மேகமே 
வானுக்கும் பூமிக்கும் இடையில் 
நீந்துவதும்ஏனோ  
உன் இடையில் சூரியனை 
ஏந்தத்தானோ 
கைகளுக்கு இடையில் சூரியனை 
பொத்தி  வைப்பதும்ஏனோ  
விரல்கள் இடையில் 
ஒளியை சிதற விட்டு 
வானில் ஒளி ஓவியம் 
வரையத்தானோ 
நீல வானில் எங்கும் நிறைந்து 
வெள்ளை அடிப்பதும் ஏனோ 
மனதை கொள்ளை 
அடிக்கத்தானோ 
குளிர்ந்த தென்றலின் 
 தீண்டலில் உனக்கு 
வியர்ப்பதும் ஏனோ 
மழை நீராய் மாறி 
மண்ணில் உறங்க தானோ 
தென்றல் சுடுவதும் 
சூரியன் குளிர்வதும் ஏனோ 
உன் மனதில் காதல் 
செய்த மாயம் தானோ  
இடை இடையில் 
மறைந்து விடுவதும் ஏனோ 
இடைவேளை இல்லாமல் 
வெயிலில் நானும் 
வேகத்தானோ   
உன்னை பற்றி நான் 
 ஏனோ  தானோ 
என்று எழுதுவதும்  ஏனோ
நீ இல்லாத தருணங்களில் 
 வெயிலில் மண்டை  காய்வதால் தானோ