Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 31721 times)

Offline Global Angel

சித்ரா ஹிட்ஸ்
« on: January 21, 2012, 03:03:34 AM »
படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா


ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
(ஏஞ்சல்..)

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே
உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ஆஹா
இனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்துவிட வா
உந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே
(நீருக்குள்..)
(ஏஞ்சல்..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #1 on: January 21, 2012, 03:04:12 AM »
படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா

 



தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எறியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
(தங்க..)
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத்தாழ்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா
(தங்க..)

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தா மருதாணி
பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென் பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
(தங்க..)

தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்த காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மன வானில் விழ வேண்டும் விழி தான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
எனை மாற்றீ விடு
இதழ் ஊற்றிக் கொடு
(தங்க..)

 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #2 on: January 21, 2012, 03:04:59 AM »
படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


ஹேய் ஸ்டைல் ஸ்டைல்

ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சுமீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பிகநு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சுமீ
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி
(ஸ்டைலு..)

காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே
(ஸ்டைலு..)

பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே
அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சன் கொண்டால் தலையணையும் தூங்காதே
அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு
(ஸ்டைலு..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #3 on: January 21, 2012, 03:05:47 AM »
படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: சித்ரா


என் ஆயுளின் அந்தி வரை
வேண்டும் நீ எனக்கு
உன் தோள்களில் தூங்கிட
வேண்டும் நீ எனக்கு
உன் விண்ணிலா ஓர் பெண் நிலா
வானம் நீ எனக்கு
உன் பேர் சொல்லும் ஓர் கோகிலம்
கானம் நீ எனக்கு
உன்னோடு நான் வாழ்ந்திட
கால கணக்கு எதுக்கு


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #4 on: January 21, 2012, 03:06:43 AM »
இசை : VS நரசிம்மன்
பாடியவர் : சித்ரா
தொலைக்காட்சி தொடர் : ரயில் சிநேகம்

 

இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இருக்கிறது
உதிரப் போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று



 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #5 on: January 21, 2012, 03:07:21 AM »
படம் : நெஞ்சில் ஜில் ஜில்
இசை : D. இமான்
பாடியவர்கள் : கேகே, சித்ரா




காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்...

காதல் தானா இது காதல் தானா
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானா
காதல் தானே இது காதல் தானே
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே
இந்த காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
எங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?
எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்
பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமே
பூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமே

காதல் தானா இது காதல் தானா
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே

கண்ணுக்குள் கலவரம் நெஞ்சுக்குள் சுயம்வரம்
பார்க்க பார்க்க பிடிக்கிறது.. இரண்டாம் இதயம் துடிக்கிறது
ஆயுள் ரேகை வளர்கிறது.. ஆறாம் அறிவும் குறைகிறது.
காதல் தானா.. இது காதல் தானா
மௌனம் கூட மௌனம் கூட கவிதை ஆகிறதா
மூச்சுக்காற்றில் மூச்சுக்காற்றில் எடையும் சேர்கிற்தா
சொர்கம் நரகம் தெரிகிறதா.. பூவில் தீயும் மலர்கிறதா
காதல் தானே காதல் தானே காதல் தானே

காதல் தானா இது காதல் தானா... காதல் தானா

போ என்றால் நெருங்குமே.. வா என்றால் விலகுமே
தூக்கம் இமையில் தொலைந்திடுமே கனவுகள் கண்ணில் கலைந்திடுமே
தானாய் கவிதை வந்திடுமே.. மெதுவாய் நேரம் நகர்ந்திடுமே..
காதல் தானே.. இது காதல் தானே
அப்பா அம்மா நண்பர் எல்லாம் அறவே பிடிக்கலியே
கண்ணாடிக்கு முன்னால் நின்றால் அய்யோ சகிக்கலியே
சூரியன் எங்கே புரியலியே.. சூழ்நிலை எதுவும் சரியில்லையே
காதல் தானா காதல் தானா காதல் தானா

காதல் தானே இது காதல் தானே
நெஞ்சை கேட்டேன் இது காதல் தானே
இந்த காதல் என்னுள் வந்துவிடுமா
அது உன்னை மட்டும் விட்டுவிடுமா
எங்கிருந்து வரும்? என்னை என்ன செய்யும்?
எங்கிருந்தும் வரும்.. உன்னை எல்லாம் செய்யும்
பூக்கள் கசக்குமே தென்றல் மணக்குமே மேகம் மிரட்டுமே
பூமி நழுவுமே வானம் திறக்குமே வாழ்க்கை புரியுமே


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #6 on: January 21, 2012, 03:07:57 AM »

படம் : வானமே எல்லை
இசை : மரகதமணி
பாடியவர் : சித்ரா
பாடல் வரிகள் : வைரமுத்து


சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
பாடு சுந்தரி.. சுந்தரி..

சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை

ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா.. சுவை காணவில்லையா..
ஆறாம் அறிவு கொண்டோம்.. அது ஒன்றே தொல்லையா..
எத்தனை கோடி இன்பம் இந்த மண்ணில் இல்லையா.. பெண் கண்ணில் இல்லையா
கானல் நீரில் தூண்டில் நாம் போட்டோம் இல்லையா..
வாழ்க்கையின் இன்பம்.. நாட்களில் இல்லை..
சில நாழிகை வாழும் சிற்றீசல் கூட தீபங்கள் தேடும்.. தேடும்..
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை

சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது.. தளிர் வந்து சொன்னது
தொட்டாச்சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை... இன்றொரு வாழ்க்கை
எதுவாகிய போதும்.. நலமாய் இரு போதும்.. இதுவே என் வேதம்.. வேதம்..

சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு... தேடு..


 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #7 on: January 21, 2012, 03:08:38 AM »
படம் : இதயத்தை திருடாதே
பாடியவர் : சிதரா
இசை : இளையராஜா




ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... மலர்களும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சி எந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

என்னவோ... எண்ணியே...
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே




                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #8 on: January 21, 2012, 03:09:17 AM »
படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சித்ரா


கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் கொதிக்க
வரவா ஊரும் அடங்க
நாலு தெருவும் தொறந்து கெடக்க
முடியுமா என்ன நெருங்க
ஊரு மலையெல்லாம் கோலி விளையாடி
வருவேன் கோழி உறங்க
கண்ணுபடுமுனு காத்துவரும் கொண்டு
வருவேன் நிலவு மயங்க

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க
ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே

என் அடி வைத்தில் புளி கரைக்க வந்துபுட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வைத்தில் புளி கரைக்க வந்துபுட்டான்
என்ன கொன்னே புட்டான்
ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு
எல்லா நேசம் நீ என் வாசம்
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
ஊட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோ
கூரை பிரிச்சபடி மெல்ல அழைக்கிறதோ
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாஇ தரவா
ஊட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோ
கூரை பிரிச்சபடி மெல்ல அழைக்கிறதோ

மேல் காட்டு மூளையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூளையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
சுண்ணாம்பு கேட்கப்போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு
சுண்ணாம்பு கேட்கப்போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு
அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேரம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #9 on: January 21, 2012, 03:09:54 AM »
படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா



காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்

தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை



 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #10 on: January 21, 2012, 03:10:34 AM »
படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா


போகும் வழியெல்லாம் காற்றே
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேனே
என் கண்ணோடு கண்ணீரை விடைத்தாய்
(போகும்..)

கை ஏந்தி காதல் வரம் கைத்தேனே
என் கைகளுக்கு பரிசு இது தானா
கடிதத்தில் வைக்கின்றானே என் இதயம்
இது காதல் உலகத்தில் புது உதயம்
புது உதயம் புது உதயம் புது உதயம்
(போகும்..)

உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே
உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே



 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #11 on: January 21, 2012, 03:11:12 AM »
படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா



காதலே ஜெயம் நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே ரஞ்சனா ரஞ்சனா

என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் ம்ம் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் காண்பதா உண்மையம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
என் ஒரே பாடலே

உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம் உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுகளும்
என் எல்லா உணர்வுகளும் நீ தொடக்கம் நீ தொடக்கம்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் அது கடவுலின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே
உன் உரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உறியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
ரஞ்சனா ரஞ்சனா..



 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #12 on: January 21, 2012, 03:11:50 AM »
பாடியவர்: சித்ரா
படம்: என் ஆசை மச்சான்
இசை: இளையராஜா



ஆடியில சேதி சொல்லி ஆவணியில தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவருதான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவருதான்
அழகு மன்னவரு மன்னவருதான்

(ஆடியில சேதி சொல்லி)

சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

(சேலை மேல)

வீரப் பாண்டித் தேருப் போல பேரெடுத்த சிங்கம்தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம்தான்

(ஆடியில சேதி சொல்லி)

பூவுக் கூட நாரு போல பூமி கூட நீருப் போல
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரவீரன் பொம்மி போல

(பூவுக் கூட)

சேலையோட நூலுப் போல சேர்ந்திருக்கும் பந்தம்தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம்தான்

(ஆடியில சேதி சொல்லி)



 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #13 on: January 21, 2012, 03:12:26 AM »
படம்: சாமி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சித்ரா



இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)



 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #14 on: January 21, 2012, 03:13:05 AM »
படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சித்ரா



ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்குள்ளே போராட்டம் கண்ணில் இந்த நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)

உன்னை வெல்ல யாருமில்லை உருதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுத்தோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா? துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)