Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
« previous
next »
Print
Pages:
1
[
2
]
3
Go Down
Author
Topic: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~ (Read 1785 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #15 on:
December 27, 2015, 01:46:32 PM »
இஞ்சி
வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.
இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமான மணடலத்தைச் சீர் செய்கிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளது. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில் சேர்த்துவருவது நல்லது.
இஞ்சி டீ அருந்தலாம். பசியின்மைப் பிரச்னை இருப்பவர்கள், 100 கிராம் சீரகத்துடன், இஞ்சித் தூறலை நெய்யில் வதக்கி, நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, பிரச்னை சரியாகும்.
புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ஜூஸ்கள் தயாரிக்கும்போது, இஞ்சியைச் சிறிதளவு சேர்த்து அரைத்துப் பருகலாம்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #16 on:
December 27, 2015, 01:49:05 PM »
வெந்தயம்
வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்தது. ரத்த சோகையைக் குணப்படுத்தும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. ரத்தக்கழிச்சல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.
வெந்தயத்தை வறுத்துப் பொடிசெய்து, வைத்துக்கொள்ளவும். தினமும் ஐந்து கிராம் வெந்தயப் பொடியைத் தண்ணீரில் கலந்து குடிக்க, கெட்ட கொழுப்பு நீங்கி, உடல் எடை குறையும்.
பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைக் கட்டுக்குள் வைக்கும், தாய்ப்பால் அதிகரிக்க வழிவகுக்கும். வெந்தயக்களி செய்து சாப்பிடலாம்.
மோரில் வெந்தயத்தைப் போட்டு அருந்தலாம், வெந்தயத்தில், லெனோலைக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #17 on:
December 27, 2015, 01:50:58 PM »
ஓமம்
வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய பொருட்களில் ஓமத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.
வயிறு வலி, அஜீரணக் கோளாறுகள், இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகளைச் சரி செய்யும் ஆற்றல், ஓமத்துக்கு உண்டு.
ஓமத்தை வறுத்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வயிற்று வலி நீங்கும்.
பல்வலியைப் போக்கும் ஆற்றல் ஓமத்துக்கு உண்டு. சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும் சரிசெய்யும்.
வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். மலச்சிக்கல் பிரச்னையைச் சரிசெய்யும்.
ஓமத்தில் இருந்துதான், தைமால் (Thymol) என்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது, பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #18 on:
December 27, 2015, 01:52:30 PM »
கிராம்பு
கிராம்பு, இனிப்புச் சுவையும் காரச்சுவையும் ஒருங்கேகொண்டது. சுருசுரு என இருக்கும் இது, பூஞ்சைத் தொற்றுக்களை அழிக்கும்.
கிராம்பு, பற்பசைகளில் பயன்படுத்தப் படுகிறது. கிராம்புத் தைலமும் பல்வலிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
வாந்தி வரும் உணர்வு இருந்தால், தண்ணீரில் சிறிது அளவு கிராம்பு போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வாந்தி உணர்வு மறையும்.
பல்வலி முதலான பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்னைக்கு, கிராம்பை நன்றாகப் பொடித்து, வலி ஏற்படும் இடத்தில் வைத்தால் வலி குறையும்.
கிராம்பு சிறந்த மசாலா பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பில் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது.
வைட்டமின் கே சத்து உள்ளது. கிராம்பில் இருந்து எடுக்கப்படும் பல்வேறு எண்ணெய்களும், உடலுக்கு நன்மை தரும். எனினும், கிராம்பை மிகக் குறைவாக சமையலில் பயன்படுத்தினால் போதுமானது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #19 on:
December 27, 2015, 01:54:12 PM »
லவங்கப் பட்டை
மசாலா பொருட்களிலேயே மிகமிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது லவங்கப் பட்டைதான்.
லவங்கப் பட்டைக்கு, நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பான டிரைகிளிசரைடு அளவை, இயற்கையானமுறையில் குறைக்க லவங்கப் பட்டை உதவும்.
