Author Topic: ~ தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! ~  (Read 2818 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சாப்பிட அமர்ந்தாலே, சிப்ஸ், ஸ்நாக்ஸ், வத்தல் எனப் பலருக்கும் ஏதாவது ஒரு சைடுடிஷ் தேவைப்படுகிறது. சாம்பார், ரசம், பருப்பு, பொரியல், கூட்டு, பச்சடி, பப்படம் என சகலமும் இருந்தால்தான், அது சமச்சீரான உணவாக இருக்கும். உடலுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் கிடைக்கும். பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் வீட்டில் சமையல் என்பதே ஏதாவது ஒரு குழம்பு, பொரியல் செய்வதுடன் முடிந்துவிடுகிறது. இதனால், உடலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
சிப்ஸ், மிக்‌ஸர், நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, வீட்டிலேயே மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய துவையலைச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, போதிய சத்துக்களும் கிடைக்கும்.



காய்கறி, கீரை, மூலிகைகள் என எல்லாவற்றிலும் செய்யக்கூடிய துவையல் வகைகளை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சில துவையல்களை  சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா எனச் சிற்றுண்டிகளுக்கு சைடுடிஷ்ஷாகவும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு துவையல் இருந்தால், தயிர்சாதம்கூட‌ தேவாமிர்தமாக இருக்கும்.
இதில் சில ரெசிப்பிகளில் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, காயவைத்து, பொடித்து, பருப்புப் பொடி, தேங்காய்ப் பொடி எனப் பொடி வகைகளாகவும் மாற்றலாம். காயவைக்காமல் தண்ணீர் சேர்த்து அரைத்தால், துவையல். அரைத்துக் குழையவைத்துக் கூட்டாகவும் மாற்றலாம்.



இப்படி, பல்வேறு சுவைகளில் சத்துக்களை அள்ளித் தரும் இந்த ரெசிப்பிகளை தினமும் ஒன்று எனச் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியம் மேம்படும்.
சமையல் நிபுணர் லட்சுமி ஶ்ரீனிவாசன், ரெசிப்பிகளைச் சுவைபடச் செய்துகாட்ட, அதன் பலன்களைப்  பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பிரியங்கா.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சின்ன வெங்காயத் துவையல்



தேவையானவை:

சின்ன வெங்காயம் - 100 கிராம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 4, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாயைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு டீஸ்பூன் எண்ணெயில், பூண்டு, புளி, வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை போக, வதக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

பலன்கள்:

சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் இருப்பதால், ரத்தசோகை வருவது தடுக்கப்ப‌டும். எலும்புகள் உறுதியாகும். குளிர்ச்சியைத் தரும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முடக்கத்தான் கீரைத் துவையல்



தேவையானவை:

சுத்தம் செய்து, ஆய்ந்த முடக்கத்தான் கீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை:

 கடாயில் எண்ணெய்விட்டு முடக்கத்தான் கீரை, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீண்டும் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, அரைத்த தொக்கைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் எடுத்துவைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

பலன்கள்:

மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயிற்று உப்புசம் தீரும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலு ஊட்டும். ரத்தசோகையை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சௌசௌ துவையல்



தேவையானவை:

தோல் நீக்கிய இளசான செளசெள - 1, காய்ந்த மிளகாய் - 8, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - அரை மூடி.

தாளிக்க:

கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உடைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

 கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய சௌசௌ, காய்ந்த மிளகாய், புளி, மற்றும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, ஆறவிட வேண்டும். இதை, மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. உடலுக்கு நல்ல வலுவைக் கூட்டும்.  நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகப் பிரச்னையைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீர்க்கங்காய்த் துவையல்



தேவையானவை:

தோல், விதை நீக்கி நறுக்கிய பீர்க்கங்காய் - கால் கிலோ, இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 6, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு,  மஞ்சள் தூள் - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம், நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு வதக்க வேண்டும். நீர் வற்றும் வரை காயை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
இந்தத் துவையல் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.

பலன்கள்:

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ரிபோஃப்ளோவின் அதிகம்.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.  பார்வைத்திறன் மேம்படும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீட்ரூட் - கேரட் துவையல்



தேவையானவை:

தோல் சீவித் துருவிய பீட்ரூட், கேரட் துருவல் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, புளி - சிறிய கோலி அளவு, பூண்டுப்பல் - 3, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

 நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

சிறிது நல்லெண்ணெயில் பூண்டை வதக்கி, துருவிய கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்க வேண்டும். தொக்கு பதத்துக்கு வரும் வரை இந்த விழுதைக் கிளறி இறக்க வேண்டும்.

பலன்கள்:

இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்னை தீரும். சக்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லித் துவையல்



தேவையானவை:

கொத்தமல்லித் தழை - 250 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், தேங்காய்த் துருவல் - 2 ஒரு கப், குடமிளகாய் - 2, கறுப்பு உப்பு மற்றும் மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், குடமிளகாய் சேர்த்து அரைத்து, கறுப்பு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.

