Author Topic: சுமப்பதற்கே பிறந்தவர்கள்  (Read 533 times)

Offline SweeTie

கொடுமை கொடுமை பெண்ணாகப் பிறத்தல்
அதனிலும் கொடுமை ஆண்களை விரும்புதல்
விரும்பியபோதிலும் புரிந்துணர்வின்மை  கொடுமை
பெண்களைக் குற்றம் சாடுதல் அதனிலும் கொடுமை
தங்களின் குறைகளைச் சமாளித்தல்  கொடுமை 
சமாளித்தபோதிலும்  பெண்கள்மேல் குறைகூறல் கொடுமை
இரு கரம் தட்டாமல்  சத்தம் வருமா??
உதடுகள்  சேராமல் முத்தம் வருமா ??
ஜென்மம் எடுக்கும்போதும் வலி  கொடுக்கும்போதும் வலி
காதலில் தோற்றாலும் வலி வென்றாலும்  வலி
பெண்களின் வலி யாருக்கு புரியும் ??
நாலா பக்கமும் சுற்றும் வலியை சுமப்பதற்கே பிறந்தவர்கள்,,,,,.

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #1 on: November 17, 2015, 03:59:26 AM »
oru silar pandra thappukaaga ellarum apdinu solla mudiyathey sweetie...pasanga  oru side purinchi unmaiya irukkavangalum undu same pengalum oru side... oruthara oruthar nalla purinchi nadanthukita sila prob vara chance illa..... but pengal eppothum theivam than ithukana reason epdi soldrathunu therila inga :P pengaloda valigalai nalla velipaduthirukinga nice sweetie..

Offline SweeTie

Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #2 on: November 17, 2015, 07:08:11 PM »
அச்சச்சோ .....ராம்  யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதை
நான் எழுதவில்லை     யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு
மன்னிப்பும்  கேட்டுக்கொள்கிறேன் .   பெண்கள் இயற்கையிலேயே
அதிக வலிகளைத் தங்கிக்கொண்டு அமைதியாக வாழ்பவர்கள்
என்று சொல்ல மட்டுமேதான். 

Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #3 on: November 18, 2015, 06:44:13 PM »
பெண்மையின் சிறப்பு தாய்மை!
அது மறுக்க முடியா உண்மை!
வலிகள் இருப்பினும் சிறப்பினை
வாழ்த்துவோம்- கவிதை என்ற பெயரில்
நீ வலிகைளை எழுதியுள்ளாய் அருமை தோழி -சக்தி

Offline JoKe GuY

Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #4 on: November 19, 2015, 11:11:30 PM »
பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல மிக அருமையாக பெண்களின் வலியினை வெளி படுத்தி உள்ளீர்கள்.ஒரு salute for u.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline gab

Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #5 on: November 20, 2015, 01:08:26 AM »
ஆண்கள் படும் கொடுமைகளை சொன்னால் பொது மன்றமே அழும் , இருந்தாலும் கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ஸ்வீட்டி .

Offline SweeTie

Re: சுமப்பதற்கே பிறந்தவர்கள்
« Reply #6 on: November 20, 2015, 07:14:20 PM »
நன்றிகள்  ராம்  சக்தி   ஜோக் guy   Gab ,     நல்லவேளை    ஐ  நா  சபைக்கு எடுத்துச்
செல்லாமல் விட்டார்கள்  ஆண்கள் .