பி.சி.ஓ.டி பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், லவங்கப் பட்டையைச் சாப்பிட்டு வந்தால், மெள்ள மெள்ள பிரச்னை சரியாகும்.
லவங்கப் பட்டையை நன்றாகப் பொடித்து, 500 மி.கி லவங்கப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவந்தால், உடலில் சர்க்கரை அளவு குறையும்.
லவங்கப் பட்டையில் மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
பிரியாணியில் லவங்கப் பட்டை சேர்ப்பதால், எண்ணெய் காரணமாக ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகள் தடுக்கப்படும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #20 on:
December 27, 2015, 01:57:16 PM »
பிரிஞ்சு இலை
பிரிஞ்சு இலை, குருமா, பிரியாணி, குஸ்கா போன்ற பல்வேறு விதமான டிஷ்கள் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பிரிஞ்சு இலையில் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியச் சத்துக்களுமே அதிக அளவு நிறைந்திருகிறது. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிக அளவு உள்ளன.
பிரிஞ்சு இலை செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். இமயமலைப் பகுதியில்தான் பிரிஞ்சு இலை கிடைக்கிறது. பிரிஞ்சு இலை, நல்ல நறுமணம் கொண்டது. நறுமணம் அற்ற இலைகள் போலிகள் என அறிந்துகொள்ளலாம்.
ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து மிக அதிக அளவில் இருக்கிறது. மாங்கனீசு சத்தும் அதிக அளவு உள்ளது.
அல்சர் போன்ற பல்வேறு வயிற்றுப் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆர்த்ரைடிஸ், தசை வலிகள் போன்றவற்றுக்கு, பிரிஞ்சு இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #21 on:
December 27, 2015, 01:59:05 PM »
சாதிக்காய்
சாதிக்காய் இனிப்புப் பண்டங்களில் சுவையூட்டியாகவும், மசாலா பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதிக்காயின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாதிப்பத்ரியும் மசாலா பொருள்தான்.
சாதிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். விந்து கெட்டிப்படும்.
கால் டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி, அரைத் தேக்கரண்டி கசகசா, ஏலக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்திவர, நல்ல தூக்கம் வரும்.
ஜாதிக்காயை நன்றாக அரைத்து, பேஸ்ட் போல செய்து, தண்ணியில் கலந்து குடித்துவந்தால், வயிற்றுப்போக்கு சரியாகும்.
ஆன்டிஏஜிங் கிரீம்கள் தயாரிப்பில் ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயை அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கும்.
ஜாதிக்காய் பேஸ்ட்டை பருக்கள் மீது தடவிவர, முகப்பருப் பிரச்னை நீங்கும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #22 on:
December 27, 2015, 02:01:18 PM »
கசகசா
கசகசா ருசிக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, குடல் புண்களை ஆற்றும்தன்மை மிகுந்தது.
பாப்பி செடியில் இருந்து கசகசா கிடைக்கிறது. கசகசா சிறந்த ஆண்மைப் பெருக்கி என்கிறது சித்த மருத்துவம்.
இதைச் சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கிறது. கசகசா உடலை வலுவாக்கும்.
கசகசாவைப் பாலில் கலந்து குடித்துவந்தால், தூக்கமின்மை பிரச்னை சரியாகும். சித்த மருத்துவமுறையில் கசகசா லேகியம் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்.
சீதபேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கொண்டது.
கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கல்கண்டு, போன்றவற்றை சம அளவு அரைத்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #23 on:
December 27, 2015, 02:03:33 PM »
அன்னாசிப்பூ
செரியாமை நோயைக் குணப்படுத்தும். இனிப்புகள் செரிமானம் ஆகத் தேவையான என்சைம்களைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. உணவை அழகுபடுத்தவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.
