கல்லுக்குள் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
தேடத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
தேரை கடவுளில்லை..!
தூண்துரும்பில் கடவுளென்று
நீங்கள் சொன்னபோது தான்
கவனிக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான்கள் கடவுளில்லை..!
மனிதனுக்குள் தான் கடவுளென்று
நீங்கள் உபதேசித்தபோது தான்
சிந்திக்கத் துவங்கினேன் நான்..!
தெரியவந்தது
கரையான் அல்லது தேரையே
கடவுளாக இருந்திருக்கலாம்..!
தேடல் சுலபமாக முடிந்திருக்ககூடும்..!