Author Topic: நீ என்னென்ன சொன்னாலும்...  (Read 669 times)

Offline நிலா

வள்ளுவரே 
வார்த்தை தேடி 
வட்டிக்குக் கடன்
வாங்க வரலாம்
உன்னிடத்தில்...

மேத்தாவின்
மேதாவித் தனமே
மண்டியிடலாம்
உன்னிடத்தில்...

வைரமுத்துவின்
வரிகள் யாவும்
வழுக்கி விழலாம்
உன்னிடத்தில்...

இப்படியெல்லாம்
அளந்து விட  ஆசை தான்!

உரைநடையே
உன்னிடம்
உதை வாங்கும்
உண்மை கொஞ்சம்
உறுத்துவதால்
இத்துடன் நிறுத்துகிறேன்!

ஆனாலும் அன்பே,
எனக்கு மட்டும்...

நீ
என்னென்ன சொன்னாலும்
கவிதை...

உன்
உளறல்கள் ஒவ்வொன்றும்
உவமை...

மொத்தத்தில்
என்
முத்(தத்)தமிழும் நீ!



 
« Last Edit: July 20, 2015, 11:13:08 AM by நிலா »

Offline gab

Re: நீ என்னென்ன சொன்னாலும்...
« Reply #1 on: July 20, 2015, 10:46:58 PM »
உரைநடையே
உன்னிடம்
உதை வாங்கும்
உண்மை கொஞ்சம்
உறுத்துவதால்
இத்துடன் நிறுத்துகிறேன்


கவிதைல கூட யாரையோ கலைசிருக்கிங்க. அரட்டை அரங்கத்தில் பேசும் ஸ்டைல் ல கவிதை வரிகளாய் வடித்திருக்கிறீர்கள் நிலா. தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்.

Offline Dong லீ

Re: நீ என்னென்ன சொன்னாலும்...
« Reply #2 on: July 20, 2015, 10:56:48 PM »
ஹாஹா நவீன வஞ்ச புகழ்ச்சி அணி

அருமை.

நிலா உங்கள் கவிதைகள் நில்லாமல் ஓடி வர வேண்டுகிறேன்

Offline Maran

Re: நீ என்னென்ன சொன்னாலும்...
« Reply #3 on: July 21, 2015, 09:19:26 AM »



கவிதை என்பது உள்ளத்தில் வெட்டிவிட்டுப் போகும் ஒரு மின்னல். உணர்வுகளை சுருக்கமாக சிறப்பாகக் கொட்டுவதற்கு அது ஒரு வடிவம் எனலாம். நீங்கள் கோர்த்த வார்த்தைச் சரம் மணக்கிறது. வாழ்த்துக்கள் தோழி....




Offline thamilan

Re: நீ என்னென்ன சொன்னாலும்...
« Reply #4 on: July 21, 2015, 10:28:10 AM »
கவிதை என்பது எந்த நடையினில் இருந்தாலும் பெண்கள் எழுதும் போது ஒரு ஒய்யார நடையிலும் ஆண்கள் எழுதும் போது ஒரு கம்பிர நடையிலும் இருந்த அது எல்லோர் மனதையும் கவரும். அட நான் நடக்கிற நடைய சொன்னேன்பா . நிலா கவிதை நிலாவப் போல ( வானத்து நிலவை சொன்னேன் } அழகாக இருக்கிறது

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: நீ என்னென்ன சொன்னாலும்...
« Reply #5 on: July 21, 2015, 10:18:17 PM »
oie nila ne yaara kalaikkira:P kavithai nice un kavipayanam thodara vaazhthukkal