சக ஏமாளியே ! வணக்கம் !
என்ன? சக ஏமாளியா ? ஆம் ,
நீயும் நானும் ஒரே நிலையில் இருப்பதனால் .
ஒரு வகையில் நீ அதிர்ஷ்டசாலி தான்
உன்னவள் உன்னை பொய்மையாய்
காயபடுத்தி இருக்கிறாள் .
இதோ, என் குமுறலை கேள்
"இனியவளே !
என் இதயத்தின் இடப்பக்கம் இருந்தவளே !
இன்றும் , என்றும் இருப்பவளே !
உண்மையின் உறைவிடமாய் நீ தெரிந்தாய்
உண்மையில் அப்படித்தான் நீயும் இருந்தாய்
இருந்தும், பொய்மைக்கு திடீறென்று ஏன் இடம்மாறினாய்?
உன் திடீர் இடம்மாற்றம் எத்துனை பெரிய
தடுமாற்றம் தந்ததென நீ அறிந்திருக்க ,தெரிந்திருக்க
சாத்தியகூறுகள் சத்தியமாய் இருக்காது
அறிந்திருந்தால் ,தெரிந்திருந்தால் நிச்சயமாய்
என்னை பிரிந்திருக்க மாட்டாய் !
ஒருவேளை இப்படி இருக்குமோ?
"உண்மை புரிதல் தான் காதலுக்கு சிறப்பு "என்பதை
"உன்னை பிரிதல் தான் காதலுக்கு சிறப்பு "
என்று பொருள் திரித்து புரிந்துகொண்டாயோ ?
இருக்கும்,அப்படித்தான் இருக்கும்
இல்லையேல் , பாவம் இளகிய இதயம் கொண்டவள்
என்னை ஏன் பிரிந்து இருக்க போகிறாள் ?