் கீழே ஹாலுக்கு வந்து விடுவார் இதற்குள்ளாக தோட்டத்தில் வேலை செய்பவர்கள் “சத்யா ஸ்டுடியோ”, “மாம்பலம் ஆபிஸ்” தலைமைக் கழகம் கட்சி ஆபிஸ் இவர்கள் எல்லாம் முன் கூட்டியே மாடிக்கு சென்று விடுவார்கள். காரணம் நாம் முதல்லே முதல் ஆளாக ஆசிர்வாதம் பெற்று விடனும் என்ற ஆர்வம். அதேபோல் வள்ளல் அவர்கள் ஆசிர்வதித்து பணம் கொடுப்பார். ரூ.100/- அன்றைக்கு வள்ளலைப் பார்க்க வந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பணம் கொடுப்பார். அன்று காலை 10 மணி வரை இந்த திருவிழா நடக்கும் அதற்கு பிறகு சூட்டிங்குக்கு போய்விடுவார். அங்கு எந்த ஸ்டூடியோவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்குமோ அந்த இடத்தில் அது சமயம் படப்பிடிப்புக்கு உள்ள சக தொழிலாளர்கள் விபரம் தெரிந்தவர்கள் அன்று அண்ணே, தமிழ் புத்தாண்டு “எங்களை வாழ்த்துங்கள்” என்று வந்து நிற்பவர்களுக்கெல்லாம் வாழ்த்தி பணம் கொடுப்பார். அன்று மதிய சாப்பாடு படப்பிடிப்பு நிலையத்திற்கே தோட்டத்தில் இருந்து வந்து விடும். எப்போதும் அசைவ சாப்பாடு வரும். ஆனால், தை பொங்கல் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வெள்ளிகிழமை சைவ சாப்பாடு கூட்டு பொறியல், உருளை கிழங்கு மசாலா, அவியல், கீரை ஊறுகாய், அப்பளம், பாயாசம், தயிர், சாம்பார், மோர் குழம்பு, ரசம் இத்தனை வகைகளுடன் 25 பேர்களுக்கு வரும். வாழை இலைபெரியதாக இருக்கும். இந்த விஷயம் வள்ளலுடைய வரலாறில் முக்கியமானது
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #47 on: January 28, 2012, 11:18:00 PM »
46.மக்கள் திலகம் அவர்கள் விரும்பாத பண்டிகை


ஆங்கில வருடப் பிறப்பை கொண்டாடமாட்டார். இதை அறிந்தவர்கள் யாரும் அன்று “ஹாப்பி நியூ இயர்” என்று சொல்ல மாட்டார்கள். அவரும் யாருக்கும் போனில் நேரில் சொல்லமாட்டார். காரணம் ஆங்கிலேயர்கள் தினம் இது. சுதந்திர போராட்டத்தின் போது நம் நாட்டு வீரர்கள் தமிழர்கள் மற்றும் எவ்வளவு பேர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். 1935ல் மக்கள் திலகம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் காந்தி பக்தராக இருந்தார். கதர் ஆடைகள் உடுத்துவார். பிற மொழிகளை கற்றுக்கொள்ளதவர் இல்லை. ஆனால், அதற்கு அடிமையாகி விடக்கூடாது. நான் அரசியல்வாதி சிறு வயதில் இருந்தே அதாவது 1954ல் இருந்து அறிஞர் அண்ணாவுடைய அரசியலைக் கற்றுக்கொண்டவன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திராவிட பரம்பரை கொள்கையாக கொண்ட நான் ஆங்கில வருடப்பிறப்பை எப்படி கொண்டாடுவேன். அதனால் தயவு செய்து இனிமேல் அடுத்து வரும் “புதுவருடப் பிறப்பு” அன்று மாலை மரியாதை எதுவும் வேண்டாம் என்று இதை மக்கள் திலகம் முதல் அமைச்சர் ஆன பிறகு 1978ல் ஜனவரி முதல்நாள் சில முக்கிய அரசாங்க அதிகாரிகள் முதல்அமைச்சரை பார்த்து ஆங்கில வருடப் பிறப்பு வாழ்த்துக்களை சொல்ல வந்தவர்களிடம் சொன்ன செய்தி இது.
 
அடுத்து இதே போல் தீபாவளி பண்டிகையை மக்கள் திலகம் அவர்கள் கொண்டாட மாட்டார்கள். காரணம், இந்த பண்டிகையை யாருக்காக எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து கொண்டாடுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் ஒரு பெரியவர் சொன்னார். வடநாட்டில் நரகாசூரன் என்ற ஒரு பெரிய அரக்கன் இருந்தான். அவனை கொன்று விட்டார்கள் அதற்காகத்தான் தீபாவளி என்று சுருக்கமாக சொன்னார். எது எப்படியோ நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று நருக்கென்று பதில் சொன்னார் மக்கள் திலகம். இதில் ஒரு முக்கிய விசயம். ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். திருமணம் செய்து கொண்டவராக இருந்தால் அவர்களுடைய மனவை஢ மக்களுக்கு அவர் அவர் குடும்பத்திற்கு தகுந்தாற்போல ஜானகி அம்மையாரிடம் சொல்லி இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பணம் கொடுத்து விடுவார்கள். தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் அவர்களுக்கு சொந்த வீடு போல் தோட்டம் – உதவியாளர்கள் – ஓட்டுநர்கள் – சமையல்காரர்கள் – வாட்சுமேன் – தோட்டத்தில் விவசாயம் பார்ப்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் சலவைத் தொழிலாளி இப்படி 25க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் தீபாவளி அன்று புத்தாடை உடுத்தமாட்டார்கள். வீட்டிற்கும் போகமாட்டார்கள். மக்கள் திலகம் எவ்வழியோ அவ்வழியே இவர்களும்.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #48 on: January 28, 2012, 11:19:16 PM »
47.மக்கள் திலகம் வருடத்திற்கு இரண்டு நாள் மவுனத்துடன் உண்ணாவிரதம் இருப்பார்.



அதாவது ஒன்று 1967 ஜனவரி 12ம் தேதி எம்.ஆர். ராதா மக்கள் திலகம் அவர்களை துப்பாக்கியால் சுட்ட நாள். அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 வரை பேசமாட்டார். சாப்பிடவும்மாட்டார். வெளியே எங்கும் செல்லவும் மாட்டார். அடுத்து 1969 மார்ச் மாதம் அறிஞர் அண்ணா இறந்தார். அன்று காலை சக தோழர்களுடன் அவருடைய சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் உண்ணாவிரதம் மவுன விரதம் தனக்கு அரசியல் ஆசானாக இருந்த அண்ணா நினைவு நாளன்று மக்கள் திலகம் மட்டும் தான் மவுனமாக சாப்பிடாமல் இருப்பார். இப்போ அப்படிப்பட்ட மகான் மறைந்த நாளன்று எவ்வளவோ பேர்கள் அன்று சாப்பிடாமல் மவுனமாக இருக்கிறார்கள். டிசம்பர் 24ந்தேதி அவருடைய நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு காலை 6 மணிக்கெல்லாம் விளக்கேற்றி சிலைக்கு மாலைபோட்டு அன்று இரவு 9 மணி வரை சாப்பிட மாட்டேன். நான் எவ்வளவோ விசயங்களை மக்கள் திலகம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு அந்த வள்ளல் பெருமான் தான் ஆசான்.
 
