Author Topic: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~  (Read 2406 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #15 on: July 11, 2015, 07:57:31 PM »
தேங்காய்  கடலை மாவு பர்ஃபி



தேவையானவை:

தேங்காய்த் துருவல், பால், கடலை மாவு, நெய்  தலா ஒரு கப், சர்க்கரை  3 கப்.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து, ஒன்றாக கலக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, இந்தக் கலவையை சேர்த்து, கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகளாக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #16 on: July 11, 2015, 07:59:07 PM »
மைதா  ரவை தட்டை



தேவையானவை:

மைதா, ரவை, அரிசி மாவு  தலா ஒரு கப், தேங்காய்த் துருவல்  அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  2 டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன், மிளகுப்பொடி (சற்று கொரகொரப் பாக பொடிக்கவும்)  2 டீஸ்பூன், உப்பு  தேவைகேற்ப, எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

பொரிப்பதற்கான எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, 20 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைக்கவும். ஊற வைத்த மாவுக் கலவையை துணியில் மெல்லிய தட்டைகளாக தட்டி, 'ஃபோர்க்’கால் (முள்கரண்டி) குத்தி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #17 on: July 11, 2015, 08:00:58 PM »
பனீர் ஜாமூன்



தேவையானவை:

பனீர்  125 கிராம், மைதா  100 கிராம், பேக்கிங் பவுடர்  கால் டீஸ்பூன், மில்க்மெய்டு  முக்கால் கப், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்கு தேவையான அளவு, சர்க்கரை  ஒன்றரை கப்.

செய்முறை:

பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு தயாரிக்கவும். வேறொரு பாத்திரத்தில் (பொரிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெயைத் தவிர) மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்தி மாவு மாதிரி கெட்டியாக பிசையவும். மாவை அதை நீள் உருளை வடிவில் அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். உருட்டியவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து, சர்க்கரைப் பாகில் சேர்க்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #18 on: July 11, 2015, 08:02:46 PM »
க்ளேஸி அல்வா



தேவையானவை:

சோள மாவு  50 கிராம், நெய்  100 கிராம், சர்க்கரை  200 கிராம், ஏலக்காய்தூள்  ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி  கால் கப், மஞ்சள் ஃபுட் கலர்  அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சோள மாவை சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து அதே பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்தவுடன் பாகை இறக்கிவிடவும். அதனுடன்   எலுமிச்சைச் சாறு சேர்க்கவும் (இது பாகு பூத்து போகமல் இருக்க உதவும்). நெய்யை உருக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு, சோள மாவு கரைசலில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சர்க் கரை பாகை சிறிதுசிறிதாக விட்டு கலக்கிக்கொண்டே இருக்கவும். (அடுப்பில் வைக்க வேண்டாம்). இதை கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு அடுப்பில் வைத்து உருக்கிய நெய்யை ஊற்றியபடி கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் சமயத்தில்... பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து, மேலும் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #19 on: July 11, 2015, 08:15:25 PM »
ஃப்ரைடு ஐஸ்க்ரீம் லட்டு



தேவையானவை:

வெனிலா ஐஸ்க்ரீம்  தேவைக்கேற்ப, மைதா மாவு  அரை கப், பொடித்த ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது  பிரெட் தூள்  தேவையான அளவு, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

வெனிலா ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப் எடுத்து, பொடித்த கார்ன் ப்ளேக்ஸ் அல்லது பிரெட் தூளில் புரட்டி, தனியே வைக்கவும். இதேபோல் ஒவ்வொரு ஸ்கூப்பாக எடுத்து பிரெட் தூள் அல்லது பொடித்த கார்ன் ப்ளேக்ஸில் புரட்டி ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்பு மைதா மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். ஃப்ரீசரில் வைத்து எடுத்த லட்டுகளை மைதா மாவில் தோய்த்து எடுத்து தட்டில் அடுக்கி, மறுபடியும் செட்டாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும் (குறைந்தது ஒரு மணி நேரம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மைதா மாவில் தோய்த்த லட்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மிகவும்  ருசியான இந்த லட்டை பொரித்த எடுத்த உடனேயே சாப்பிட வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #20 on: July 11, 2015, 08:37:56 PM »
கிருக்குப்பட்டு



தேவையானவை:

மேல்மாவுக்கு: மைதா  ஒரு கப், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், ரவை  3 டீஸ்பூன், உப்பு  கால் டீஸ்பூன், எண்ணெய்  3 டீஸ்பூன்.

