Author Topic: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~  (Read 1785 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று வாழ்ந்த பாரம்பர்யம் நமது. நம் அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் வெறும் மணமூட்டிகளும் சுவையூட்டிகளும் மட்டும் அல்ல. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டில் தொடங்கி, மிளகு, கிராம்பு வரை ஒவ்வொன்றுமே உயிர் காக்கும் சஞ்சீவினிகள்!



பொதுவாக, மசாலா பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்று ஒரு பார்வை உள்ளது. எதுவுமே

அளவுக்கு மீறும்போதுதான் நஞ்சாகிறது. மசாலா பொருட்களை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதுபோலவே அவற்றை அடிக்கடி சாப்பிடவோ, தொடர்ந்து சாப்பிடவோ கூடாது. இவை வயிற்று மந்தத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை எதிர்க்கும் ஆற்றலைத் தரும்  இந்த மசாலா பொருட்களை அறவே தவிர்க்கவும் முடியாது.
இன்று, சாம்பார் பொடி முதல், கரம் மசாலா வரை அனைத்துமே பாக்கெட்களில் வந்துவிட்டன. ஆனால், இயன்றவரை இந்த பாக்கெட் பொருட்களைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கவர்கள், செயற்கைப் பதப்படுத்திகள், ஒவ்வாமையை ஏற்படுத்தி நம்மை நோயாளிகளாக்கும் ஆபத்து உள்ளது. மசாலா பொருட்களைத் தனித்தனியாக தரமானதா எனப் பரிசோதித்து வாங்கி, முறையாக அரைத்துப் பயன்படுத்தினால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் முதல் அதிமதுரம் வரை நாம் சமையலில் பயன்படுத்தும் மணமூட்டிகள், சுவையூட்டிகள், மசாலா பொருட்களின் பலன்களைச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.



Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மஞ்சள்



மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும்.

மஞ்சளில்  பாலிபீனாலிக்  கூட்டுபொருட் களால் ஆன குர்குமின் என்ற சத்து இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.

மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது, எழும்புகள் உறுதியாகும். ஆர்த்ரைடிஸ் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிளகு



மிளகுக்கு, ‘கறுப்புத் தங்கம்’ என்றோர் பெயர் உண்டு. எண்ணற்ற  சத்துக்களைக் கொண்டது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற பழமொழி இதன் நச்சு நீக்கும் தன்மையைச் சொல்லும்.

மிளகில், பைப்பரின் (Pipirine) எனும் சத்து உள்ளது. மிளகின் வாசனைக்கு இதுதான் காரணம்.

மிளகைக் காயகற்ப மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். திரிகடுகத்தில் மிளகுக்கும் இடம் உண்டு.

தும்மல், மூச்சடைப்பு, உடல் பருமன் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். மிளகுப்பொடியை அப்படியே சமையலில் பயன்படுத்துவதே சிறந்தது. தினமும் மிளகைச் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு சாதம் சாப்பிடலாம். மிளகு சூப், மிளகு ரசம் மழை மற்றும் குளிர் காலங்களில் பருகலாம்.

மிளகு காரமானது. எனவே, அல்சர் இருப்பவர்கள் மிளகைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். தொண்டைக்கட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சீரகம்



சீரகத்தை, சீர்+அகம் எனப் பிரிப்பார்கள். அதாவது, உடலைச் சீர்செய்யக்கூடிய வல்லமை சீரகத்துக்கு உண்டு.

உணவுகள் செரிமானம் ஆவதற்கு பல என்சைம்கள் உடலில் வேலை செய்கின்றன. சீரகம் இந்த என்சைம்களைத் தூண்டிவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

பித்தத்தைச் சரிசெய்வதால், ‘பித்த நாசினி’ என சித்த மருத்துவத்தில் சீரகத்தைப் புகழ்கிறார்கள்.

200 கிராம் சீரகத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை விட்டு, நன்றாகக் கலந்து காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதை அரைத்துப் பொடித்துவைத்து, தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சீரகம், சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும். சீரகத்தை வறுத்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்க, உயர் ரத்த அழுத்தம் குறையும். இருமல், சளி நீங்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருஞ்சீரகம்



மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள்  பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பெருங்காயம்



பெருங்காயம் ஒரு பிசின். இந்தியாவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக் கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவேதான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்துவந்தனர்.

வயிற்று வலி, மார்பு வலி போன்றவை  ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனை வெல்லம் சேர்த்துத் தயாரித்த சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுவர, வலி குறையும்.

மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.

பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால், வாதப் பிரச்னைகள் குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காய்ந்த மிளகாய்



பித்தம், கப நோய் போன்றவற்றைச் சரிசெய்யும். ஆனால், மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

50 மி.லி நல்லெண்ணையில், 10 காய்ந்த மிளகாய் சேர்த்து, நன்றாகச் சூடுபடுத்த வேண்டும். பின்னர், மிளகாயை நீக்கிவிட்டு, எண்ணெயை மட்டும் எடுத்து, தலைக்குக் குளித்துவந்தால் தலைவலி நீங்கும்.