பெரியவர் எம்.ஜி.சி. சொன்னது
 
எங்கள் அப்பா மலையாளி அல்ல அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு கோவை மாவட்டம், காங்கேயம் ஆகும். மன்றாடியார் வகையை சேர்ந்தவர் கோபால மேனன் அல்ல. மருதூர் கோபாலன் தான் அவர் பெயர். இது ரெக்கார்டுபடி உள்ள பெயர் அவர் பாலக்காட்டுக்கு அடுத்து உள் வடவனூர் என்ற ஊரில் பிறந்தவர். அவர் பட்ட படிப்பு படித்தவர் நடுத்தர குடும்பம். தமிழ், ஆங்கிலம் மலையாளம் படித்தவர் சாதுவானவர் தர்மம், சத்தியம், நியாயம், அன்பு, பண்பு உள்ளவர். அவர் பாலக்காட்டில் துணைநீதிபதியாக வேலைபார்த்தவர். பிறகு, இலங்கை கண்டியில் ஆங்கில புரபசராகவும் மேஜிஸ்ட்ரேட் கோர்டில் நீதிபதியாகவும் வேலை பார்த்தவர். என்னையும் எனக்கு முன்பு பிறந்தவர்களையும் நல்லா இங்கிலீஸ் மீடியம். ஆங்கில பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார் எந்த கஷ்டமும் தெரியாமல் வளர்ந்தோம். பிறகு எனது தம்பி ராமச்சந்திரன் 5வது குழந்தையாக பிறந்தான். அவன் எங்களை விட ரொம்ப அழகாக இருப்பான். மிக சுறு சுறுப்பாகவும் இருப்பான். எங்க அப்பா வீட்டில் இருக்கும்போது அவனை தான் தூக்கி வைத்து கொண்டு கொஞ்சுவார். அவனுக்கு அவர்தான் ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தார். ஆனால், நாங்கள் எல்லோரும் “சந்திரா” என்று கூப்பிடுவோம். நல்ல செழிப்போடு இருந்த எங்கள் குடும்பத்தில் சனீஸ்வரன் நுழைந்து விட்டான். 1919ல் திடீரென்று எங்க அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அப்பாவை இழந்த எங்களுக்கு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அம்மாவுக்கு அப்பாவுடைய இறப்பு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அவரையே நினைத்து கொண்டு எங்களை சரிவர கவனிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் என்னுடன் பிறந்த இரு சகோதர சகோதரியும் விசக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போய் விட்டார்கள். இந்த காலகட்டத்தில் எங்கள் தாயுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும். என் அழகான தம்பியும் என் தாயோட துயரத்தையும் நினைத்து நான் அழுகாத நேரமே இல்லை. இந்த விசயத்தை 1976ல் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் அவருடைய ஒரு உற்ற நண்பரிடம் சொன்ன விசயம்.
 
நாங்கள் கஷ்டப்படுகிற காலத்தில் என்னிடம் தம்பி அடிக்கடி சொல்வான் கவலைபடாதீங்க அண்ணா, முன்னை போல் வாழ்ந்து காட்டுவோம். பெரிய பணக்காரங்க போல் நாமும் பணக்காரர்களாகி விடுவோம். நாங்கள் நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும்போது மற்ற நடிகர்களிடம் தமாசுக்கு அடிக்கடி சொல்வான். நான் சொந்தத்தில் நாடகங்கள் நடத்தும் போது வாங்க நல்லவேசம் தருகிறேன். இப்படி எதையாவது தமாஷாக பேசுவான்
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #49 on: January 28, 2012, 11:20:33 PM »
48.மக்கள் செல்வாக்கு மக்கள் திலகத்திற்கு மட்டும் தான்




மக்கள் செல்வாக்கு மக்கள்திலகத்திற்கு மட்டும்தான் என்ற பெருமையைப் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை குறையவில்லை மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பை பெற்றவர். பொது மக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொல்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
 
சேர சோழ பாண்டியன்
 
தமிழ்நாடு, கேரளம் ஆந்திரம், கர்நாடகம் இவைகளை சேர்ந்தது தான் திராவிட நாடு. சேரநாடு – கேரளம், ஒரு காலத்தில் இங்கே எல்லாம் தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து “நாடோ டி மன்னன்’ படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நம்பியார் – கேரளம், பானுமதி – ஆந்திரம், சரோஜாதேவி – கர்நாடகம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு “நாடோ டி மன்னன்” படத்திலேயே திராவிட நாடு என்பதை காண்பித்து உள்ளார்.
 
இவைகளுக்கெல்லாம் மீறி அறியாதது போல் ஒரு சமயம் திமுகவினர் மக்கள் திலகம் அவர்களை மலையாளி கேரளத்துக்காரன் என்று பேசினார்கள். அவர்களுடைய தந்தையை கோபாலன் மேனன் என்று எழுதுகிறார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கொங்கு வெள்ளாளர் என்பதை 1978ல் அவரிடமே சொல்லப்பட்டது. ஒரு சினிமா நடிகர், அரசாங்கம் நடத்துவதா என்று பேசப்பட்டது. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வள்ளலுக்கு வள்ளல், நல்லவர்களுக்கு நல்லவர், வல்லவனுக்கு வல்லவன். தர்மத்திற்கு தலைவணங்குபவர். அநியாயத்தை கண்டிக்க அஞ்சாதவர். இந்த உத்தமபுத்திரரின் வாழ்க்கை வரலாறுகளை எழுத எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து கடவுளை வணங்குகிறேன்.
 
ஒரு முக்கியமான குறிப்பு
 
1920 கும்பகோணம் வந்தது
 1924ல் பாண்டிச்சேரி காரைக்கால்
 1932ல் சென்னை
 1941ல் முதல் திருமணம், பார்கவி என்ற தங்கமணி
 1942ல் தங்கமணி இறந்துவிட்டார்
 1944ல் இரண்டாவது திருமணம் சதானந்தவதி
 1957ல் மூன்றாவது திருமணம் ஜானகி அம்மாள்
 1958ல் சத்திய தாய் இறந்துவிட்டார்
 1962ல் சதானந்தவதி இறந்து விட்டார்
 1962ல் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மா ராமாபுரம் தோட்டத்திற்கு தனிகுடித்தனம் போனார்கள்
 1986ல் அண்ணன் எம்.ஜி.சி. மறைவு
 
இரண்டாவது மனைவி சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது அந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் மனம் எப்படி இருந்து இருக்கும்? இதே சமயத்தில் அண்ணன் சக்கரபாணி அடுத்து அடுத்து குழந்தைகள் பெற்று வளர்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் அந்த குழந்தைகளை அவர் கட்டிபிடித்து கொஞ்சி மகிழ்வார்.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #50 on: January 28, 2012, 11:21:27 PM »
49. சில சோதனகைளும், மனவேதனைகளும்.



மக்கள் திலகம் அவர்களுக்கு 1955க்கு மேல் நல்ல நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட சில சோதனகைளும், மனவேதனைகளும்.
 
அதாவது 1957ல் மக்கள் திலகம் அவர்கள், சொந்தத்தில் தயாரித்த “நாடோ டிமன்னன்” படம் வெற்றிபெற்றால் மன்னன், இல்லையென்றால் நாடோ டி என்று உண்மையிலேயே பலரால் பேசப்பட்டது இருந்த சமயம், சிலர் மக்கள் திலகம் அவர்களிடம், நீங்கள் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வருகிறீர்கள். அதுவும் இது உங்களுடைய சொந்த படம் நிச்சயமாக நீங்கள் இதில் வெற்றி பெறுவீர்கள் என்றார்கள். படப்பிடிப்பு முடிந்து 1958ல் “நாடோ டி மன்னன்” மக்களை சந்திக்க வெளிவந்தார் வெற்றியும் கண்டார். அடுத்து இதே 1958ல் இவருடைய சொந்த நாடகத்தில் நடித்துக் கொண்டு இருக்கையில் கால் எலும்பு அடிபட்டு, பாதியிலேயே நாடகம் நிறுத்தப்பட்டது. பிறகு, நடக்க முடியாமல் மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில், மக்கள் திலகம் அவர்கள் இனிமேல் படங்களில் நடிக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டது. கால்முன்பு போல் நடக்கலாம் ஓடி ஆடி வேலை செய்கிற அளவிற்கு பழைய காலைப் போன்று இருந்தது. இதற்கு பிறகு, முன்பை விட அதிக படங்கள் ஒப்பந்தமானது.
 
