Author Topic: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~  (Read 2622 times)

Online MysteRy



பார்க்கும்போதே நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் உணவு வகைகளில் பஜ்ஜி, போண்டா, பக்கோடாவுக்கு தனி இடம் உண்டு. அவற்றில் வழக்கமான சில அயிட்டங்களுடன்... ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி, ஓமவல்லி பஜ்ஜி, பனீர் - ஆலு போண்டா, ராகி பக்கோடா, சேமியா பக்கோடா என வித்தியாசமான பல ரெசிப்பிகளையும் சேர்த்து வழங்குவதன் மூலம் இங்கே ஒரு `கரகர மொறுமொறு மேளா’வே நடத்திக்காட்டி அசத்தும் சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்,
‘`இவை அனைத்துமே எண்ணெய்ப் பதார்த்தங்கள் என்பதால், அளவுடன் செய்து பயன்படுத்துங்கள்’’ என்று அக்கறையுடன் கூறுகிறார்.

Online MysteRy

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி



தேவையானவை:

 கடலை மாவு - 100 கிராம், ஆப்பிள் (மீடியம் சைஸ்) - ஒன்று, அரிசி மாவு - 20 கிராம், சர்க்கரை - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 300 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

ஆப்பிளை ஒரு இன்ச் கனத்துக்கு வட்டமாக நறுக்கி விதை நீக்கவும். சர்க்கரையை சிறிதளவு வெந்நீர் விட்டுக் கரைத்து ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சர்க்கரை நீர், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஆப்பிள் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

அப்பள பஜ்ஜி



தேவையானவை:

உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4, கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 300 கிராம்.

செய்முறை:

ஒவ்வொரு அப்பளத்தை யும் நான்காக கட் செய்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

Online MysteRy

மல்டி மாவு பஜ்ஜி



தேவையானவை:

கடலை மாவு 50 கிராம், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய காய்கறித் துண்டுகள் - 10 அல்லது 15 (வாழைக்காய், உருளைக்கிழங்கு கத்திரிக்காய் ஏதேனும் ஒன்று) சமையல் சோடா - ஒரு சிட்டிகை,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, ஓமம் - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - கால் கப், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 300 கிராம்.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, ஓமம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், புளித்த தயிர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். காய்கறி துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

ஓமவல்லி பஜ்ஜி



தேவையானவை:

ஓமவல்லி இலை - 10 (சுத்தம் செய்து காம்பு நீக்கவும்), கடலை மாவு - 75 கிராம், அரிசி மாவு - 15 கிராம், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.  ஓமவல்லி இலைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

பச்சை மிளகாய் விழுதுக்குப் பதில் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

Online MysteRy

கேரட் பஜ்ஜி



தேவையானவை:

மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு - 100 கிராம்,  அரிசி மாவு - 50 கிராம், கேரட் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ந்த மிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக்கவும். இதனை மாவுடன் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவாக கரைத்துக்கொள்ளவும். கேரட் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

தக்காளி பஜ்ஜி



தேவையானவை:

அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5 (கனத்த வில்லைகளாக நறுக்கவும்), பொட்டுக்கடலைமாவு - 50 கிராம், சோள மாவு - 25 கிராம், மைதா மாவு - ஒரு  டீஸ்பூன், காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, சமையல் சோடா  - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா,  மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். தக்காளி வில்லை களை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

தக்காளியில் இருக் கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

பிரெட் பஜ்ஜி



தேவையானவை:

பிரட் ஸ்லைஸ்கள் - 4 (ஒவ்வொன்றையும் 4 துண்டு களாக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நசுக்கவும்),  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, சீரகம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, நசுக்கிய பூண்டு, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

ஸ்டஃப்டு பஜ்ஜி



தேவையானவை:

புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி (ஏதேனும் ஒன்று) - ஒரு கரண்டி, உருளைக்கிழங்கு - 3 (தோல் நீக்கி, வில்லைகளாக நறுக்கவும்), கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 20 கிராம், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளின் மீது சிறிதளவு சட்னியை பரவலாக தடவி, சட்னி உட்பக்கம் இருக்குமாறு வில்லைகளை மூடி, கரைத்த மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

சட்னிக்குப் பதில் தக்காளி சாஸ் பயன்படுத்தியும் இந்த பஜ்ஜியைத் தயாரிக்கலாம்.

Online MysteRy

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா



தேவையானவை:

250 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை.
ஸ்டஃப்பிங் செய்ய: கடலைப் பருப்பு - 200 கிராம் (வேகவைத்து மசிக்கவும்), தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - 150 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து வடிகட்டி... மசித்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து நெய் விட்டு நன்கு கிளறி, பூரணப் பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும். இதை உருண்டகளாக உருட்டவும்.
உளுத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். பூரண  உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் எரியவிடவும். சூடு அதிகமானால் போண்டா எண்ணெ யில் கரைந்துவிடக்கூடும்).

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #10 on: September 27, 2015, 11:41:58 AM »
அரைத்த மாவு பஜ்ஜி



தேவையானவை:

கடலைப்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - 20 கிராம், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயம் - சிறு துண்டு (பொடிக்கவும்), மெல்லிய சதுரங்களாக நறுக்கிய சேனைக்கிழங்கு - 10 அல்லது 15 துண்டுகள், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாயை ஒன்று சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்து எடுக்கவும். சேனைக்கிழங்கு வில்லைகளை புளிக்கரைசல், சிறிது உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் வேகவிட்டு, நீரை வடிகட்டவும். இந்த வில்லைகளை அரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #11 on: September 27, 2015, 01:02:47 PM »
பனீர் - ஆலு போண்டா



தேவையானவை:

கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 25 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - கால் கிலோ.
ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்க வும்) , பனீர் துண்டுகள் - 50 கிராம், பொடித்த மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட் களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். தயார் செய்து வைத்த உருண்டை களை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #12 on: September 27, 2015, 01:06:22 PM »
மினி போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி  - ஒரு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை:

உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். மாவை சிறிய குழிக்கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

குறிப்பு:

கரண்டியை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு உதறிவிட்டு, மாவை எடுத்துப் போட்டால்... போண்டா அழகாக வரும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #13 on: September 27, 2015, 01:07:56 PM »
பிரெட் போண்டா



தேவையானவை:

 பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),  எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (துருவவும்),  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்), நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

சிறிதளவு எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும். பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும். இதை சூடான எண்ணெயில் பொரித்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா! ~
« Reply #14 on: September 27, 2015, 01:09:22 PM »
லெஃப்ட் ஓவர் போண்டா



தேவையானவை:

  மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல்  - ஒரு கப்,  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), சாட் மசாலா - சிறிதளவு, ரஸ்க்தூள் அல்லது பிரெட் தூள் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 250 கிராம், உப்பு சிறிதளவு.
மேல்மாவுக்கு: மைதா மாவு, சோள மாவு (சேர்த்து) - 150 கிராம், உப்பு, மிளகாய்த்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

 வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கி... பொரியல், சாட் மசாலா, உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, பிரெட் (அ) ரஸ்க் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.