Author Topic: இலக்கிய காதல்  (Read 471 times)

Offline NanDhiNi

இலக்கிய காதல்
« on: October 10, 2015, 11:52:45 PM »
அழகான அந்தி சாயும் மாலை பொழுதில்..
சூரியன் தன் கடைமைகளை செவ்வென
செய்து முடித்த மமதையில் மறைய
தொடங்கும் நேரத்தில்…
பொன்னிறமான வானத்து மேகத்தை
காரிருள் மறைக்க…
சில்லென்று வீசும் தென்றல் காற்றின்
அசைவில் வளைந்து , நெளிந்து ஆடும்  மூங்கில்களில் 
    வரும் நாதம் செவிகளுக்கு இனிமை சேர்க்க..
கடற்கரை மணல் மேட்டின் மீது அமர்ந்து,
தன் எதிர்காலத்தின் ஒளி விளக்கை
கண்களில் ஏந்தி வரும் தன் காதலியின்
வருகையை.. எதிர்பார்த்து காத்திருக்கின்ற
காதலனின் கண்களில் தெரிகிறது
 ****இலக்கிய காதல்.****.

காதலுக்கு மரியாதையுடன்  உங்கள் நந்தினி
« Last Edit: October 11, 2015, 12:11:41 AM by NanDhiNi »

Offline JoKe GuY

Re: இலக்கிய காதல்
« Reply #1 on: October 11, 2015, 08:24:42 PM »
உங்களுக்கு எங்களின் மரியாதை எப்பவும் இருக்கும்.நன்றாக இருகிறது.வளரட்டும் மேலும் கவிதைகள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline gab

Re: இலக்கிய காதல்
« Reply #2 on: October 12, 2015, 10:36:34 PM »
இன்னும் நிறைய காதல் கவிதைகளை எதிர் பார்க்கிறோம் நந்தினி . வாழ்த்துக்கள்