Author Topic: ~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~  (Read 2836 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இஞ்சி - பூண்டுத் துவையல்



தேவையானவை:

தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு -  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.
« Last Edit: August 27, 2015, 07:21:33 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெற்றிலை - பூண்டுத் துவையல்



தேவையானவை:

 கும்பகோணம் கார / கறுப்பு வெற்றிலை - 10, துவரம் பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - கோலி அளவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம் - சிறிதளவு.
தாளிக்க:  எண்ணெய் - 2  டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிட்டிகை.

செய்முறை:

வெற்றிலையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் துவரம் பருப்பு, மிளகாய், சீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுத்து, வெற்றிலையைச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும். கஞ்சியுடன் இந்தத் துவையல் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

பலன்கள்:

வெற்றிலை நல்ல செரிமானத்தைத் தரக்கூடியது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், அயோடின், பொட்டாசியம், நார்ச்சத்து இதில் அதிகம்.  வயிற்றுப் புண்களை ஆற்றும்.  கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை வராது. எலும்புகள் வலுப்பெறும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இஞ்சித் துவையல்



தேவையானவை:

தோல் நீக்கித் துருவிய இளசான இஞ்சி, வெல்லம் - தலா 100 கிராம், உப்பு, புளி - தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - சிறிதளவு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:

இஞ்சித் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

இஞ்சி, கொழுப்பு, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், எலும்புகள் நன்றாக வலுப்பெற உதவும்.  செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு, இந்தத் துவையல்  மிகவும் நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேங்காய் - மாங்காய்த் துவையல்



தேவையானவை:

துருவிய கிளி மூக்கு மாங்காய், துருவிய தேங்காய் - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 6, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்.

செய்முறை:

மாங்காய், தேங்காய், உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள் தூளை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளன. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள், இந்தத் துவையலை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சோர்வை நீக்கும்.  நிறைய நீர்ச்சத்து இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பரங்கிக்காய்த் துவையல்



தேவையானவை:

நறுக்கிய பரங்கிக்காய் (விதை தோல் நீக்கியது) - ஒரு கப், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, புளி - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் மூடி, பெருங்காயம் - சிறிய கட்டி.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரங்கித் துண்டு, உப்பு, புளி சேர்த்து, நன்றாக வதக்கி ஆறவிடவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், இவற்றைத் தனித்தனியே ஒன்றரை டீஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து, ஆறவிட வேண்டும்.  எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, கடுகு, வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின், ஏ, மற்றும் கே இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள்  அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாதநாராயணக் கீரைத் துவையல்



தேவையானவை:

வாதநாராயணக் கீரை (ஆய்ந்து, அலசியது) - ஒரு கப், தோலுடன் உடைத்த கறுப்பு உளுந்து - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிளகாய், வெந்தயம் போட்டுப் பொரித்துக் கொள்ளவும். அதே கடாயில், கறுப்பு உளுந்து, மிளகாய் சேர்த்துச் சிவக்க வறுத்து, வாதநாராயண இலையைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிட வேண்டும். வறுத்த, பொரித்த, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, மிக்ஸியில் கெட்டியாக அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில், கடுகு தாளித்து, துவையலில் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

வாதத்துக்குச் சிறந்த மருந்து. எளிதில் செரிமானம் ஆகும்.  வாயுத் தொல்லை நீங்கும். மூட்டு வலியைப் போக்கும். புரதம் அதிகம் இருப்பதால், இடுப்பு எலும்புகள், தசைகள் உறுதியாகும். வைட்டமின் சி இருப்பதால், சளி, ஆஸ்துமா  தொல்லை இருப்பவர்கள் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முளைக்கீரைத் துவையல்



தேவையானவை:

முளைக்கீரை (சுத்தம் செய்து நறுக்கியது) - அரைக்கட்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உடைத்த உளுந்து - 4 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - சிறிது, பெருங்காயம் - ஒரு கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

புளி தவிர, எல்லாவற்றையும் எண்ணெயில் நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, புளி சேர்த்து அரைக்கவும். கீரை சாப்பிடாதவர்கள்கூட, இந்தத் துவையலை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பலன்கள்:

நீர்ச்சத்து இதில் அதிகம்.  உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.  ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொடிக்கருணைக் கிழங்கு துவையல்



தேவையானவை:

துருவிய கொடிக்கருணைக் கிழங்கு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மிளகு - ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

 உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றைத் தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன், வறுத்த பொருட்கள், மீதம் உள்ள அனைத்தையும் சேர்த்து, துவையலாக அரைத்துப் பரிமாறவும்.