பூரணத்துக்கு:

வறுத்த கடலை மாவு  ஒரு கப், சர்க்கரை  ஒன்றரை கப், முந்திரி  பாதாம் துண்டுகள்  திராட்சை (சேர்த்து)  கால் கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல்  கால் கப்.

பொரிப்பதற்கு:

எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

 மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, 20 நிமிடம் ஊறவைக்கவும். பூரணத்துக்கு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். மேல் மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து சொப்பு போல் செய்து, அதன் உள்ளே பூரணக் கலவையை சிறிதளவு வைத்து, நன்றாக மூடி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #21 on: July 11, 2015, 09:25:45 PM »
மனோகரம்



தேவையானவை:

கடலை மாவு  2 கப், அரிசி மாவு  ஒரு கப், பொடித்த வெல்லம்  2 கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு, உப்பு  அரை டீஸ்பூன், வெண்ணெய்  கால் கப்.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை ஒரு கண் துளையுள்ள அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து எடுத்து வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொத்திக்கவிட்டு வடிகட்ட வும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி பாகு காய்ச்சி (தக்காளி பதம்), ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்து வைத்துள்ளவற்றில் ஊற்றிக் கலந்து வைக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #22 on: July 11, 2015, 10:03:00 PM »
ஸ்வீட் நட்ஸ் பீடா



தேவையானவை:

அரிசி  4 டேபிள்ஸ்பூன் (ஊறவைத்து அரைக்கவும்), மைதா  ஒரு கப், சமையல் சோடா  ஒரு சிட்டிகை, நெய்  தேவையான அளவு
பூரணத்துக்கு: துருவிய தேங்காய்  ஒன்று அல்லது ஒன்றரை கப், உலர்திராட்சை  2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு  ஒரு கப், முந்திரித் துண்டுகள்  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பூரணத்துக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்க்கவும். அரைத்த அரிசி மாவுடன், மைதா, சமையல் சோடா சேர்த்துக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, நெய் விட்டு, சிறிது சிவக்க சுட்டெடுக்கவும்.  தோசையின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் பூரணத்தை வைத்து பாய் போல் சுருட்டி, சிறு சிறு துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #23 on: July 11, 2015, 10:13:42 PM »
தேங்காய் அப்பம்



தேவையானவை:

தேங்காய்த் துருவல்  அரை கப், சர்க்கரை  ஒரு கப், எண்ணெய்  தேவையான அளவு, ரவை  அரை கப், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, மைதா  2 கப்.

செய்முறை:

தேங்காய், சர்க்கரை, ரவை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து வைக்கவும். மைதா மாவுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து, வாழை இலையில் வைத்து தட்டி, அதனுள் பூரணத்தை நடுவில் வைத்து மூடி, மறுபடியும் தட்டி... சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #24 on: July 11, 2015, 10:21:13 PM »
பிரெட் பர்ஃபி



தேவையானவை:

வெள்ளை பிரெட் தூள்  2 கப், சர்க்கரை  ஒரு கப், தேங்காய்த் துருவல்  ஒரு கப், பால்  ஒரு கப், முந்திரித் துண்டுகள்  2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் (விருப்பப்பட்டால்)  2 சொட்டு, நெய்  சிறிதளவு.

