அழகான அந்தி சாயும் மாலை பொழுதில்..
சூரியன் தன் கடைமைகளை செவ்வென
செய்து முடித்த மமதையில் மறைய
தொடங்கும் நேரத்தில்…
பொன்னிறமான வானத்து மேகத்தை
காரிருள் மறைக்க…
சில்லென்று வீசும் தென்றல் காற்றின்
அசைவில் வளைந்து , நெளிந்து ஆடும் மூங்கில்களில்
வரும் நாதம் செவிகளுக்கு இனிமை சேர்க்க..
கடற்கரை மணல் மேட்டின் மீது அமர்ந்து,
தன் எதிர்காலத்தின் ஒளி விளக்கை
கண்களில் ஏந்தி வரும் தன் காதலியின்
வருகையை.. எதிர்பார்த்து காத்திருக்கின்ற
காதலனின் கண்களில் தெரிகிறது
****இலக்கிய காதல்.****.
காதலுக்கு மரியாதையுடன் உங்கள் நந்தினி