Author Topic: எனது கிறுக்கல்கள்...,  (Read 2894 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #30 on: March 22, 2016, 08:27:07 PM »
செத்துப் போனது "நீ"
செத்தே போனது "நான்"
வாழ்கிறது "நாம்"
மரணம் முதலிலும்
ஜனனம் பிறகுமாய்
"காதல்" மட்டும்..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #31 on: March 22, 2016, 08:32:20 PM »
சுயநலவாதி நான்..!
எனக்கு கிடைக்காதவைகளை மட்டுமே
உங்களுக்கு வழங்கப்போவதாய்
உறுதியளித்துக்கொண்டிருக்கிறேன்..!
என்னிடத்திலிருப்பதை தரப்போவதில்லை..!
அதனால் தான் சொல்கிறேன்
என்னைத்தவிர
எல்லோரையும் நேசியுங்கள்..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #32 on: March 23, 2016, 11:41:40 AM »

கல்லுக்குள் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
தேடத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
தேரை கடவுளில்லை..!
தூண்துரும்பில் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
கவனிக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான்கள் கடவுளில்லை..!
மனிதனுக்குள் தான் கடவுளென்று
நீங்கள் உபதேசித்தபோது தான்
சிந்திக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான் அல்லது தேரையே
கடவுளாக இருந்திருக்கலாம்..!
தேடல் சுலபமாக முடிந்திருக்ககூடும்..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #33 on: March 23, 2016, 11:42:57 AM »
உன்னால்
உச்சரிக்கப்படாத
வார்த்தைகளுக்காக
ஆயிரம் அளபெடைகளோடு
காத்திருக்கிறேன் நான்..!
ஆனால்
நீயோ
உன்
மெளனத்திற்கு
அளபெடைகள்
சேர்த்துக்கொண்டிருக்கிறாய்..!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #34 on: March 23, 2016, 05:05:48 PM »
கல்லுக்குள் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
தேடத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
தேரை கடவுளில்லை..!
தூண்துரும்பில் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
கவனிக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான்கள் கடவுளில்லை..!
மனிதனுக்குள் தான் கடவுளென்று
நீங்கள் உபதேசித்தபோது தான்
சிந்திக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான் அல்லது தேரையே
கடவுளாக இருந்திருக்கலாம்..!
தேடல் சுலபமாக முடிந்திருக்ககூடும்..


எண்ணம் எழில் !!
சிந்தனை சிறப்பு !!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #35 on: March 23, 2016, 07:29:40 PM »
ஓடும் அவசரத்தில்
தட்டுப்படாத தடையொன்றின்
கட்டுப்படாத தாக்குதலில்
பெயர்ந்து விழுந்த
பெருவிரல் நகம்
கற்றுக்கொடுத்த பூமி
பெற்றுக்கொண்ட தட்சிணையே..!
ஓடுவதை
ஏன் நிறுத்த வேண்டும் நான்...?

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #36 on: March 23, 2016, 07:30:29 PM »
சாக்கடை தழுவியும்
வருவதுண்டு..!
பூக்களை தழுவியும்
வருவதுண்டு..!
சாக்கடை மீதும்
கோபமில்லை..!
பூக்களின் மீதும்
ஆசையில்லை..!
தீண்டலில் பேதமும்
காட்டவில்லை..!
ஆசை கோபம்
வென்று விட்டாய்..!
பேதம் என்பதை
கொன்று விட்டாய்..!
காற்றே நீ ஒரு
ஞானி அன்றோ..?

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #37 on: March 23, 2016, 07:38:00 PM »
முதல் கவிதை

உன் மடியில் நானிருக்க
என் தலை முடிக்குள்
உன் விரல்கள் வரைந்ததே
தமிழின் முதல் கவிதை..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #38 on: March 24, 2016, 08:01:35 PM »
எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பலம் கூட்டி
விசிறியடியுங்கள் என்னை
தடைகளை நோக்கி...!
கொஞ்சம் விலகி நில்லுங்கள்
ரப்பர் பந்து நான்..! ;D ;D ;D

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #39 on: March 24, 2016, 08:12:53 PM »
தாய்


நான் பார்த்த
அந்த தேவதைக்கு
அழகில்லை சிறகில்லை
அற்புதமாய் ஒளியில்லை..!
நிலவூட்ட ஒன்றும்
உணவூட்ட ஒன்றுமாய்
இரு கரங்கள் மட்டுமே உண்டு..!
ஆனாலும் தோற்கும்
ஆயிரம் தேவதைகள்
அந்தத் தேவதையிடம்..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #40 on: April 01, 2016, 08:09:09 PM »
பகர்வதற்கோர் நாதியில்லை எவ்விடத்தும் எம்நிலை
நகர்வதற்கோர் வழியில்லை எவ்விடத்தும் எம்நிலை
புகர்வதற்கோர் இடமில்லை எவ்விடத்தும் எம்நிலை
தகர்வதற்கோர் நாள்வருமோ நெஞ்சே சொல்..!
வெண்கொற்றக் குடைநிழலில் வெள்ளாமை செய்வோமோ
புண்பெற்ற நெஞ்சோடு புல்லாகிப் போவோமோ
என்குற்றம் செய்தோமோ என்றேனும் தோற்போமோ
மண்பெற்றே வாழ்வோமோ நெஞ்சே சொல்..!
நின்றெரியும் நெஞ்சுக்குள் நீங்காத நெருப்பெனவே
வென்றெறியும் வேட்கைக்கு நாடாகும் விடையெனவே
கன்றெறியும் அம்புக்கும் அஞ்சிவிழும் அவர்கூட்டம்
என்றறியும் நாள்வருமோ நெஞ்சே சொல்..!
பெரும்பகை கொண்டே வருமவர் கூட்டம்
கரும்புகை போலும் விலகிடும் ஓட்டம்
அரும்புகள் கூடும் பெருமகிழ் ஆட்டம்
வரும் ஒரு நாளென்றே நெஞ்சே சொல்..!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #41 on: April 01, 2016, 08:15:41 PM »
ஆழி கடைந்து கொண்டிருக்கிறார்கள்
அசுரர்களும் தேவர்களும்....
பெருமானாய் நின்று கொண்டிருக்கிறேன்
நான் ...

