Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 31756 times)

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #15 on: January 21, 2012, 03:14:22 AM »
திரைப்படம் : கல்கி
பாடியவர் : சித்ரா
இசை: ஏ.ஏர்.ரகுமான்




முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்கு கவிதையில்
எழுதும் கடிதம்!

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா

எழுதுகிறேன் ஒரு கடிதம்

மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

முந்நூறு நாள் கர்ப்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே

நாள் ஒரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

சிந்தாமணி என் கண்மணி
சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே
பொன்னூஞ்சல் நீ ஆடடி
உலாவும் அன்பு கோகிலம்
எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல்
ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடை ஏது
விழாமலே விழும் மழை நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்


பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராது துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது

பெறாத வெற்றி இல்லையே
என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே

வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
மலடியின் மகளே
மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #16 on: January 21, 2012, 03:15:07 AM »
படம்: கோகுலத்தில் சீதை
இசை : தேவா
பாடியவர் : சித்ரா



எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...
ம்...ம்...ம்...ம்...ம்...ம்......


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #17 on: January 21, 2012, 03:15:46 AM »
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சித்ரா


பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சற்றே நான் மலர்ந்தேனடா

பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று நான் ஜெயித்தேனே நான்

ஜில்லென்று பனி காறு தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
(பார்த்ததும் திகைத்தேனே..)

எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய்
உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய்
இங்கு அங்கு எங்கும் உந்தன் பிம்பம் பார்க்கிறேன்
தொட்டு பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்

ஞாபகங்கள் தட்ட மாலை ஆடும்
மாய வலை நம்மை வந்து மூடும்
வார்த்தைகள் போதுமடி வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை முடி நீ மதுரமடி
(பார்த்ததும் கரைந்தேனடா..)

கேட்கும் போது இலலி என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் மீற வைக்கிறாய்
என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பெய்யுதே
பார்க்கும் யாதும் இப்போதெல்லாம் அழகானதே

காதலின் வெப்பம் நம்மை தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கம் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை
(பார்த்ததும் திகைத்தேனே..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #18 on: January 21, 2012, 03:16:25 AM »
படம்: நெஞ்சினிலே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து



மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
(மனசே..)

பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே மனசே
(மனசே..)

நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே
(மனசே..)

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே மனசே
(மனசே..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #19 on: January 21, 2012, 03:17:37 AM »
படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா


தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #20 on: January 21, 2012, 03:18:14 AM »
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து



கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிருத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி..)

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி..)

வான்மழை விழும்போது மழைக்கொண்டு காத்தாய்
காண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாதுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #21 on: January 21, 2012, 03:18:55 AM »
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ
(என்ன..)

அண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே
என்னடி? நாக்கு.. மறத்துபோனதே
அடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே
அடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துபாரு
பேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப்பாரடி..
சமைத்துக்காட்டுவோம்..
இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்

கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
கரி வேப்பிலை எங்கே
கரி கரி கரி கரி காய்களும் இங்கே
கரி வேப்பிலை இங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
மசாலா பொடி எங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
மசாலா பொடி இங்கே
பபபபபபக பருப்பு இருக்குதா
இருக்கு
கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பை கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துக்காட்டுவோம்..

அப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக
அப்பா வரு நேரம் சகமபதாகமப
ராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா
பாடு வசந்தா
சமகமகமகமகம வாசம் வருதே
மசாலா கரம் மசாலா
கமகமகமகமக வாசம் வருதே
சரிசரிசரிசரி விளையாட்டுகள் போதும்
கமகா பதனி சாதம் ரெடியா
சாதம் இருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
வருவல் ரெடி
பொறியல் ரெடி
தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
முடிஞ்சு போச்சு

இலையை போடடி பெண்ணே
இலையை போடடி
சமைத்த உணவை ருசித்து பார்க்க
இலையை போடடி


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #22 on: January 21, 2012, 03:19:36 AM »
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள் : கவிஞர் முத்துலிங்கம்



இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில்..)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
(இதழில்..)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
(இதழில்..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #23 on: January 21, 2012, 03:20:20 AM »
படம்: சிகரம்
இசை: SP பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து


இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #24 on: January 21, 2012, 03:20:58 AM »
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி


குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
(குருவாயூரப்பா..)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில்
நாந்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம்
தீராதோ சொல் பூங்கொடியே
(குருவாயூரப்பா..)

ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாரலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவ செம்பூவே
என் தேகம் சேராதோ உன் கைகளிலே
(கூவாயூரப்பா..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #25 on: January 21, 2012, 03:21:35 AM »

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
(குழலூதும்..)

மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளையா
(குழலோதும்..)

கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
(கண்ணா..)
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
(குழலூதும்..)


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #26 on: January 21, 2012, 03:22:14 AM »
பாடியவர் : சித்ரா
இசை: S.A. ராஜ்குமார்
படம்: புன்னகை தேசம்


மழையே ஓ மழையே.. புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்.. நிக்கவச்சு பாக்குறியே
(மழையே ஓ மழையே.. )

முத்து முத்து மல்லிகையாய் முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய் என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

மூங்கில்கள் புன்னகை செய்தால் குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால் சிற்பங்கள் ஆகும்
மரச்சட்டம் புன்னகை செய்தே நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே வைரமாக மின்னும்
நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால் இடம்மாறிப் போகும்
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால் தெய்வம் வந்து வாழும்
பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #27 on: January 21, 2012, 03:22:59 AM »
படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


நான் போகிறேன் மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான


                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #28 on: January 21, 2012, 03:23:41 AM »
படம்: நம்மவர்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்
ஓசையெல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்
சத்தங்கள் இல்லாத சங்கீதம் மௌனங்கள் சங்கீதம்
சண்டையும் சங்கீதம்
(பூங்குயில்..)

சுருதி சேரும் ராகம் என்றும் கற்கண்டு
பூவில் பாடும் வண்டு என்ன கதி கொண்டு
நீங்கள் பாடும் சந்தம் இன்பம் ஆனந்தம்
மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுயசந்தம்
நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு
மூங்கில் மீது காற்று மோதிய பழம் பாட்டு
(பூங்குயில்..)

எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்
எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்
தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்
ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்
காசுமாலை தானே அலையின் சன்மானம்
கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்
(பூங்குயில்..)



 
 
 
                    

Offline Global Angel

Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #29 on: January 21, 2012, 03:24:26 AM »
படம் :கோகுலத்தில் சீதை
பாடியவர் : சித்ரா
இசை: தேவா



அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே
ஒளியேற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே

நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா -[நிலாவே](3)

மலரே உன் வாசம் அழகே
மழையே உன் சாரல் அழகே
நதியே உன் தேகம் அழகே
கடலே உன் நீலம் அழகே

பனியே உன் காலம் அழகே
பகலே உன் காலை அழகே
இரவே உன் மாலை அழகே
உலகே என் தேசம் அழகே
கவிதை அழகே
கலைகள் அழகே
மழலை அழகே - மறந்தாயே
மனிதா மனிதா
வாழ்க்கை முழுதும்
அழகை அருகில் காண்பாயே
வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையேஏஏ

(நிலாவே) -2


முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே
சிரிப்பும் அழகே
அழுகை அழகே
மனிதா வாழ்க்கை இதுதானே
தண்ணீர் விட்டு
பாலை அருந்தும்
அன்னப்பறவை நீதானே
வாழ்க்கை இன்பமே
வாழ்வோம் என்றுமே
மதி வெல்லுமேஏஏ

நிலாவே வா வா வா
நில்லாமல் நீ வா - 2