Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 1334 times)

Offline MysteRy



செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால், எரிச்சல் குறையும்.

Offline MysteRy



எலுமிச்சை ஊறுகாயுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால், மணம் தூக்கலாக இருக்கும்.

Offline MysteRy



ரவா லட்டு செய்யும்போது, சிறிதளவு அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்து, நெய்யில் வறுத்து சேர்த்து... கொஞ்சம் பால் பவுடரையும் கலந்து லட்டு பிடித்தால் சுவை அதிகரிக்கும்.

Offline MysteRy



ரவா தோசை செய்யும் போது ரவையை வறுத்துக்கொண்டு, பிறகு கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும்.

Offline MysteRy



மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பிளட் பிரஷர் குறையும்.

Offline MysteRy



துவரம்பருப்பு சீக்கிரமாக, நன்கு வேக வேண்டுமா? பருப்புடன் தேங்காய்த் துண்டை சேர்த்து வேகவிட்டால், விரைவில் வெந்துவிடும்.

Offline MysteRy



தேங்காயைத் தண்ணீரில் முக்கியெடுத்த பின்பு உடைத் தால்,  சரிபாதியாக உடையும்.

Offline MysteRy



தோசை மாவு மிகுந்துவிட்டால், அதில் சிறிது கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு போட்டு சூப்பரான பக்கோடா செய்யலாம்.

Offline MysteRy



மிளகாய், கருணைக் கிழங்கு ஆகியவற்றை கையாளும்போது கைவிரல்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். அப்போது சிறிதளவு வெல்லக்கரைசலில் கைகளை நனைத்தால், நிவாரணம் கிடைக்கும்.
« Last Edit: October 27, 2015, 04:50:07 PM by MysteRy »

Offline MysteRy



கம்பளிப் பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலையை அழுத்தித் தேய்த்தால்... அரிப்பு நீங்கும்; வலியும் குறையும்.

Offline MysteRy



இனிப்புகள் சாப்பிட்ட பிறகு வெந்நீரில் சுக்குப் பொடி, தேன் கலந்து சாப்பிட்டால்... சீக்கிரம் ஜீரணமாகும்.

Offline MysteRy



துணிகளில் கறைபட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். சிறிது மண்ணெண்ணெயை கறைபடிந்த இடத்தில் வைத்து, பிரஷ் வைத்து தேய்த்தால், கடினமான கறைகூட போய்விடும்.

Offline MysteRy



அதிமதுரம், கசகசா, பால் சேர்த்து அரைத்து, வாரம் 2 முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து, குளித்துவந்தால் நரை முடி குறையும்.

Offline MysteRy



கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவை செய்யும்போது, கூடவே கொஞ்சம் மில்க்மெய்டு ஊற்றிக் கிளறினால்... அல்வா நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

Offline MysteRy



வாழைப்பூ, முருங்கைக் கீரை இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய் புண் குணமாக்கும்.