Author Topic: ~ 30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி! ~  (Read 2166 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லெமன் சோடா



தேவையானவை:

எலுமிச்சை காய் - ஒன்று, எலுமிச்சை பழம் - 2, சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

செய்முறை:

சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும், ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும். எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து, கொட்டை இல்லாமல், ஆறிய பாகுடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரெஞ்சு டோஸ்ட்



தேவையானவை:

பிரெட் - 6 ஸ்லைஸ், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், வெண்ணெய்  (அ) நெய்  - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ச்சி ஆற வைத்த பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து, சர்க்கரையும் சேர்த்து, கட்டியில்லாமல்  நன்றாக கலக்கவும். நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் (அ) நெய்யை சூடாக்கி... பிரெட்டை பால் கலவையில் தோய்த்து உடனடியான `பேனில்’ போடவும். இருபுறமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.

குறிப்பு:

கஸ்டர்ட் பவுடருக்குப் பதிலாக சோள  மாவும், வெனிலா எசன்ஸும் சேர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லெமன் - கோரியண்டர் ரைஸ்



தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம்  ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து... பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் அதிக தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். பிறகு, தீயைக் குறைத்து எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இடையில் கிளறவும். அரிசியை மலர வேகவைத்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஃபெட்டுஷினே பாஸ்தா



தேவையானவை:

ஃபெட்டுஷினே பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு பாக்கெட், தக்காளி - 6, பூண்டு - 3 பல், பாலக்கீரை - ஒரு கட்டு, தயிர் - ஒன்றரை கப், க்ரீம் - ஒரு கப், தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும் (வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும்). தயிரை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து, க்ரீமுடன் கலந்து தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய பூண்டு, தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியதும்... தக்காளி சாஸ், சர்க்கரை, மிளகாய்த்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிர் கலவையை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நறுக்கிய பாலக்கீரையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் பாஸ்தா வேகவைத்த தண்ணீரை சேர்க்கவும்). கீரை சற்று வெந்ததும், பாஸ்தா சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

இதை எல்லா வகை பாஸ்தா பயன்படுத்தியும் செய்யலாம். பாஸ்தாவுக்குப் பதில் ஸ்பெகட்டி பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புருஷெட்டா



தேவையானவை:

 ரஸ்க் - தேவையான அளவு, தக் காளி - ஒன்று, பூண்டு - 2 பற்கள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன், சீஸ் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக் கேற்ப.

செய்முறை:

தக்காளியை விதை நீக்கி நறுக்கவும். பூண்டு, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். கொடுக் கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (ரஸ்க் நீங்கலாக) ஒன்றாக கலந்து, சிறிது நேரம் ஊற விடவும். பரிமாறும்போது இந்தக் கலவையை ரஸ்க் மேல் சிறிதளவு வைத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மொகிடோ



தேவையானவை:

புதினா இலைகள் - கால் கப், பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், தண்ணீர், சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

செய்முறை:

 புதினா, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, வடிகட்டவும். பரி மாறும்போது சோடா, ஐஸ் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சல்சா



தேவையானவை:

தக்காளி - 4, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, குடமிளகாய் - பாதி அளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 தக்காளியின் உள்பகுதியை விதையுடன் எடுத்து மிக்ஸியில் போடவும். சதைப் பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். விதைப்பகுதியை அரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்க்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து, குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பிறகு, சிப்ஸ் உடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாட்டர் மெலன் ஸ்லஷ்



தேவையானவை:

தர்பூசணி துண்டுகள் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து அடித்து, `திக்’காக பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆரஞ்சு டீ



தேவையானவை:

டீ பை (டீ பேக்) - ஒன்று, ஆரஞ்சு சாறு - ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - அரை கப், புதினா இலை - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தண் ணீரைக் கொதிக்க வைத்து... சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆறவைக்கவும். ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு... டீ, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்ட்ராபெர்ரி யோகர்ட்



தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி - 10, தயிர் - 3 கப், சர்க்கரை - முக்கால் கப், தண்ணீர் - முக்கால் கப்.

செய்முறை:

தயிரை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூடி, வடிகட்டியின் மேல் வைத்து, கீழே பாத்திரம் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் வடிந்து தயிர் நன்கு கெட்டியாக இருக்கும். சர்க்கரையுடன் தண்ணீரைக் கலந்து காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும் நறுக்கிய ஸ்ட்ரா பெரியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். ஆறிய பின் வடிகட்டி, தயிருடன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாட்டர்மெலன் கிரானிட்டா



தேவையானவை:

தர்பூசணி துண்டுகள் - 7 கப், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒன்று.

செய்முறை:

தர்பூசணியை விதை நீக்கி, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிக்கவும். பிறகு ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு கழித்து அதை போர்க்கால் கீறவும். மீண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது, அதை போர்க்கால் பொடிப் பொடியாக கீறி, கண்ணாடி கப்பில் போட்டுக் கொடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பட்டர்ஸ்காட்ச் புட்டிங்



தேவையானவை:

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், பழுப்பு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - அரை டேபிள் ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் சோள மாவு பாதி பால் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் மீதியுள்ள பால், பழுப்பு சர்க்கரை, வெண்ணெய், உப்பு மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் சோள மாவு - பால் கலவையை சேர்க்கவும். நன்கு கெட்டியாகி, பளபளப்பாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு அடுப்பை அணைத்து, கலவையை ஆறவிட்டு, வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி வைத்து எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஃப்ரூட் ஸ்கீவர்ஸ்



தேவையானவை:

மாம்பழம் - ஒன்று (க்யூப்களாக நறுக்கவும்), கறுப்பு - பச்சை திராட்சை (சேர்த்து) - ஒரு கப், சீஸ் (அ) பனீர் துண்டுகள் - சிறிதளவு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், புதினா இலை - 3, உப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை:

புதினாவை மிகவும் பொடியாக நறுக்கி தேன், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். அதில் பழங்களை சேர்த்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பெரிய குச்சியில் (ஸ்கீவர்) அல்லது பல் குத்தும் குச்சியில் பழம், சீஸ் துண்டு (அல்லது பனீர் துண்டு) என மாற்றி மாற்றி குத்தி சாப்பிடக் கொடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பான் கேக்



தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப், பால் - ஒரு கப், பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். தோசைக்கல்லை சூடுசெய்து, வெண்ணெய் தடவி மாவை ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றவும் (தேய்க்க வேண்டாம்). சுற்றிலும் வெண்ணெய் சேர்த்து, இரு பக்கமும் பொன் நிறமானதும் எடுக்கவும்.
இதை தேன் அல்லது `மேபல் சிரப்’புடன் பரிமாறவும்.
« Last Edit: July 09, 2015, 08:13:13 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இலங்கை ரொட்டி



தேவையானவை:

மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - அரை கப், தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, சைட் டிஷ் உடன் பரிமாறவும்.