பன்றிக் காய்ச்சலுக்கு அன்னாசிப்பூவில் இருந்துதான் மருந்து தயாரிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில், அன்னாசிப்பூ இதழ் ‘தக்கோலம்’ என அழைக்கப்படுகிறது.
காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால், அன்னாசிப்பூவைக் கொதிக்கும் நீரில் போட்டு, மேலே தட்டு வைத்து மூடி, கொதிக்கவைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டிப் பருகிவர, உடல் பலமாகும்.
அன்னாசிப்பூ, பசியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மசாலா பொருட்களில் அன்னாசிப்பூ பயன்படுத்துவதால்தான், சுவையும் கூடுகிறது நிறைய சாப்பிடவும் முடிகிறது.
அன்னாசிப்பூவுக்கும், அன்னாசிப் பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது, அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து கிடைக்கிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #24 on:
December 27, 2015, 02:05:06 PM »
குங்குமப்பூ
குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், மேனி பொலிவு பெறும்.
குங்குமப்பூவைச் சாப்பிடுவதற்கும், குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
நம் ஊர்களில் விற்கப்படுபவை பெரும்பாலும் தரம் குறைந்தவையே. குங்குமப்பூதான் இந்தியாவில் விலை உயர்ந்த பூ. காஷ்மீரில்தான் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.
குங்குமப்பூ, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை ஆகியப் பிரச்னைகளைச் சரிசெய்யும். இனிப்புகளில் குங்குமப்பூச் சேர்த்துச் சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூவைச் சாப்பிடுவதால், இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வலுவடையும்.
சூடான பாலில் குங்குமப்பூவைக் கலந்ததும் நல்ல சிவப்பு நிறம் வந்தால், அது போலியான குங்குமப்பூ. பாலில் கலந்ததும், பல மணி நேரத்துக்கு பிறகு, தங்க நிறத்துக்கு மாறுவதே தரமான குங்குமப்பூ.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #25 on:
December 27, 2015, 02:06:49 PM »
திப்பிலி
திப்பிலி, இனிப்புச்சுவையும் காரத்தன்மையும் கலந்தது. உடல் சூட்டைத் தேக்கிவைக்க உதவும். திரிகடுகத்தில் திப்பிலி முக்கியமானது.
திப்பிலி, சளியைப் போக்கும், குரல் வளத்தைப் பெருக்கும். மூக்கடைப்புப் பிரச்னையைச் சரிசெய்யும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், திப்பிலிப் பொடி இரண்டு கிராம் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர குணம் கிடைக்கும். கோழை வெளியேறும்.
குளிர் காலத்தில், திப்பிலி ரசம், திப்பிலிப் பால், திப்பிலிக் கஞ்சி போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம்.
கண்டந்திப்பிலி வேர் மருத்துவக் குணம் நிறைந்தது. மாதவிடாய் காலத்தில் திப்பிலியை உணவில் சேர்த்துவர, சினைமுட்டை நன்றாக உருவாகும்.
புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல், திப்பிலிக்கு உண்டு. தொடர்ந்து, திப்பிலியைச் சாப்பிட்டுவந்தால் எந்த நோயும் அண்டாது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #26 on:
December 27, 2015, 02:08:09 PM »
திரிகடுகம்
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த கூட்டுக் கலவை . சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்துக் கலந்து, திரிகடுகப் பொடியாகப் பயன்படுத்தலாம்.
தலைவலி, பித்தம், வாந்தி ஆகிய பிரச்னைகள் நீங்கும். கோழை, சளி, ஆஸ்துமா பிரச்னைகளை திரிகடுகம் போக்கும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை உடலில் சமநிலைப்படுத்தும்.
திரிகடுகத்தை டிகாக்ஷன் போல செய்துகொள்ளலாம். தண்ணீரில் திரிகடுகப் பொடியைப் போட்டு, சூடுபடுத்தி வடிகட்டி, டிகாக்ஷனைச் சேமித்துவைத்துகொள்ள வேண்டும். திரிகடுகம் டிகாக்ஷனை பாலில் ஊற்றி, சிறிது பனைவெல்லம் சேர்த்து, திரிகடுகம் பால் தினமும் அருந்தலாம்.