செய்முறை:

பிரெட் தூளை வெதுவெதுப்பான பாலில் ஊற   வைக்கவும். கடாயில் தேங்காய் துருவல், சர்க்கரையை சேர்த்து வதக்கவும். சிறிது கெட்டியானவுடன் பாலில் ஊற வைத்த பிரெட் தூளை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகள், எசன்ஸ் சேர்த்து... நெய் தடவிய தட்டில் கொட்டி ஃப்ரிட் ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, துண்டுகள் போடவும் (ஃப்ரீசரில் வைக்க வேண்டாம்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #25 on: July 11, 2015, 10:46:14 PM »
அரிசிப்பொரி  பாதாம் பருப்பு ஸ்வீட்



தேவையானவை:

அரிசிப்பொரி  அரை கப், வறுத்த வேர்க்கடலை  முக்கால் கப், பொட்டுக்கடலை  முக்கால் கப், பொடித்த வெல்லம்  ஒரு கப், பாதாம் பருப்பு  கால் கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், நெய்  2 டீஸ்பூன்.

செய்முறை:

அரிசிப்பொரி, பாதாம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை  சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, வெல்லத்தை போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டவும். இதை மீண்டும் அடுப்பிலேற்றி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கொதிக்கும் வெல்லக் கரைசலில், அரைத்து வைத்த பவுடரை சேர்த்துக் கிளறி, இறக்குவதற்கு முன் நெய் சேர்த்து, தட்டில் கொட்டி, ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #26 on: July 11, 2015, 10:48:43 PM »
தீபாவளி லேகியம்



தேவையானவை:

சுக்கு  50 கிராம், சித்தரத்தை  25 கிராம், ஓமம்  10 கிராம், சீரகம்  25 கிராம், கண்டதிப்பிலி  25 கிராம், அரிசி திப்பிலி  25 கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), வெல்லம்  கால் கிலோ, இஞ்சி  ஒரு பெரிய துண்டு, நல்லெண்ணெய்  50 மில்லி, நெய்  50 கிராம்.

செய்முறை:

சுக்கு, சித்தரத்தை, ஓமம், சீரகம், கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு, அரைத்து வைத்திருக்கும் பொடியை தூவிக் கிளறி, இறுகியதும் அடுப்பை நிறுத்திவிடவும். கொஞ்சம் ஆறியதும் நெய்யும், நல்லெண்ணெயும் சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். தேவைப்படும்போது, இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #27 on: July 11, 2015, 10:50:17 PM »
சக்கர் பாரா



தேவையானவை:

மைதா மாவு  2 கப், நெய்  கால் கப், சர்க்கரை  2 கப், எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

நெய்யுடன் மைதா மாவை சேர்த்து, தேவையான நீர்  விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 20 நிமிடம் ஊறவைக்கவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக இட்டு, டைமண்ட் ஷேப்பில் கட் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். பொரித்த துண்டுகளை பாகில் அமிழ்த்தி நன்றாக கலந்து தட்டில் பரப்பி வைக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #28 on: July 11, 2015, 10:53:05 PM »
கோதுமை மாவு மினி தட்டை



தேவையானவை:

 கோதுமை மாவு  ஒரு கப், பாசிப்பருப்பு  ஒரு கைப்பிடி அளவு, மிளகுப்பொடி  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை, நெய்  2 டீஸ்பூன், எண்ணெய்  பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேகவைக்கவும் (குழையக் கூடாது). கோதுமை மாவை லேசாக வறுத்துக்கொண்டு, அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, மிளகுப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள், நெய் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை சீடை போல் சிறிதாக உருட்டி, கட்டை விரலால் அழுத்தி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #29 on: July 11, 2015, 10:54:46 PM »
பட்டர் பர்ஃபி



தேவையானவை:

 வெண்ணெய், சர்க்கரை, பால் பவுடர்  தலா ஒரு கப், நெய்  சிறிதளவு.

செய்முறை:

அடிகனமான வாணலியில் சர்க்கரையைச் சேர்த்து, அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் வெண்ணையை சேர்க்கவும். வெண்ணெய் உருகிய தும் பால் பவுடர் சேர்த்துக் கிளறி, பார்த்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி. சமப்படுத்தி, துண்டுகள் போடவும்.