நஞ்சு வந்தால்
நான் தின்ன வேண்டுமென்று
ஞாபகமிருக்கிறது எனக்கு .....

அங்கிருந்து முறைத்தபடியிருக்கிறாள்
அவள்...

சங்கு நெரிப்பாளென்பதும்
ஞாபகமிருக்கிறது....
ஆழி தெளிகிறது...
நஞ்சுறுதி ...
தெரிகிறது ....

நெஞ்சுறுதி
தொலைகிறது...

நகர்ந்து விட எத்தனிக்கிறேன்
பெருமானேயென்றொரு குரல்
பேரதிர்ச்சி தருகிறது
இனியென்ன செய்வது ...?

நஞ்சை அமுதென்று
நம்ப வைப்பதொன்றும்
சிரமமில்லை....

நான் .... பெருமானென்றறிக....! 8)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #42 on: April 01, 2016, 08:22:05 PM »
நீயும் நானும் தான்
பேசிக்கொண்டிருக்கிறோம்
அவிழ்த்துக்கொட்டப்படுகிறது
போலியாய் சில சந்தோஷங்கள்

நகர்ந்து செல்லும்
நிமிடங்களை பற்றி
நட்பெங்கே கவலைப்பட்டிருக்கிறது...?

நீளும் இந்த கணத்தின்
இடையிலிருந்து துவங்குகிறது

சில வலிகளின் பகிர்வும்
சில விரக்திகளின் பகிர்வும்..
உள்ளிழுத்த மூச்சுக்காற்றை
முழுவீச்சில் வெளியேற்றியபடி சொல்கிறாய்

நாயறியுமா நன்றும் தீதுமென்று...

நன்றும் தீதும்
நாயறிந்து என்ன செய்யப்போகிறதென்கிறேன்
நான் ....

அறை நிரப்புகிறது
நம்மிருவரின் சிரிப்பு...

சரிதான்
நாயறிந்து என்ன செய்யப்போகிறதென்கிறாய்...
வால் வெட்டப்பட்ட நாயொன்று
வாசல் கடக்கிறது
நம்மை நோக்கிக் குரைத்தபடி..

நாய் பாஷை
அறிந்திருக்கவேண்டிய
அவசியமென்றெதுவுமில்லை...!
நமக்கது புரிகிறது...

வாசகன்

  • Guest
கி(ச)றுக்கல்கள்...
« Reply #43 on: April 05, 2016, 06:48:51 PM »
கிறுக்கியது  பேனாமுனையில்
                               நீங்களே..
சறுக்கியது  ரசனையில்
                            நாங்களே...


இப்படிக்கு..

வாழ்த்த வார்த்தைகள் இன்றி
                       வாசகனாய் நான்...






Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #44 on: April 19, 2016, 08:10:26 PM »
கறை படிந்த சிறுவன்
கடைப்பலகையில்
எழுதப்பட்டிருக்கிறது
பஞ்சர் ஓட்டப்படும் என்று....
நீங்கள் கேலி செய்கிறீர்கள்..!
அது
ஓட்டப்படும் இல்லை
ஒட்டப்படும் என்று....
ஒட்டுவது
ஓட்டுவதற்க்குத்தானே என்ற
அவனது பதிலை
நீங்கள்
எதிர்பார்க்கவில்லை என்பதை
உங்கள் மௌனம் அறிவிக்கிறது.....
இலக்கணம் கிறுகிறுக்கிறது
தலைக்கனம் தெறிதெறிக்கிறது....
குறிலுக்கும்
நெடிலுக்குமான உங்கள்
எண்ணத்தை
கிழித்தெறிகிறது
அவனது
ஒற்றை பதில் ....!
இரட்டுற மொழிதலுக்கும்
பகட்டுற மொழிதலுக்குமான
வித்தியாசம் என்னவென்று
உறைத்திருக்கக்கூடும்
உங்களுக்கு ...
உறையச்செய்யும்
உண்மையிலிருந்து
உஷ்ணம் பறக்கிறது...
அடுத்த வண்டியின்
சக்கரம் கழற்றிக்கொண்டே
உங்களைப்பார்த்து சிரிக்கும்
அவனது சிரிப்பு
உங்களை
சுட்டிருக்கலாம்
அல்லது
நீங்கள்
செத்திருக்கலாம்....!
சில
இலக்கணங்கள்
வரையறுக்கப்படுவதை விட
கருவறுக்கப்படுவதே
சரியென்றறிக.....!