அதற்கு பிறகு 1958ல் கடைசி மாதத்தில் தன்னுடைய தெய்வத்தாய், சத்தியத்தில் வாழ்ந்த தர்மத்தாய் சத்தியபாமா அவர்கள் இறந்து விட்டார்கள். இது அவருக்கு ஒரு பெரிய இழப்பு. இதற்கு பிறகு 1962ல் தன்னுடைய இரண்டாவது மனைவி சதானந்தவதி அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இந்த நேரத்தில் மக்கள் திலகத்துடைய மனம் எப்படி இருந்து இருக்கும். 1962க்குப் பிறகு மூன்றாவது மனைவியான ஜானகி அம்மாளுடன் எந்தக்குறைவும் இன்றி, ராமாபுரம் தோட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அதாவது சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் நல்ல அம்சம் நிறைந்த காலம் அது. அப்படிப்பட்ட அந்த நல்வாழ்வில் 1967ல் ஒரு பெரிய சோதனை ஏற்படுகிறது. அதுதான் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது. இந்த கொடூரமான சம்பவத்தை நினைத்து ஊரும், உலகமும் அனுதாபப்பட்டது. இரண்டே மாதத்தில் குணமடைந்து விட்டார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்று பேசியவர்கள் எல்லாம் ஆச்சரியப்படுகிற மாதிரி, மக்கள் திலகம் அவர்கள் நான் செத்துப் பிழைத்தவண்டா எமனைப் பார்த்து சிரித்தவண்டா என்பதனை போல் மீண்டும் அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #51 on: January 28, 2012, 11:22:21 PM »
50.அண்ணாவின் மறைவு ஏற்பட்ட வேதனை


1969-ம் ஆண்டு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத சோதனை ஏற்பட்டது. எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டம் என்றும் “தம்பி உன் முகத்தை காட்டினால் போதும் உன்னை என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்” என்று சொன்னவர் மக்கள் திலகம் அவர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, கடைசி கட்டத்தில் சென்னை அடையார் புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியத்திற்காக சேர்க்கப் பட்டு இருந்த சமயம், ஆஸ்பத்திரிக்கு வந்து அவர்களைப் பார்க்க வரும், வெளியூர் கட்சிப் பிரமுகர்கள் அத்தனை பேர்களுக்கும் மதிய உணவுக்காக சைவ சாப்பாடு, அடையாரில் உள்ள “சத்யா ஸ்டூடியோ”வில் பெரிய பந்தல் போட்டு பத்து சமையல்காரர்கள் நியமித்து சாப்பாடு போட்டார். அதாவது காலை, மதியம் ஆஸ்பத்திரிக்கு வந்து அண்ணாவைப் பார்த்து விட்டு மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராக இருக்கும். வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப்போவார்கள். இது வெளியூர்காரர்களக்கு மட்டும் இப்படி இரண்டு வாரம் நடந்தது. பிறகு, 1969 பிப்ரவரி மாதம் அண்ணா இறந்து போனார். அண்ணா அவர்கள் இறந்த நாளன்று, மக்கள் திலகம் அவர்கள் ஒவ்வொரு வருடமும் அன்று காலை, அவருடைய சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு பிறகு, அன்று முழுவதும் யாரிடமும் பேசமாட்டார். இரவு வரையிலும் சாப்பிட மாட்டார். இதே போல் அவரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட நாளன்றும் மெளனமாகவும், சாப்பிடாமலும் இருப்பார். இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயம்.
 
அண்ணாவுக்கு பிறகு அரசியல் மாற்றம்
 
அடுத்து மக்கள் திலகம் அவர்கள் 1972ல் தி.மு.கவில் இருந்து விலகி அண்ணாவின் பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சியை ஒரு நிலைக்கு கொண்டு வர, அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கு அளவே இல்லை. கட்சி ஆரம்பித்த அடுத்த வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் 1973-ல் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேதியும் அறிவித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மத்திய அரசான இந்திரா காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழக அரசான தி.மு.க. கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தனி கட்சி வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இந்தத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று, கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் எல்லாம் மக்கள் திலகம் அவர்களிடம் சொல்கிறார்கள். இதற்கு மக்கள் திலகம் ஒத்துக் கொள்ளவில்லை. காரணம், நாம் கட்சி ஆரம்பித்து மூன்று மாதம் தான் ஆகிறது. எப்படி நாம் வெற்றி பெற முடியும்? டெபாசிட் ஆவது நம்முடைய கட்சிக்கு கிடைக்குமா? வேண்டாம் இந்த விஷப்பரிட்சை. ஆரம்பத்திலேயே தோல்வி காண்பதா? இது கண்ணை மூடிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த மாதிரி. காங்கிரசும், தி.மு.க.வும் எவ்வளவு பெரிய கட்சிகள். மலைமீது மோதி, மண்டையை உடைத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது என்று மக்கள் திலகம் பேசி முடித்தவுடன் மற்றவர்கள் தலைவரே, நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஓட்டு நம்ம கட்சிக்கு இல்லை உங்களுக்குத்தான். நீங்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி. அந்த வேட்பாளர் ஜெயிக்கிறார் அல்லது இரண்டாவது இடத்திற்கு வருவார். இது உறுதி. எனவே எப்படியும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். தயவு செய்து எங்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள் தலைவரே. நமக்கு தேர்தல் பணியை செய்ய மன்றத்தின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக பெண்கள் ஓட்டு எல்லாம் நமக்குத்தான் மறுக்காதீர்கள் தலைவரே என்று ஒரே பிடிவாதமாக கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுடைய வேண்டுகோள். மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையாகி விட்டது. இது சினிமா படம் அல்ல, அரசியல். இதில் நாம் தோல்வி அடைந்தால் மிகக் கேவலமாகி விடும். ஆளும் கட்சி ஜெயித்தாலும் அதிலே நமக்கு பாதியாவது ஓட்டு கிடைக்கணும் என்ன செய்வது சரி எதுவானாலும் சந்திப்போம். நம்பிக்கை பெரிது என்ற மன உறுதியோடு புரட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்தில் இருபது நாட்கள் கலந்து கொண்டார். அடிக்கடி ஏற்பட்ட தி.மு.கவுடனான இடையூறுகளை எல்லாம் எதிர்த்து சமாளித்தார். தேர்தல் பிரச்சாரம் குருஷேத்திரப் போல் தர்மயுத்தம் போல் இருந்தது. அதில் தர்மர் புரட்சித் தலைவர். லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார். அந்த வேட்பாளரின் பெயர் மாயத்தேவர் (அட்வகேட்). இது ஒரு சுருக்கம்.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #52 on: January 28, 2012, 11:23:14 PM »
51.மக்கள் திலகம் கடுமையாக உழைத்தார்

அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1957ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.
 