அல்சர், அழற்சி, வாய்ப்புண் போன்றவை இருப்பவர்கள், காய்ந்த மிளகாய் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

மிளகாய் காரமானது என்பதால், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, சமைக்கும்போது இரண்டு பங்கு தனியா (மல்லி) சேர்த்துச் சமைக்க வேண்டும். எனவேதான், நம் முன்னோர்கள் ஒரு பங்கு மிளகாய்ப் பொடிக்கு, இரண்டு பங்கு மல்லிப் பொடி சேர்ப்பார்கள்.

காய்ந்த மிளகாய் வலியை நீக்கும் தன்மை கொண்டது. புளிச்சகீரை போன்றவற்றில் மிளகாய் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புளி



புளி, பித்தத்தை அதிகரிக்கும். செரிமானத்துக்கு உதவும்.

குமட்டல் இருக்கும் சமயங்களில்  புளியைக் கரைத்து, வெல்லம், மிளகுத் தூள் சேர்த்து, தண்ணீரில் கலந்து  குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

புளி ரசம் வைத்துச் சாப்பிடலாம். புளியில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது. அதிகமாகச் சாப்பிட்டால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே, அளவாகவே சாப்பிட வேண்டும்.

பசி இன்மை, மந்த உணர்வு இருப்பவர்கள் புளி சாப்பிடுவது நல்லது.

அல்சர் இருப்பவர்கள் புளியை உணவில் அதிகம் சேர்க்கக் கூடாது. சிலர், அடிக்கடி புளி சாதம் சாப்பிடுகிறார்கள், இது தவறு. மாதம் ஒரு முறை வேண்டுமானால் சாப்பிடலாம், அடிக்கடி சாப்பிடக் கூடாது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொடம் புளி



‘மலபார் புளி’ என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கடுகு



கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும்.

கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும்.  குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும்.

உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சோம்பு



சோம்புக்கு, பெருஞ்சீரகம் என்ற பெயரும் உண்டு.

சோம்பை வறுத்து, தண்ணீர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மாதவிடாய் ஆரம்பித்த இளம்பெண்கள் சோம்பு நீர் அருந்துவது மிகவும் நல்லது.

சோம்பு, செரியாமைக்கு மிகவும் சிறந்த தீர்வு. சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.

சோம்பை அப்படியே மென்று சாப்பிடலாம். பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய்கள் காரணமாக, வயிற்றில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்கவே, பிரியாணி சாப்பிட்ட பின்னர் சோம்பைச் சாப்பிடுகிறார்கள்.

10 மி.லி சோம்புத் தீநீருடன் (சித்த மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தினால், செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தனியா



தனியாவை, மல்லி, கொத்தமல்லி விதை என்றும் அழைப்பார்கள்.

தனியா, கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். எனவே, இது ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.

பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டைப்பாய்டு காய்ச்சல் இருக்கும்போது, தனியாவைப் பொடி செய்து, நீரில் கலந்து குடிக்கலாம்.

வாயில் கெட்ட நாற்றம் வீசினால், சிறிது அளவு தனியாவை எடுத்து, நன்றாக மென்று, வாய் கொப்பளித்தால், துர்நாற்றம் நீங்கும். வியர்வையை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

கர்ப்பகாலங்களில் பல பெண்களுக்குத் தலைசுற்றல் பிரச்னை இருக்கும். கொத்தமல்லி விதையுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, விழுதுபோல (பேஸ்ட்) ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த விழுதுடன், ஒரு டம்ளர் தண்ணீர், தேன் சேர்த்துக் கலந்து குடித்துவந்தால், தலைசுற்றல் நீங்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுக்கு



இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.

சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.
பசியின்மையைச் சரிசெய்யும்.   உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு  பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஏலக்காய்



ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப்  பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.

கபத்தைக் குறைக்கும்  தன்மை ஏலக்காய்க்கு உண்டு. பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன. ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பூண்டு



பூண்டு, பிசுபிசுப்பும் காரத்தன்மையும் கொண்டது. இது, வெப்பத்தை திசுக்களுக்குள் கடத்த வல்லது.

கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மை சக்தி பெருகும்.

பார்வையைத் தெளிவாக்கும், நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். கொலஸ்ட்ராலைக் கரைக்கும். ரத்தக் குழாய் அடைப்பைக் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

வாயுப் பிரச்னை கொண்டவர்கள், அரை டம்ளர் பாலில், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, இரண்டு மூன்று பூண்டுப் பற்களைச் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளர் பாலாகச் சுண்டியதும் குடிக்கவும்.

பாக்டீரியா தொற்றால், தொண்டை கட்டிக்கொண்டால், பூண்டை நசுக்கி, ஒரு துணியில் வைத்துக் கட்டி, அனலில் காட்டினால், பூண்டு எண்ணெய் வெளிவரும். இதனுடன், தேன் கலந்து தொண்டையில் ஒற்றிஎடுக்கலாம்.