Author Topic: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~  (Read 2630 times)

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #30 on: September 27, 2015, 01:46:32 PM »
பாகற்காய் பக்கோடா



தேவையானவை:

விதை நீக்கி பொடியாக நறுக்கிய பாகற்காய் - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், ஓமம் - கால் டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, புளிக்கரைசல் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். இதனுடன் கடலை மாவு, அரிசிமாவு, புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #31 on: September 27, 2015, 01:48:05 PM »
பனீர் - ஸ்பிரிங் ஆனியன் கிரேவி



தேவையானவை:

பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,  ஏலக்காய் - 3, பட்டை - ஒரு துண்டு, ஆச்சி மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், ஆச்சி மல்லித்தூள் - 2 டீஸ்பூன், பனீர் - 15 துண்டுகள், முந்திரி - 15 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), நீளமாக நறுக்கிய வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃபிரெஷ் க்ரீம் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், பொன்னிறமானவுடன் ஏலக்காய், பட்டை போட்டுக் கிளறி, ஆச்சி இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஆச்சி மஞ்சள்தூள், ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு வேகவிட்டு... தேவைக்கேற்ப தண்ணீர் விட்டுக் கலக்கவும். ஊறவைத்த முந்திரி விழுதை சேர்த்து, உப்பு போட்டு கிளறிவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கி, கொதிக்கும் கிரேவியில் போட்டுக் கிளறி இறக்கவும். மேலே ப்ரெஷ் க்ரீம் சேர்த்து. நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த கிரேவி... பரோட்டா, நாண், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு சிறந்த காம்பினேஷன்.