மக்கள் திலகம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் 1947ல் இருந்து 1953வரை காங்கிரஸில் இருந்து காமராஜரை குருவாக ஏற்று கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்தவர். பிறகு, 1954ல் அண்ணாவினுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றார். அவருடைய வழியில் அரசியலில் முன்னேற்றம் அடைந்தார். திமுக அரசியல் பொதுக் கூட்ட மேடைகளில் மாநாடு மேடைகளில் பேச்சாளர் ஆனார். பிறகு, கட்சியின் தலைமைப் பொருளாளராக பொறுப்பு வகித்தார். இதே போல் சிறுசேமிப்புத் தலைவர். பிறகு, 1972ல் திமுக வில் இருந்து விலகி அண்ணா அவர்களுடைய பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவம் பதித்த கொடியை அமைத்தார். அவர் தனிகட்சி ஆரம்பித்த பிறகு 1977ல் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார். வருடத்திற்கு வருடம் அரசியலில் வெற்றி வாகை சூடிவந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1980ல் பெரிய சோதனை ஏற்பட்டது. 1980ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் தமிழக முதல் அமைச்சராய் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக கட்சி ஆட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எதிர்தரப்பில் திமுகவும் இந்திரா காங்கிரசும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிற 39 எம்.பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
இதில் அதிமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காங்கிரசம், திமுகவும் வள்ளல் எம்.ஜி.ஆர். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே அந்த அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்றத்திற்கு புதியதாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து 1980ல் மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சியை கலைத்து விட்டார்கள். அரசாங்கத்தை எந்த வித குறைகளும் இல்லாமல் நேர்மையோடு நடத்தி வந்த நம்மை கலைத்து விட்டார்களே என்ற கவலை இருந்தது. ஆயினும் எதையும் தாங்கும் இதயம் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் வரட்டும் மக்களை சந்திப்போம் என்ற விஷயத்தை தன் கட்சியில் உள்ள (பொறுப்பில்) அத்தனை பேர்களையும் அழைத்து பேசினார். தோல்வியே காணாத மக்கள் திலகம் அவர்கள் சற்றும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்போடு, மனதிடத்தோடு தேர்தலை பற்றி பேசினார். கட்சியில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஆட்சியைக் கலைத்த மூன்றாவது மாதத்திலேயே தேர்தலை வைத்து விட்டார்கள். இந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பிரச்சாரம் நடந்தது. இதில் திமுக, இந்திரா காங்கிரசும், இணைந்து போட்டியிட்டது. அதிமுக தனித்து போட்டியிட்டது மற்ற சில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்து கொண்டனர். மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பார்த்து நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் ஆட்சியை கலைத்தார்கள்? என்று நியாயம் கேட்டார். தேர்தல் முடிவில் பொதுமக்களின் நியாயம் புரட்சித் தலைவர் பக்கம் நின்றது. மீண்டும் மக்கள் திலகம் ஆட்சியில் அமர்ந்தார்கள்.
 
பிறகு 1984ல் நடந்த பொதுத் தேர்தலில், “நான் செத்துப் பிழைத்தவன்டா. மக்கள் மனதில் குடி இருப்பவன்டா” என்பது போல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து கொண்டே 1985ல் மூன்றாவது முறையாக முதல்வரானார். அண்ணாவுடைய தம்பிகள் ஐந்து பேர் 1963ல் மதுரையில் திமுக மாநாடு நடந்தது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக மக்கள் திலகம், வளையாபதி, முத்து கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஆர். கே.ஆர்.ஆர், டி.வி. நாராயணசாமி இவர்கள் அத்தனை பேர்களும் பிரபல சினிமா நடிகர்கள். இவர்கள் அப்போது திமுக வில் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து வந்தார்கள். கட்சியில் இவர்களுக்கு எந்த பதவியும் எதுவும் இல்லை. இந்த ஐந்து பேர்களும் கட்சித் தலைவர் அண்ணா அவர்களுடைய விசுவாசிகளாகவும், பக்தர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை அண்ணா தன் இதயத்திற்குள் வைத்துக் கொண்டார். பிறகு, ஒரு சமயத்தில் அண்ணா அவர்கள் நாராயணசாமி, ராமசாமி, வளையாபதி, முத்துகிருஷ்ணன். இவர்கள் அண்ணா அவர்கள் கதை, வசனம் எழுதிய சினிமா, நாடகங்களில் நடித்தவர்கள். இவர்களை தன்னுடைய வலது, இடது கரமாக வைத்து இருந்தார். ஆனால், வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களை தன் இதயத்திலேயே வைத்துக் கொண்டார். மேலும் எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றும் சொன்னார். 1963ல் மதுரைக்கு மாநாட்டுக்கு சென்று இருந்த இந்த ஐந்து பேர்களும், மாநாட்டுப் பந்தலுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்கள், அண்ணன் தம்பிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டது போல் இருந்தது. இந்த நேரத்தில் திடீரென்று வளையாபதி முத்து அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது என்றுமே, எங்கேயும் இப்படி ஒரே இடத்தில் சந்தித்தது அல்ல. இப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு மாநாட்டு விழாவை போட்டோ எடுக்க வந்திருந்த போட்டோ கிராபரை வளையாபதி அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த மற்ற நால்வரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே இந்த ஐந்து பேரும் வரிசையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இந்த ஐந்து பேர்களும் நாடகத் துறை, சினிமா துறையில் அப்போதைய முன்னணி நடிகர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா இதயத்தில் “இதயக்கனி” ஆக இருப்பவர் மற்ற நால்வரும் அண்ணாவின் அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிட்டதக்க விஷயம்.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #53 on: January 28, 2012, 11:24:08 PM »
54.40 ஆண்டுகால நண்பர்கள்

ஆரம்ப காலத்தில் சேலம், கோவை சென்னையில் சினிமா சம்பந்தமாக இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். அதிலிருந்து, சினிமா, அரசியல் இதில் இந்த இருவருக்கும் பெரிய ஒற்றுமை ஏற்பட்டது. நல்ல நட்புடன் இருந்த இந்த இருவருக்கும் 1972ல் கட்சி கணக்கு வரவு செலவு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணக்கு கேட்பவர் மக்கள் திலகம். வரவு செலவு கணக்கை சொல்ல மறுத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பிறகு, கணக்கு கேட்டவர் அண்ணா தி.மு.க. என்ற பெயரில் தனிகட்சி ஆரம்பித்துவிட்டார். இவர் 10 வயதிலேதான் படித்த பள்ளிக் கூடத்தில் (கும்பகோணம்) குடி தண்ணீர் பானை வாங்கிய விஷயத்தில் கணக்கு கேட்டவர். இவர் போட்ட கணக்கை கடைசி வரை யாராலும் அழிக்க முடியவில்லை. இவருடைய கணக்குபடி வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தவர். இவருடைய மறைவுக்குப் பிறகும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக்கு 40 ஆண்டு கால நண்பர் என்று அடிக்கடி சொல்வார் கலைஞர் அவர்கள்.
 
மனித நேயம் உள்ள மக்கள் திலகம்
 
ஏறத்தாழ 1960-61 ஆம் ஆண்டில் கை வண்டி இழுப்பவர்களுக்கும், கைரிக்ஷா இழுப்பவர்களுக்கும் காலுக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தவர். அதோடு மட்டுமில்லாமல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு மழையில் நனையாமல் இருக்க மழைக்கோட்டு கொடுத்தவர். ஒரு காலத்தில் மனிதனை உட்கார வைத்து, மனிதனே இழுப்பதா, மாட்டைப்போல் மனிதன் வண்டி இழுப்பதா, என்ற கேள்வியை எழுப்பியர் மக்கள் திலகம் அவர்கள்.
 
முயற்சியை கைவிடாதே, முயன்றால் முடியும் என்று வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்படும் நேரங்களில் இந்த சொல் அவருடைய அறிவில் தோன்றும். விதி யாரை விட்டது. அது யாராக இருந்தாலும் விடாது. ஆனால், மக்கள் திலகம் அவர்கள் தனக்கு சோதனை ஏற்படும் போது மட்டும் கடவுளை நினைப்பார். இந்த மூன்று எழுத்து கொண்டவர். முப்பிறவி எடுத்தவர். மூன்று முறை முதல் அமைச்சரானவர். அண்ணா என்ற மூன்று எழுத்துக்காரரிடம் அரசியல் கற்றுக் கொண்டவர். மூன்று எழுத்துள்ள கட்சியில் இருந்து விலகி மூன்றும் மூன்றும் ஆறு எழுத்தில் தனிக்கட்சி ஆரம்பித்தவர். இந்த மூன்று எழுத்துக்காரருக்கு மூச்சு நின்ற பிறகும் மூன்று எழுத்து மறையவில்லை.

