Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 046  (Read 2791 times)

Offline Global Angel

நிழல் படம் எண் : 046

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Gotham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: August 27, 2015, 10:55:24 AM by MysteRy »
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
வண்ண வண்ண ஆடை அணிய விலை  இல்லையோ,
வானவில்லை மட்டும் தீட்டிக் கொண்டு
எண்ண முடியா நச்சதிரங்களை  உன் வைற்றில் சுமந்து
மனிதன்  கனவுகள் காணும்  நேரத்தில் ஒளிர செய்கிறாய் ...

வான் மதியின் தளம் நீதானோ
மேக நிறம் கருத்து நிலவை ஒளிர  செய்கிறாய்
சிவப்பு  நிற ஆதவன் மனை நீதானோ
தேக வண்ணம் தேய்ந்து கதிரொளிரச் செய்கிறாய் ...

சூரியன் உன்னை சுற்றி எரிக்கவும்
அதை நெருங்கமுடியாமல்
நிலவை விழுங்கி விட்டாய்
தேயும் நாட்களில் அன்று
அந்நிலைமை மாறச் செய்தாய்.....

வளரும் நாட்களில் இன்று
உன் தேகம் போர்த்திக் கொள்ளவே,
வான் மேகம் வேண்டிப் பெற்றாய்
மாலை, மேகம் விலகும் வேளையிலே
பெண்மை நாணம் கொண்டு சிவந்தாய் ......

என்ன சோகம் கண்டாயோ தெரியவில்லை
கண்கள் ஏதும் இல்லாமல்
பெண்ணைக் காதல் செய்யாமல்
கண்ணீர் என்னும் மழையை  மட்டும் பொழிகிறாய்
இடி இடித்தாலும் கண்ணீர் விடுகிறாய் ....

மின்னல் அடித்ததாலும் கண்ணீர் விடுகிறாய் 
மின்னலும் இடியும் கோவம் தனிந்த பின்பு
 தேம்பியும் கண்ணீர் விடுகிறாய்
பெண் குணம் கொண்டவள் நீ
உன் அழகில் ஆணவம் கொண்டு
வானம் பார்க்கும் பூமி ஆகியும்
கண்டும் காணாதது போல் நடித்துச் சென்றாய்....

கண்ணீராய் விட்டு மனிதனை கெடுக்கிறாய்
கண்ணீர் விடாமால் காய்ந்தும் கெடுக்கிறாய்
வானமே உனக்கு இறக்கம் என்பது இலையா
மனிதனை வதைக்காமல் வாழ்க்கை கொடு  :'(  :'( !!
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Dong லீ

மேகமே
வானுக்கும் பூமிக்கும் இடையில்
நீந்துவதும்ஏனோ 
உன் இடையில் சூரியனை
ஏந்தத்தானோ

கைகளுக்கு இடையில் சூரியனை
பொத்தி  வைப்பதும்ஏனோ

விரல்கள் இடையில்
ஒளியை சிதற விட்டு
வானில் ஒளி ஓவியம்
வரையத்தானோ

நீல வானில் எங்கும் நிறைந்து
வெள்ளை அடிப்பதும் ஏனோ
மனதை கொள்ளை
அடிக்கத்தானோ

குளிர்ந்த தென்றலின்
 தீண்டலில் உனக்கு
வியர்ப்பதும் ஏனோ
மழை நீராய் மாறி
மண்ணில் உறங்க தானோ

தென்றல் சுடுவதும்
சூரியன் குளிர்வதும் ஏனோ
உன் மனதில் காதல்
செய்த மாயம் தானோ 

இடை இடையில்
மறைந்து விடுவதும் ஏனோ
இடைவேளை இல்லாமல்
வெயிலில் நானும்
வேகத்தானோ   


உன்னை பற்றி நான்
 ஏனோ  தானோ
என்று எழுதுவதும்  ஏனோ
நீ இல்லாத தருணங்களில்
 வெயிலில் மண்டை  காய்வதால் தானோ 
« Last Edit: November 02, 2012, 04:27:51 PM by Dong லீ »

Offline தமிழன்

மேகமே
உன்னைப்போல் எனக்கு
வானவாசம் வேண்டும்
சிகர சிம்மாசனம் வேண்டும்'

'கீழே இறங்க ஆசைப்படு
தானாக மேலுயர்வாய்'


'மேகமே
உன்னைப் போல
கவலையற்ற சஞ்சாரம் வேண்டும்
எனக்கும் வேண்டும்'

'கடிவாளங்களை தூக்கி எறி
ஒரு திசை இலட்ட்சியத்தை மற
எல்லா திசைகளிலும் நீ
சஞ்சாரம் செய்வாய்'


'மேகமே
உன்னைப் போல
எல்லா இடங்களிலும் நான் இருக்க வேண்டும்

'ஒரு இடத்தில் தங்காதே
எல்ல இடமும் உனதாகும்'


'மேகமே
உன்னைப் போல
ஏழு வர்ண வானவில்
எனக்கும் வேண்டும்'

'கண்ணீர்துளிகளால் நிரம்பி இரு
வான ஒளியின் ஸ்பரிசத்துக்கு
இடம் கொடு
உனக்கும் வானவில் கிடைக்கும்'


'மேகமே
உன்னைப் போல
நானும் மழையாக வேண்டும்'

'உன்னை கேட்பவர்களுக்கு
உன்னை முழுமையாகத் தா
நீயும் மழையாவாய்'

'மேகமே
உன்னைப் போல
உன்னிலிருந்து வெளிவரும் ஒளியாக
நானும் மாற வேண்டும்'

'நீ மகானாக வேண்டுமென்பதல்ல
நல்ல மனிதனாக இரு
நீயும் ஒளியாக மாறுவாய்'

Offline Global Angel

உறவுகளின் உரசல்களில்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களை பற்றவைத்துக்கொண்டது
ஏக்கங்கள் எட்டி நின்று வதைத்தது போய்
கிட்ட வந்து ஆடை தொட்டு இழுத்தது
இடறி விழுந்து எந்திரித்த பொழுதுகளில்
எக்காளமிட்டு சிரித்து மகிழ்ந்தது
பிறள் மனது ...

மனமெங்கும் இருள் சூழ
தனமிங்கு பகையாக
கனமென்று இதயம் துடிக்க
பிணமன்று சொல்ல
பகைமார்பும் எம்பி தணிய
பிடுங்கி எறிந்த கொடியாய்
பேதை உயிருடல் சோர
ஏக்கம் கலந்த பார்வையில்
பல தேக்கம் கலந்து காத்திருந்தபோது

இருள்வானும் எழில்கொள்ள
மருள் கதிரும் உருக்கொள்ள
கருக்கொண்ட மேகம் தனை
கதிர் கொண்டு அணைததுவோ...
நீல வானும் எழில்கோலம் கொள்ள
கதிரவன் கதிர்கரம் கொண்டு
முகில் தனை புறம்தள்ள
ஒளிக்கரம் வானை தழுவுவது போல்
உள்ள இருளும் ஓடி ஒளிவதுபோல்
எங்கோ ஒரு குரல்
எட்டி தழுவியது செவிகளை
விட்டு விலகியது இருள் மட்டுமல்ல
இதயத்தின் இருப்பின்மையின்
உறுதியற்ற நிலைபாடுக்களும்தான்