கொடுமை கொடுமை பெண்ணாகப் பிறத்தல்
அதனிலும் கொடுமை ஆண்களை விரும்புதல்
விரும்பியபோதிலும் புரிந்துணர்வின்மை கொடுமை
பெண்களைக் குற்றம் சாடுதல் அதனிலும் கொடுமை
தங்களின் குறைகளைச் சமாளித்தல் கொடுமை
சமாளித்தபோதிலும் பெண்கள்மேல் குறைகூறல் கொடுமை
இரு கரம் தட்டாமல் சத்தம் வருமா??
உதடுகள் சேராமல் முத்தம் வருமா ??
ஜென்மம் எடுக்கும்போதும் வலி கொடுக்கும்போதும் வலி
காதலில் தோற்றாலும் வலி வென்றாலும் வலி
பெண்களின் வலி யாருக்கு புரியும் ??
நாலா பக்கமும் சுற்றும் வலியை சுமப்பதற்கே பிறந்தவர்கள்,,,,,.