                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #54 on: January 28, 2012, 11:25:31 PM »
53.மக்கள் திலகம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்கள்


மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணம் அனையடி பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடப் பிள்ளைகளுடன் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றி மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விபரம் இது. அதாவது நீரில் நீந்தி விளையாடுவது, சடுகுடு விளையாடுவது, கிட்டி அடிப்பது, அதுதான் தற்போது கிரிகெட் பந்து விளையாடுவது, புட்பால் விளையாடுவது அந்த காலத்தை நினைத்து மிக பெருமையோடு சில சமயங்களில் பேசுவார். 1962ல் ராமாபுரம் தோட்டத்தில் தனக்கென்று ஒரு தனிவீடு கட்டும் போது, தான் நீந்திக் குளிக்க ஒரு நீச்சல் குளம் கட்ட சொன்னார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நிச்சல் குளத்தில் குளிப்பார். வாரத்தில் ஒரு முறை தண்ணீர் மாற்றப்படும். அடுத்து கிரிக்கெட், இந்த கிரிக்கெட்டை பெரிய அளவில் பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடுகின்ற காலத்தில், இந்த கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்க்க மிக ஆசைப்பட்டார். அதற்காக டெல்லி, பாம்பே போகமாட்டார். சென்னையில் விளையாடும் போது நேரில் பார்க்கத் தவறமாட்டார்.
 
இதில் 1974 ஆம் ஆண்டில் சென்னையில் விளையாடும் போது அப்போது திமுகவின் ஆட்சி நடந்த சமயம் முன்னதாகவே டிக்கெட்டு வாங்கிக் கொண்டார். அது 5வது நாள் ஆட்டம். இவர் முதல் நாள் விளையாட்டு மைதானத்திற்கு போகும்போது, நம்பர் படி இவருடைய இருக்கையில் வேறு சிலர் அமர்ந்து இருந்தார்கள். அது சமயம் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவர்கள் தனது இருக்கையில் இருந்தவர்களை எழுந்து கொள்ள சொல்லாமல் அவர்களுக்குப் பின்புறம் காலியாக இருந்த இருக்கையில் பெருந்தன்மையோடு போய் அமர்ந்தார். இவர் உள்ளே நுழைந்த உடனே எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர். என்று ஒரே சலசலப்பு ரசிகர்கள் இடையில் ஏற்பட்டது. பிறகு 1/2 மணி நேரத்தில் எழுந்து புறப்பட்டு வந்து விட்டார் மாம்பலம் அலுவலகத்திற்கு காரணம், தனகென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு ஆட்கள் அமர்ந்திருந்தது. மற்றொன்று ரசிகர்களுடைய சலசலப்பு. மாம்பலம் அலுவலகத்திற்கு வந்தவுடனே தன்னுடன் கிரிக்கெட் பார்க்க வந்த ஒரு முக்கிய நண்பரிடம், உடனே ஒரு டி.வி. வாங்க வேண்டும் என்றார். அவரும் சற்றும் தயங்காமல் மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டையில் உள்ள ECTV கம்பெனியில் கறுப்பு – வெள்ளை பெரிய சைஸ் டி.வியை வாங்கி வந்து விட்டார். கூடவே, அந்தக் கம்பெனி ஆட்கள் வந்து, இணைப்புகளைக் கொடுத்து டி.வியை இயக்கி வைத்தார்கள். இதெல்லாம் ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது. மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். எந்தத் தொந்தரவும் இல்லாமல் நண்பர்களுடன் டி.வி.யில் கிரிக்கெட்டை பார்த்து மகிழ்ந்தார். இதே போல் தோட்டத்திலும் டி.வி. ஏற்பாடு செய்யப்பட்டது. 1974ல் தான் முதல் முதலாக சென்னை நகருக்கு டி.வி. வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு மக்கள் திலகம் அவர்கள் கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கையில், படப்பிடிப்பிலோ அல்லது வேறு எங்கேயாவது போக நேர்ந்தால், கையில் சிறிய ரேடியோ வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையை கேட்பார்.
 
அதுவும் முடியாவிட்டால் மாம்பலம் அலுவலகத்தில் உள்ள டி.வி.யை போட்டு கிரிக்கெட்டை பார்த்து அவர் எங்கே இருக்கிறாரோ அங்கு ஆட்டத்தின் விபரத்தை போனில் உடனுக்குடன் சொல்ல வேண்டும். பொதுவாகவே மாம்பலம் அலுவலகத்தில் நானும், மற்றொருவரும் இருப்போம். இதில் எப்படியும் ஒருவர் இரவு, பகலாக இருந்து அலுவலகத்தை கவனித்துக் கொள்வோம். மக்கள் திலகம் அவர்கள் முதல்-அமைச்சரான பிறகு, பொதுவாகவே இம்மாதிரி விளையாட்டுத் துளைகள் மீது மிகவும் அக்கறை செலுத்துவார். 1983ல் கிரிக்கெட் உலகச் சாம்பியனுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், கலந்து கொண்டு விளையாடியதற்காக அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் ஒரு வீட்டு வசதி வாரியத்தின் பேரில் ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அது சமயம், ஸ்ரீகாந்த் அவர்கள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, இவர் விளையாடிய கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்தார். ஏனென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கிரிக்கெட் ரசிகர் என்பதை நன்கு அறிவார். அந்தக் கிரிக்கெட் மட்டையை மக்கள் திலகம் அவர்கள் மிக பத்திரமாக தன் வீட்டில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பிறகு, அந்த கிரிக்கெட் மட்டையை, தற்போது நினைவு இல்லத்தில் ஒரு அலமாரியில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதற்காக வாங்கிய டி.வி யையும் பொதுமக்கள் பார்வைக்காக அவரது அலுவலக அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியம் வாய்ந்த விஷயம்.

                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #55 on: January 28, 2012, 11:28:59 PM »
55.தனி அலுவலகம்


மக்கள் திலகம் அவர்களுக்கு 1970ல் சென்னை தி.நகர் பகுதியில் ஆற்காடு முதலியார் என்ற தெருவில் ஒரு கட்டிடம் வாங்கி அதை தன்னுடைய தனி அலுவலகமாக வைத்து, தன்னை நேரில் பார்த்து பேசனும் என்று சொல்பவர்களை எல்லாம் தனக்கு சூட்டிங் நேரங்களை அனுசரித்து இந்த ஆபிசுக்கு வரச்சொல்வது வழக்கம்.
 
ஆரம்பத்தில் படிக்க வசதியில்லாத மக்கள் திலகம், பிறகு ஒரு பட்டப்படிப்பு படித்த ஒரு பட்டதாரி போல் கல்வி பயின்றுள்ளார் (தனிப்பட்ட) முறையில் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மக்கள் திலகம் அவர்கள் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரைதான் அன்றைய சூழ்நிலையில் படிக்க முடிந்தது. பிறகு, அவர் வேலை செய்யும் காலத்தில் முடிந்த வரையில் தமிழும், அங்கிலமும் படித்தார். ஒரு மனிதன் வாழ்வில் உயர்ந்த புகழ் அடையவேண்டும் என்றால் உயர்கல்வி படிக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஓர் அளவிற்காவது படித்திருக்க வேண்டும்.
 