பலன்கள்:

உடம்பு வலி, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும். சரும வறட்சியைப் போக்கும். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உண்ண உடல் வலுவாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லி - புதினா துவையல்



தேவையானவை:

புதினா, கொத்துமல்லி - தலா ஒரு கட்டு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 3, உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், புளி - சிறிய எலுமிச்சை அளவு, உப்பு - சுவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பை வறுத்து, பெருங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து, சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் போட்டு இரண்டு திருப்பு திருப்பிவிட்டு (அதிகம் வதக்க வேண்டாம்), உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்து, துவையலைப் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு வாரம் வரை கெடாது.

பலன்கள்:

வயிற்று உப்புசம் தீரும். செரிமானத்தை அதிகப்படுத்தும். உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றக் கழிவுகளை விரைந்து வெளியேற்றும். வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புதினா கறிவேப்பிலைத் துவையல்



தேவையானவை:

புதினா, கறிவேப்பிலை (சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கியது) - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள் தூள், உப்பு - சிறிதளவு, புளி - 2 கோலி குண்டு அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு.

செய்முறை:

இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் புதினா, கறிவேப்பிலை, மிளகாயைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து, இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கி இறக்க வேண்டும். தேங்காய், பருப்புச் சேர்க்காததால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம், இதில் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் ஆகும்.  வாய் துர்நாற்றத்தைப் போக்கும். எலும்புகள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தசோகை இருந்தால், இந்த துவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெந்தயக் கீரைத் துவையல்



தேவையானவை:

ஆய்ந்து சுத்தம் செய்த வெந்தயக் கீரை - 2 கட்டு, வெள்ளை வெங்காயம் (நறுக்கியது) - 1, தக்காளி (நறுக்கியது) - 2, இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

சிறிது எண்ணெயில் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து, கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிறு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். இதில் வைட்டமின் சி இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முருங்கைக் கீரைத் துவையல்



தேவையானவை:

ஆய்ந்து கழுவிய முருங்கைக் கீரை - ஒரு கப், உடைத்த உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், நாட்டுத் தக்காளி ( நறுக்கியது) - 3, சிறிய வெங்காயம் - 4, பூண்டுப்பல் - 2, உப்பு  - சிறிதளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், தக்காளி மற்றும் கீரையைச் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும், உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைத் தாளித்துச் சேர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், துளி வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.

பலன்கள்:

முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். கால்சியம், மக்னீஷியம், வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இளம் தாய்மார்கள் சாதத்துடன் பிசைந்து சாப்பிட, தாய்ப்பால் பெருகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரண்டைத் துவையல்



தேவையானவை:

தோல் நீக்கிய பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், புளி, உப்பு- தேவையான அளவு காய்ந்த மிளகாய் - 6, வெல்லம் - சிறிதளவு, தேங்காய் - கால் மூடி, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பிரண்டையை வெந்நீரில் போட்டு, ஒரு கொதிவந்ததும் இறக்கி வடிகட்ட வேண்டும். சிறிது எண்ணெயில், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும்.  எள்ளை கடாயில் போட்டு படபடவெனப் பொரியவிட்டு எடுக்க வேண்டும். வடிகட்டிய பிரண்டையைச் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி இதனுடன் உப்பு, புளி, வெல்லம் சேர்த்து, வறுத்த எள், பருப்பைக் கலந்து அரைக்க வேண்டும்.

பலன்கள்:

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க பிரண்டை உதவும். புரதம், நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பைக் கரைத்து, வயிறு தொடர்பான பிரச்னையைப் போக்கும். வாய்க்கசப்பை நீக்கும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பருப்புத் துவையல்



தேவையானவை:

துவரம் பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 6, பெருங்காயம் - சிறிய கட்டி, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன், புளி - சிறிய கோலி அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 புளியைத் தவிர மற்ற பொருட்களை நன்றாகச் சிவக்க வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

பலன்கள்:

பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவாக இருக்கும்.  நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பர‌ஸ் இதில் இருப்பதால், எலும்புகள் வலுப்பெறும்.  எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்கு உறுதியைத் தரும். இதை ‘விரதத் துவையல்’ என்றும் சொல்வார்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேர்க்கடலைத் துவையல்



தேவையானவை:

தோல் நீக்கி, வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், நறுக்கிய தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - சிறிதளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

 ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், உப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

  வைட்டமின் ஏ, சி, இ மற்றும் நார்ச்சத்து, மக்னீஷியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம். வேர்க்கடலை கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.  எளிதில் செரிமானம் ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தலைமுடி வளர்வதற்கு உதவும். இதயம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும்.