பலன்கள்:

மூட்டுவலி, வயிற்றுப் பொருமல் சரியாகும்.  அதிக உடல் எடை இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.  நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம் குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேங்காய் கிரீன் துவையல்



தேவையானவை:

முற்றிய தேங்காய் (துருவியது) - அரை மூடி, பச்சைமிளகாய் - 6, கொத்தமல்லி - அரைக்கட்டு (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:

தேங்காய், பச்சை மிளகாய், மொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

தேங்காயில் புரதம், நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எளிதில் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பச்சைமிளகாய்த் துவையல்



தேவையானவை:

ஊசிப் பச்சைமிளகாய் - 15 (கீறிக்கொள்ளவும்), புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் - சிறிது, வெல்லம் - 50 கிராம், உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவும். பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். இதில், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வெல்லம் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும். வெல்லமும் எண்ணெயும் பச்சைமிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, சுவையையும் மணத்தையும் கூட்டும்.

பலன்கள்:

பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வாய் கசப்பு நீங்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்துக்கு நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேங்காய் சிவப்புத் துவையல்



தேவையானவை:

முற்றிய தேங்காய் (துருவிக்கொள்ளவும்) - அரை மூடி, காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப்பல் - 2, உப்பு - சிறிதளவு.

தாளிக்க:

எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:

தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

பலன்கள்:

 தேங்காயில் புரதம் கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.  வாயுத் தொடர்பான பிரச்னைகள் வராது. வயிற்றுப்புண்னைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கமலா ஆரஞ்சு தோல் துவையல்



தேவையானவை:

கமலா ஆரஞ்சுப் பழத்தின் தோல் நறுக்கியது - கால் கப், உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம் - சிறிய கட்டி, உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - சிறிது, புளி - கோலி குண்டு அளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 8.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பழத் தோலைப் போட்டு வதக்கி, தனியே வைக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்‌ஸியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து, அரைக்க வேண்டும். தோசை, பிரெட், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடலாம்.

பலன்கள்:

பொட்டாசியம், வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்களுக்கு நல்லது. கால்சியம் சத்து இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். உடல் குளிர்ச்சியடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.  வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் என்பதால், ரத்தசோகை வருவதைத் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொய்யா துவையல்



தேவையானவை:

அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது), பச்சை மிளகாய் - தலா 4, கொத்தமல்லி - சிறிதளவு,  எலுமிச்சை - 1, தேங்காய் (துருவிக்கொள்ளவும்) - கால் மூடி, உப்பு சிறிதளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பலன்கள்:

அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. கொத்தமல்லி சேர்ப்பதால், உடலின் நச்சுக்களை நீக்கும். எலுமிச்சைச் சாறு சேர்ப்பதன் மூலம், வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல்லித் துவையல்



தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 10 (வேகவைத்து கொட்டை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

 கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

கடாயில், ஒரு  டீஸ்பூன் எண்ணெயை விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, இதனுடன், உப்பு, வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து அரைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதில் வைட்டமின் சி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன.  எடை குறையும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சேனைத் துவையல்



தேவையானவை:

தோல் நீக்கித் துருவிய மலபார் சேனை (சிவப்பாக இருக்கும்) - ஒரு கப், உடைத்த உளுந்து - 4 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிய கட்டி, புளி - பெரிய நெல்லி அளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், துருவிய சேனை சேர்த்து நன்றாக வதக்கி, மிதமான தீயில் வேகவிடவும்.  ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுத்து, ஆறியதும், சேனை, வறுத்த உளுந்து, உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது எண்ணெயில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, ஐந்து முதல் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறி எடுக்கவும்.

பலன்கள்:

 சேனையில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுட்ட கத்திரிக்காய்த் துவையல்



தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் - 1, உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், உப்பு, தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 6.

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2, பருப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கத்திரிக்காயில் எண்ணெய் தடவி, ஆங்காங்கே துளைசெய்து (இல்லாவிட்டால் வெடித்துப் பிளந்துவிடும்) தோல் கருகும் வரை அடுப்பில் சுட வேண்டும். பிறகு, தோலை நீக்கி, மசித்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து, கடைசியாகத் தக்காளியை நறுக்கிப் போட்டு, வதக்கி ஆறவிட வேண்டும். உப்பு, மசித்த கத்தரிக்காய் சேர்த்து, மிக்ஸியில் ஒருமுறை சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்பு:

பெரிய கத்தரிக்காய் கிடைக்காவிட்டால், சிறிய கத்தரிக்காயைப் பயன்படுத்தலாம்.

பலன்கள்:

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.  நார்ச்சத்து நிறைந்தது. வயிறு நிரம்பிய உணர்வு மேலிடும். இரும்பு, புரதம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அனைவரும் சாப்பிடலாம்.  கத்திரிக்காய் அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.