அந்தக் காலத்தில் எல்லாம், அனைத்து வீடுகளிலும் அவ்வளவாக மின்சார வெளிச்சம் இருக்காது. நாங்கள் கும்பகோணம், காரைக்கால் இங்கே எல்லாம் நாங்கள் குடியிருந்த போது மண்ணென்ணை விளக்குத்தான் சென்னைக்கு வந்த பிறகு தான் மின்விளக்கு உள்ள வீடு கிடைத்தது. நான் இரவு நேரங்களில் தெருவில் உள்ள விளக்கின் வெளிச்சத்திலே படித்துள்ளேன். அப்போதெல்லாம் குண்டு பல்புகள் தான் மெர்க்குரி (Mercury) டியூப்லைட்கள் எல்லாம் கிடையாது. நாடகக் கொட்டையில் எல்லாம் பெரும்பாலும் பெட்ரோமாஸ் விளக்குதான். ஒலி பெருக்கி இருக்காது. கத்தித்தான் பேசணும், பாடனும். எப்படியோ நானும் பத்துப் பதினைந்து வரை படித்தவர்கள் போல் கல்வி அறிவு பெற்றுள்ளேன். எனக்கு கல்வி அறிவில் உள்ள ஆர்வத்தில்தான், இப்போது இவ்வளவு புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கி வைத்து இருக்கிறேன். என்று, 1976ல் மாம்பலம் அலுவலகத்தில் ஒரு அரசியல் பிரமுகரிடம் மக்கள் திலகம் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #56 on: January 28, 2012, 11:32:43 PM »
56.டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்


மக்கள் திலகம் அவர்கள் மிக ஆர்வத்தோடு ராமாபுரம் தோட்டத்து வீட்டிலும், மாம்பலம் அலுவலகத்திலும் சேர்த்து வைத்துள்ள புத்தகங்கள் அதிகம் அதில் தமிழ் மட்டும் 3244 ஆங்கிலம் 674 புத்தகங்கள், இதில் (Encyclopaedia) என்சைக்ளோபீடியா போன்ற இன்னும் எத்தனையோ முக்கியமான புத்தகங்களும் இதில் அடங்கும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் தமிழ் அகராதி இப்படி இன்னும் எத்தனையோ விதமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை “டாக்டர். எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”த்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய காலத்துப் பல நாட்டு நாணயங்களும், அதாவது 1763 ஆண்டு முதல் 1968 வரை உள்ள இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ், ஆகிய நாடுகளுடைய நாணயங்கள் சுமார் 100 நாணயங்கள் இதை மக்கள் திலகம் மிக ஆசையோடு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இப்போது இந்த நாணயங்கள் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதே போல் அவர் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்) மிக மிக பிரியத்துடன் வளர்த்த சிங்கம், 1968ல் அவரது சொந்தப் படமான “அடிமைப்பெண்” நடிப்பதற்காக பாம்பேயில் இருந்து வாங்கி வந்த சத்யா ஸ்டியோவில் ஒரு பெரிய அளவில் கூண்டு அமைத்து, அதில் மாலை, இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அடிமைப்பெண் படத்தில் அந்த சிங்கத்தோடு சண்டை போடும் காட்சிப் படமான பின்பு மிருகக் காட்சி சாலையில் வைத்து இருக்கும் படி கொடுத்து விட்டார். அந்த சிங்கத்திற்கு வேண்டிய சாப்பாட்டு செலவுக்கான பணத்தை மாதாமாதம் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கி வந்தார். பிறகு, அந்த சிங்கம் 1974ல் இறந்து விட்டது. சிங்கம் இறந்த தகவலை உடனடியாக மக்கள் திலகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். இந்தச் செய்தியை கேட்டவுடன் மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் திலகம் சென்று பார்த்தார். பிறகு உடனே அந்த சிங்கம் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அதே போலவே “பாடம்” செய்து தர வேண்டும். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று மக்கள் திலகம் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, அந்த சிங்கத்தை பாம்பேயில் இருந்து நல்ல நிபுணர்களை வரவழைத்து, அவர் விரும்பியபடியே மிகப் பிரமாதமாக அமைத்துக் கொடுத்தனர். உயிர் இல்லாத அந்த சிங்கத்தை தனது ராமாபுரம் தோட்டத்து வீட்டில் ஒரு பெரிய கண்ணாடிக்குள் அந்த சிங்கத்தை வைத்து மக்கள் திலகம் அவர்கள் மாடிக்குச் செல்லும் வழியின் கீழ்ப்பகுதியில் வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்கள் வெளியே போகும் போதும், வரும் போதும் அவருடைய பார்வைக்குப்படும் படியாகவும் வைத்திருந்தார்.
 
பின்னர் மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்த சிங்கம் உட்பட தோட்டத்து வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இந்த நினைவு இல்லத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. நினைவு இல்லத்தில் மக்கள் திலகம் பெற்ற ஆயிரக்கணக்கான பரிசுப் பொருட்களுடன் அவர் உபயோகப்படுத்திய பொருட்களும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் விரும்பி சுமார் பத்து வருடங்களாக உபயோகப்படுத்திய அம்பாசிடர் காரும், மற்றும் 7அடி நீளம், 4 அடி உயரம். பெயர் ராஜா என்ற சிங்கமும் நினைவு இல்லத்தில் மிக முக்கியமான பொருட்களாகப் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடமானது 1970ல் இருந்து 1987வரை அலுவலமாக இருந்தது. இந்த கட்டிடம் வள்ளலுக்கு ராசியான ஒன்றாகும். அதனால் தான் அவருக்குப் பிறகு, இதை நினைவு இல்லமாகத் தொடங்க வேண்டும் என்று அவரே எழுதியிருக்கிறார். இந்தக் கட்டிடம் தற்போது உலகம் முழுவதும் தெரிந்த ஒரு இடமாகி உள்ளது.
 
மக்கள் திலகம் அவர்கள் அவர்களுடைய சுய சம்பாதியத்தில் வாங்கிய சொத்துக்களில் முக்கியமாக, “ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டம்”, அடையார் சத்யா ஸ்டூடியோ இவை இரண்டும் அவருக்கு மிக முக்கியமான சொத்துக்கள் ஆகும். இதில் அவர் வாழ்ந்த இடம் ராமாபுரம் தோட்டத்தின் ஒரு பகுதியில் காது கேளாத, வாய்பேச இயலாத குழந்தைகளுக்காக பெருமளவில் தங்கிப் படிக்கும் வசதியோடு உணவோடு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அந்தப் பள்ளியில் 300 குழந்தைகள் படிக்கிறார்கள். அடுத்து அவர் சொந்தமாக வாங்கிய மிகப் பிரபலமாகவும் விளங்கிய அடையாறு சத்யா ஸ்டூடியோவில் “எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலைக்கல்லூரி” என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கிறார்கள். மங்காத புகழ் பெற்ற மக்கள் திலகம் அவர்களது வரலாற்றில் இது ஒரு சான்றாகும்
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #57 on: January 28, 2012, 11:38:19 PM »
57.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நீரும் – நெருப்பும்


மக்கள் திலகம் கோபத்தில் நெருப்பாய் இருப்பாரமே? என்று சிலர் கேட்பதுண்டு. அப்படி அவர் நெருப்பாய் இருந்தாலும், உடனே நீராகி விடுவார். நெருப்பிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று பார்த்தால், அது மிகவும் எல்லாவற்றுக்கும் மிக உயர்ந்தது. ஆனால் அதனிடம் யாரும் கோபம் வரும்படி நடந்து கொள்ளக் கூடாது. சூரியன் தான் நெருப்பு. சந்திரன் தான் நீர். நீரும்-நெருப்பும் இல்லை என்றால் உலகம் இல்லை அதாவது வெளிச்சம் இருட்டு இவை இரண்டும் ஜீவராசிகளுக்கும், உலகத்தில் உள்ள மனிதனுக்கும் தேவையானதாகும். இதில் இருட்டு எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் திலகம் அவர்கள் சொன்ன உதாரணங்கள் பின்வருமாறு.
 
நெருப்பு எப்போதுமே சூடாகத் தான் இருக்கும் அதனைத் தொட்டால்தான் சுடும். அது போலவே தான் மக்கள் திலகமும். கோபம் யாருக்குத் தான் வராது. உலகினில் வாழும் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கோபம் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதோடு மட்டுமில்லாமல், இருட்டு என்பது நம்மிடம் உள்ள ஒன்றாகும். வெளிச்சம் என்பது நாம் உண்டாக்கிக் கொள்ளும் ஒன்றாகும். கண்ணை மூடினால் இருட்டு. கண்ணைத் திறந்தால் வெளிச்சம் இதை ஒன்றுமே அறியாதவர்கள் பார்வையற்றவர்கள். இயற்கை என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகும் என்று கூறுவார்.
 
