Author Topic: ~ 30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி! ~  (Read 2437 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹாட் சாக்லேட்



தேவையானவை:

பால் - ஒரு கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டைத் தூள் - ஒரு சிட்டிகை, சர்க் கரைத் தூள் - சிறிதளவு.

செய்முறை:

கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும். மீதி பாலை சூடு செய்து, கோகோ - பால் கரைசலை சேர்க்கவும். இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி அலங்கரிக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோதுமை - எள் ஸ்நாக்ஸ்



தேவையானவை:

கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி இட்லி மிளகாய் பொடி - தேவையான அளவு, எள்  - 2 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி (பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 கோதுமை மாவு, மைதா மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றைக் கலந்து, தேவையான நீர் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். அரிசி மாவு, நெய்யைக் குழைத்துத் தனியே வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இடவும். ஒவ்வொரு சப்பாத்தியின் மேல் பாகத்தில் குழைத்த மாவைத் தடவவும். அதன் மேல் ஆச்சி இட்லி மிளகாய் பொடி தூவவும். ஒன்றின்மேல் ஒன்றாக சப்பாத்தியை அடுக்கி ரோல் செய்யவும். ரோலை துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடு செய்து, வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும். பொரித்தவற்றைத் தட்டில் வைத்து, எள், கொப்பரைத் துருவல், முந்திரிப்பொடி தூவி சூடாகப் பரிமாறவும்.