Author Topic: மரணம் :(  (Read 461 times)

Offline CybeR

மரணம் :(
« on: December 01, 2015, 02:42:41 PM »
இமைப்போல் இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த அன்னையும்
ஒரு நாள்!

குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!

 அழுதால் அழுது சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம் முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!

தோல்கள் சுருங்கி நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!

உச்சரிக்கும் போதே உச்சந்தலை சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!

தொண்டைக்குழியில் சண்டைப்போடும்
சுவாசம்; ஈரம் காத்த விழிகள்
தூரல் போடும்; காதோடு சாரல் தூவும்!

சுற்றி நின்று சொந்தங்கள் சோகமயம்
காட்டும்; துடிக்கும் நம் உயிரோ
வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
பறக்கக் காற்றுக் கொண்டிருக்கும்!

முதல் அழுகை ஆனந்தமானது
நாம் பிறக்கும்போது;
இறுதி அழுகை அழுத்தமானது
நாம் இறக்கும்போது!

பிரியும் போது நிரந்திரமில்லா
உலகத்தில் நிலையாக ஏதேனும்
விட்டுச் செல்லும் நாம்!

நிலையான உலகத்திற்கு
குலையாத நன்மைகள் குறையாத நன்மைகள்
சுமந்துச் செல்வோம் சுவர்க்கம் செல்வோம்!

Offline SweeTie

Re: மரணம் :(
« Reply #1 on: December 02, 2015, 09:37:43 AM »
எது நடந்ததோ நன்றாகவே நடந்தது ...எது நடக்கிறதோ  அதுவும் நன்றாகவே நடக்கிறது.  எது நடக்கவிருகிறதோ  அதுவும் நன்றாகவே நடக்கும்.   எல்லாம்  அவன் செயல்  :) :)

Offline JoKe GuY

Re: மரணம் :(
« Reply #2 on: December 03, 2015, 10:26:36 PM »
நண்பா நீங்கள் எல்லோருடைய நெஞ்சை தொட்டு விட்டீர்கள்.அருமை இது போல இன்னும் வர வேண்டும்.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline Maran

Re: மரணம் :(
« Reply #3 on: December 08, 2015, 08:14:12 PM »


மரணம், மனிதனை மௌனமாக்கும்..
அகங்காரம்தனை அழிக்கும்...
இருப்பவன் இல்லாதவன் எனும் பேதம் மறக்கும்

சகிக்க கூடிய அளவு தான் கடவுள் சோதித்துப்பார் என்பது உண்மைதான் மனிதனுக்கு மரணம் என்ற ஒன்றும் சகித்துக்கொள்ளக்கூடிய சோதனை அல்லவா!

அடுத்த நொடியே மரணம் வந்தாலும் அதை ஏற்க தயார். ஆனால், மரணத்தின் முன்பு மண்டியிட்டு கெஞ்சாத ஒரு மனநிலையும் ஒரு வாழ்க்கையும் வாழ்ந்துவிட வேண்டும்



'ஓடு ஓடு'
என்கிறது வாழ்க்கை!
'போதும் நில்'
என்கிறது மரணம்!