1974ல் மாம்பலம் அலுவலகத்தில் ஒரு முக்கியஸ்தர் கேட்ட கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில்கள். நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம். என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #58 on: January 28, 2012, 11:39:23 PM »
58.வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் “அடிமைப்பெண்” இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் “25 நாட்கள்” நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
 
அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மேகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புறட்டிப் புறட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
 
சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். “அடிமைப்பெண்” படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.
 
தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது. மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள். “சத்யா ஸ்டுடியோ”வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார். பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால் எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.
 
தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை “மேக்அப்” அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம். தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார். பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார். மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.

                    

Offline Global Angel

Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #59 on: January 28, 2012, 11:40:58 PM »
59.மக்கள் திலகமும் மாவீரன் ஜேப்பியாரும்


இவர் 1972ல் மக்கள் திலகம் அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் மக்கள் திலகம் அவர்களை சந்தித்துப் பேசி அண்ணா திமுக கட்சியில் சேர்ந்தார். கட்சியில் யார் சேர்ந்தாலும் அவர்கள் கட்சியில் உறுப்பினர் ஆக வேண்டும். பிறகு, நான் ஒரு உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் மக்கள் திலகம் அவர்கள் கட்சிக்கு முதல் உறுப்பினர். உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் இருக்கும். அந்த விண்ணப்பப் படிவத்தில் அண்ணா அவர்களுடைய உருவப்படம் மட்டும் இருக்கும். அந்த விண்ணப்பப்படிவத்தில் மொத்தம் 25 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம். பிறகு நம்பர் படி அடையாள அட்டை கொடுக்கப்படும். இதில் புரட்சித் தலைவருடைய விண்ணப்பப்படிவத்தில் அவர்களுடைய பெயரும் இருக்கிறது. வயது 33 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். 1973ல் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவர் அரசியலில் மிகவும் சுறுசுறுப்பானவர். 1973ல் திண்டுக்கல் இடைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் மிகவும் ஈடுபட்டவர். புரட்சித் தலைவர் பேசும் மேடைகளில் இவரும் பேசுவார். அப்போதைய தமிழ்நாட்டை ஆளும் கட்சியினரான (திமுக)வினர் மிகவும் அராஜகமாக ஈடுபட்டார்கள். இதில் சென்னை நகரம் முழுவதும் இவர்களுடைய ஆட்சியாகவே இருந்தது. இதை எல்லாம் மக்கள் திலகம் அவர்கள் மிகவும் அமைதியாகச் சமாளித்தார். எதற்கும் அஞ்சாமல் சென்னை நகர அண்ணா திமுக வினர் மிகத் திறமையாகச் செயல்பட்டனர். வீரகோஷம் போட்டார்கள். நியாயமான சில போராட்டங்களை நடத்தினார்கள். தன்னுடைய அரசியல் ஆசான் புரட்சித் தலைவரை அடிக்கடி சந்தித்து அரசியலை பற்றி பேசுவார். இப்படி அவர்கள் இவன் நல்ல ஒரு அரசியல் வீரனாக வருவான் வயது 35 என்று சிலரிடம் சொல்வார்.
 
இப்படி கட்சி விஷயமாக அவர்களை அழைத்துப் பேசுவதும், சில சமயங்களில் கட்சி, கூட்டத்திற்கு போகும் போது வெளியூர்களுக்கு இவரை கூடவே அழைத்துச் செல்வதும் உண்டு. 1975ல் திமுகவினருக்கு இவர் மீது மிகவும் பொறாமையாக ஏற்பட்டு, இவரை எப்படியாவது அடக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அந்தக் கட்சி தலைவரிடம் சொல்லி இவர் மீது ஒரு பொய் வழக்கைபோட்டு அபாண்டமாக இவரை சிறையில் அடைத்தார்கள். ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, இதை அறிந்த, புரட்சித் தலைவர் அவர்கள் கோபப்படாமல் மிக அமைதியாக இருக்கும் படி அதிமுகவினர்களுக்கு உத்தரவு இட்டார். மிக விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் கவலைப்படாதீர்கள். தினமும் நீங்கள் சிறைக்கு சென்று, அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லி வாருங்கள் என்று கட்சியில் உள்ள எல்லா பொறுப்பாளர்களிடமும் சொன்னார். அதன்படி தினமும் சிறையின் முன், வாசல் முன் ஜே.ஜே. தான். சிறையில் இருக்கும்போது எந்தக் குறையும் இல்லாமல், அப்போதுள்ள சில சிறை அதிகாரிகள் கவனித்து வந்தார்கள். அவர் தன் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் கட்சிக்காக நான் எவ்வளவு நாட்கள் ஆனாலும், பரவாயில்லை நான் சிறையில் இருக்கிறேன் என்று சிறைக்குள் இருந்து வீர முழக்கம் இட்டார். இவருடைய குடும்பத்தில் மனைவியும், 10 வயதிற்குள் இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் தான். இவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் புரட்சித் தலைவர் அவர்களே நேரடியாக கவனித்து வந்தார்.
 
இதற்கு முன்னதாகவே 1973ல் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுவை, சென்னை கவர்னர் அவர்களிடம் கொடுத்து இரு மாபெரும் பேரணியாக சென்று (பொதுமக்கள் ஆதரவுடன்) கொடுத்தார். பிறகு கலைஞர் கருணாநிதியை 1976ல் முதல்வர் பதவியில் இருந்து இறக்கினார்கள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், மத்திய அரசால் அவசர சட்டப் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சிறையில் இருந்த ஜேப்பியார் அவர்கள் விடுதலை ஆகிவிட்டார். 1977ல் தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நடக்கின்ற காலத்தில் தமிழ்நாட்டின் எல்லாத் தொகுதிகளுக்கும் அண்ணா திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளி சுற்றுப் பயணமாக மக்கள் திலகம் அவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார் கூட பிரச்சாரத்திற்கு அவரையும் அழைத்து சென்றார். இந்தத் தேர்தலில் அண்ணா திமுக கட்சி அமோக வெற்றி பெற்றது. 30.6.1977ல் ஆட்சி அமைத்தது புரட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சர் ஆனார். இப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் போகும் போது ஜேப்பியாரையும் அழைத்துச் செல்வார். மக்கள் திலகம் மறைந்த பிறகு, அறவே அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார் ஏன்? இவர் புரட்சித் தலைவர் ஆசியோடு அவரிடம் நேரடியாக கட்சி உறுப்பினர் ஆனவர் புரட்சித் தலைவரிடம் அரசியல் கற்றுக் கொண்டவர் ஆசானாக ஏற்றுக் கொண்டவர்.
 
புரட்சித் தலைவரின் மனதைத் தொட்டவர் அரசியலில் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். எல்லா அரசியல் வாதிகளுக்கும், பொது மக்களுக்கும் அறிமுகமானவர். புரட்சித் தலைவர் ஆட்சியில் இவருக்கு பொறுப்பு கொடுத்தார். பிறகு, சென்னை குடி நீர்வாரியத் தலைவர் பதவியும் கொடுத்தார். மொத்தத்தில் புரட்சித் தலைவர் தன்னுடைய சொந்தக் காரராக வைத்திருந்தார். மக்கள் திலகம் அவர்களுடைய மனதில் சென்னையில் ஒரு பள்ளிக் கூடம் கட்ட வேண்டும் சொந்தத்தில் ஸ்டுடியோ வாங்க வேண்டும் ஆஸ்பத்திரி நடத்த வேண்டும் மருத்துவக் கல்லூரி இன்சினீரியங் கல்லூரி கட்ட வேண்டும் என்ற எண்ணப்படி எல்லாமே நடந்தது. 1960ல் வடபழநியில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் விருகம்பாக்கம் சத்யா தோட்டத்தில் ஒரு சிறிய ஆஸ்பத்திரி அடையாரில் ஸ்டூடியோ (சத்யா) பிறகு, மக்கள் திலகம் குடியிருக்கும் ராமாபுரம் தோட்டத்தில் இருந்து பூந்தமல்லி என்ற ஊருக்கு போகும் வழியில் நெடுஞ்சாலைக்கு அருகாமையில் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கட்டப் பட்டது. இதன் பெயர் “ராமச்சந்திரா மருத்துவமனை”. இந்த மருத்துவமனையை மக்கள் திலகம் நினைத்த மாதிரி எல்லா வைத்திய வசதியும் கொண்ட ஆஸ்பத்திரி ஒரு பெரிய அளவில் கட்ட முன் வந்தார் ஒரு பெரிய மாமனிதர்.
 