திரிகடுகம் டிகாக்ஷன், ஒரு டம்ளர் தண்ணீர், பனை வெல்லம் ஆகியவற்றைக் கலந்து கொதிக்கவைத்து, ஆறவைத்துப் பருகினாலும் உடல் பலம் பெறும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #27 on:
December 27, 2015, 02:09:45 PM »
இந்துப்பு
இந்துப்புக்கு, சைந்தவம், பாறை உப்பு என்ற பெயர்களும் உள்ளன. இது, சற்று ஊதா நிறத்தில் இருக்கும்.
மலக்கட்டை சரிசெய்யும் ஆற்றல் இந்துப்புக்கு உண்டு. வயிற்றில் உருவாகும் வாயுப் பிரச்னைகளையும் சரிசெய்யும். சிறுநீரைப் பெருக்கும்.
இந்துப்பு 20 கிராம், சீரகம் 10 கிராம், ஓமம் 25 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 100 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சூரணம் போல செய்து மோரில் கலந்து குடிப்பது நலல்து.
சுளுக்கு ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்ற உப்பை உணவில் சேர்ப்பதைவிட, இந்துப்பை மிகச் சிறிதளவு சேர்ப்பது நல்லது. ஏனெனில், இதில் சோடியம் அளவு குறைவாக இருக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் தடலாடியாக அதிகரிப்பது தடுக்கப்படும்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #28 on:
December 27, 2015, 02:11:41 PM »
கறிவேப்பிலை
கறிவேப்பிலை, வாசனைக்கும் ருசிக்கும் மட்டும் சமையலில் பயன்படுத்தப்படுவது இல்லை. இதில், பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கின்றன.
கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், மந்தம், மலக்கட்டு நீங்கும்.
கறிவேப்பிலையுடன் சுட்ட உப்பு, புளி, வறுத்த மிளகாய், வறுத்த உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையலாகச் செய்து சாப்பிட்டுவர, கழிச்சல், பித்த வாந்தி குணமாகும்.
கறிவேப்பிலையைச் சாப்பிட்டுவந்தாலும், கறிவேப்பிலைத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துவந்தாலும், முடி நன்றாகக் கருகருவென வளரும்.
சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கும். குறிப்பாக, பாதங்களைக் காக்கும்.
ரத்த சோகையைத் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226773
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~
«
Reply #29 on:
December 27, 2015, 03:26:59 PM »
எள்
‘இளைச்சவனுக்கு எள்ளு’ என்பது பழமொழி, உடல் எடை கூட நினைப்பவர்களுக்கு எள்ளு சிறந்த தீர்வு.
எள், கால்சியம் நிறைந்தது. பாலில் இருக்கும் கால்சியத்தைவிட, எள்ளில் இருக்கும் கால்சியம் மிக அதிகம். எலும்புகள் பலம் அடைய எள் சாதம் சாப்பிடலாம்.
உடல் மெலிந்த குழந்தைகளுக்கு எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய் போன்றவை சாப்பிடக்கொடுக்கலாம். எள்ளில், மக்னீசியம் சத்து அதிக அளவு உள்ளது. சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் எள்ளுக்கு உண்டு.
எள்ளை அளவாகப் பயன்படுத்துவதே நல்லது. வெள்ளை எள்ளைவிட, கறுப்பு எள்தான் சிறந்தது.
கல்லீரலைக் காப்பதில் முக்கியப் பங்கு எள்ளுக்கு உண்டு. எனவே, அனைவருமே எள் சாப்பிடலாம். எள்ளைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, இரவு நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.
Logged
Print
Pages:
1
[
2
]
3
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அஞ்சறைப்பெட்டி அருமருந்து வீட்டிலேயே மெடிக்கல் ஷாப்! ~