Author Topic: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~  (Read 2618 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #15 on: September 27, 2015, 01:11:11 PM »
சௌசௌ பஜ்ஜி



தேவையானவை:

  தோல், விதைப் பகுதி நீக்கிய சௌசௌ வில்லைகள் - 20, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, பெருங்காயத்தூளை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். சௌசௌ வில்லைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #16 on: September 27, 2015, 01:12:35 PM »
மைதா போண்டா



தேவையானவை:

மைதா மாவு - 150 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் நீங்கலான மற்ற பொருட்களுடன் கடைந்த தயிர் சேர்த்து, உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும். மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.இதை சூடாக சாப்பிட வேண் டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #17 on: September 27, 2015, 01:13:55 PM »
காலிஃப்ளவர் பக்கோடா



தேவையானவை:

காலிஃப்ளவர் (மீடியம் சைஸ்) - ஒன்று, சோள மாவு - 100 கிராம், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு  டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறிய பூக்களாக ஆய்ந்துகொள்ளவும். இதை உப்பு, மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் போட்டு எடுக்கவும். கடலை மாவு, சோள மாவு, ஃபுட் கலர், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் காலிஃப்ளவரை ஒன்றாக சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #18 on: September 27, 2015, 01:16:41 PM »
பாசிப்பருப்பு போண்டா



தேவையானவை:

 பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், உப்பு - சிறிதளவு.

மேல் மாவுக்கு:

கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், உப்பு, மிளகாய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை அரை மணி ஊறவிட்டு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விடாது கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, அரைத்த பருப்பு விழுது சேர்த்து 5 நிமிடம் கிளறி எடுத்து, ஆறியவுடன் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து, பாசிப்பருப்பு உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #19 on: September 27, 2015, 01:18:49 PM »
மிக்ஸ்டு வெஜ் போண்டா



தேவையானவை:

மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, கோஸ், பீன்ஸ் (எல்லாம் சேர்ந்து) - 2 கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம். மேல்மாவுக்கு: கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக ஆக்கவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் நீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். வெஜிடபிள் கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை சாஸ் உடன் பரிமாறவும். தேங்காய் சட்னி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #20 on: September 27, 2015, 01:20:16 PM »
ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா



தேவையானவை:

 வெங்காயத்தாள் - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், சோள மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய் - கால் கிலோ,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து சிறிதளவு நீர்விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #21 on: September 27, 2015, 01:21:53 PM »
முந்திரி பக்கோடா



தேவையானவை:

 உடைத்த முந்திரி - 50 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட் டுள்ள பொருட்களை (எண்ணெய் நீங்கலாக) நன்கு கலந்து, சிறிதளவு நீர் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #22 on: September 27, 2015, 01:23:24 PM »
வேர்க்கடலை பக்கோடா



தேவையானவை:

வறுக்காத வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். சூடான எண்ணெயில் மாவை கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #23 on: September 27, 2015, 01:25:03 PM »
தூள் பக்கோடா



தேவையானவை:

 பெரிய வெங்காயம் - கால் கிலோ (நறுக்கவும்), கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், உருவிய கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, இஞ்சி - ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (நசுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - 300 கிராம்.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து மாவு கலவையில் சேர்த்து, நீர் தெளித்து பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவக்க பொரிக்கவும். விருப்பப்பட்டால்... 4, 5 பூண்டுப் பற்களை நசுக்கி சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #24 on: September 27, 2015, 01:27:44 PM »
கேபேஜ் பக்கோடா



தேவையானவை:

துருவிய கோஸ் - கால் கிலோ, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட் டுள்ள பொருட்கள் அனைத்தை யும் (எண்ணெய் நீங்கலாக) நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #25 on: September 27, 2015, 01:29:48 PM »
வெள்ளை எள் பக்கோடா



தேவையானவை:

வெள்ளை எள் - 50 கிராம் (வறுக்க வேண்டாம்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு  பொரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #26 on: September 27, 2015, 01:34:03 PM »
பச்சைப் பட்டாணி போண்டா



தேவையானவை:

வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம், கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,  தக்காளி, பச்சை மிளகாய்  - தலா - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, எண்ணெய் - 300 கிராம், உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு: கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

 வேகவைத்த பச்சைப் பட்டாணியுடன் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து, அதனுடன்  நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல்  சேர்த்துப் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #27 on: September 27, 2015, 01:35:25 PM »
ராகி பக்கோடா



தேவையானவை:

கேழ்வரகு மாவு - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (நசுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (நசுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - கால் கிலோ, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #28 on: September 27, 2015, 01:43:27 PM »
சேமியா பக்கோடா



தேவையானவை:

சேமியா - 100 கிராம், கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம் - 2 (நறுக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 250 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது). இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #29 on: September 27, 2015, 01:44:58 PM »
வெண்டைக்காய் பக்கோடா



தேவையானவை:

இளசான வெண்டைக்காய் - கால் கிலோ (வில்லைகளாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், சோள மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து நீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.