அவர்தான் ராமசாமி உடையார் இந்த மருத்துவமனையை கட்டி முடித்த பிறகு இதன் திறப்பு விழாவுக்கு சென்று இருந்த மக்கள் திலகம் அவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. கடவுள் அருள்பெற்று பெரும் வள்ளல் ஆனார். விதவிதமான பட்டங்கள் பெற்றார். ஆனால் இவர் நினைத்ததில் ஒரு விஷயம் மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அதுதான் இன்ஜினியரிங் கல்லூரி அது மக்கள் திலகம் அவர்களுடைய மறைவுக்கு பிறகு சென்னையிலிருந்து மகாபலிபுரத்திற்கு போகும் வழியில் பிரம்மாண்டமாக இரு இன்ஜினியரிங் கல்லூரி கட்டப்பட்டு அதற்குப் பெயர் “அன்னை சத்தியபாமா” இது மக்கள் திலகம் அவர்களுடைய தாயாருடைய பெயர் இந்தக் கல்லூரியை கட்டி இதை மிக சிறப்பாக, இந்தியாவே புகழும் அளவிற்கு நடத்தி வருபவர்தான் இந்த மாமனிதர் அவர்கள் இதைப் போல் பொறியியல் கல்லூரி சென்னை நகருக்கு அடுத்துள்ள மதுரவாயல் என்ற இடத்தில் மிகப் பெரிய அளவில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியுடைய நிறுவனர் மக்கள் திலகம் அவர்களுடைய அன்புத் தம்பிகளில் ஒருவரான திரு. ஏ.சி. சண்முகம் அவர்கள். மக்கள் திலகம் அவர்களுடைய வரலாற்றில் வரும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
இவருக்கு இரண்டு மகன்கள் சோமசுந்தரம், குமார் ஆகிய இவர்கள் இருவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவர்கள். 1960லிருந்து பிறகு 1973ல் அண்ணா திமுகவில் கட்சியின் உறுப்பினர் ஆனார்கள். இவர்கள் பக்கத்து வீட்டில் வசித்தது மக்கள் திலகம் அவர்களின் (மாம்பலம்) அலுவலகத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இவர்களைத் தவிர மக்கள் திலகம் இந்தத் தெருவில் உள்ள யாரிடமும் பழக்கம் வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் திலகம் அவர்களுக்கு இந்த (மாம்பலம்) அலுவலகம் மிகவும் ராசியாக விளங்கியது. இதில் சினிமா, அரசியல், அரசாங்கம் ஆகிய மூன்று துறைகளையும் மிகச் சிறப்பாக நடந்தது. தனக்கு ராசியான இந்தக் கட்டிடக் கதவு எண் 18 ஆகவும் பிறகு 27 ஆகவும் இருந்தது. மக்கள் திலகம் அவர்கள் பிறந்த ராசிப்படி ராசியான எண்ணாக ஒன்பது தான். ஆனால் அவர் ராசி எண்ணை 27-18 என்ற எண்களை இன்று வரை மாற்றவில்லை. தனது இஷ்டமான எண்ணாகக் கருதிய 7வரும்படி போன் நம்பர்கள் வைத்துக் கொண்டார். 442222 இதே போல் தன்னுடைய கார்களுக்கும் நம்பர்களைக் கூட்டினால் 7 வரும்படி அமைத்துக் கொள்வார்.
 
இதில் அவர் 1956ல் முதன்முதலாக புதிய கார் “பிளைமெளத்” பெரிய கார் வாங்கி அதற்கு 2248 என்ற நம்பருடன் வாங்கினார். அந்தக் காருக்குக் கருப்பு சிகப்பு பெயிண்ட் அடிக்கச் சொன்னார். அப்போது மக்கள் திலகம் அவர்கள் திமுக வில் அண்ணாவுடைய பக்தராக இருந்தார். இந்தக் கருப்பு சிகப்பு நிறமுள்ள 2248 பிளைமெளத் கார் ஸ்டூடியோக்களுக்குள் நுழையும் போது ஒரே பரபரப்பாக இருக்கும். காலம் காலமாக அரசியல் தலைவர்கள் காருக்கு யாருக்கும் இந்த மாதிரி தன்னுடைய கட்சிக் கொடியின் நிறத்தை தனது காருக்கு அடித்தது இல்லை. வேட்டி கரை, துண்டு இவைகளில் மட்டும் தான் அந்தக் கட்சிக் கொடியின் நிறம் இருக்கும். இந்தக் காரில் கட்சிக் கொடி நிறம் இருப்பதைப் பார்த்து அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். காருக்கு பிறகு சில முக்கியஸ்தர்களின் யோசனையின் படி கருப்பு, சிகப்பு கலருக்கு பதிலாக காருக்கு வேறு நிறமாக வெள்ளை, இளம்பச்சை பெயிண்ட் அடித்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வாழ்ந்த வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து, எங்கே எல்லாம் நடந்து சென்றாரோ அங்கே எல்லாம் காரில் செல்ல வேண்டும் என்று கனவு கண்டார். பிளைமெளத் காருக்கு அடுத்து ஒரு அம்பாசிடர் கார் வாங்கினார். அந்தக் காருக்கும் நம்பர் 9655 நம்பர் அதுவும் ராசி நம்பர் 7. பிறகு 1976ல் புதியதாக வேறொரு அம்பாசிடர் கார் வாங்கினார். அந்தக் காருக்கு நம்பர் TMX 4777 ஆகும். இதுவும் அவருடைய ராசி எண் 7. இந்தக் கார் வாங்கிய பிறகு ஏசி வசதி செய்யப்பட்டது. பின், எங்கு சென்றாலும் இதில்தான் போவார். மக்கள் திலகம் தமிழக முதலமைச்சர் ஆன பிறகு இந்தக் காரைத் தவிர வேறு எந்தக் காரிலும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1976ல் இருந்து 1987 டிசம்பர் மாதம் வரை இந்தக் காரைப் பயன்படுத்தினார். அப்போதைய மாம்பலம் எம்.ஜி.ஆர். அலுவலகம் என்பதுதான் இப்போது “டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவு இல்ல”மாகத் திகழ்கிறது. அந்த TMX 4777 காரை இந்த நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அயிரக் கணக்கான பொருட்களில் இந்தக் கார் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இப்படி வள்ளலுடைய வரலாற்றில் இந்த மாம்பலம் அலுவலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளது. அதனால்தான் இந்த அலுவலகக் கட்டிடத்தை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று வள்ளல் அவர்கள் கூறி உள்ளார்கள். இந்த நினைவு இல்லத்தைக் காண்பதற்கு தினமும் ஆயிரக் கணக்கான பேர்கள் வந்து போகிறார்கள். இதில் எல்லா அரசியல்வாதிகளும் பாகுபாடு இன்றி வருகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களும், உள்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்தும் பல மதத்தினரும் மதவேறுபாடு கருதாமல் வந்து செல்கிறார்கள். இது அவருடைய வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.