Author Topic: ~ 30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி! ~  (Read 2155 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/




வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர்.
« Last Edit: July 09, 2015, 08:17:07 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நூடுல்ஸ் சூப்



தேவையானவை:

நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கேரட், குடமிளகாயை முக்கால் வேக்காடு பதத்தில் வதக்கவும். தண்ணீர் 2 கப் சேர்த்து, கொதிக்கும்போது நூடுல்ஸை சேர்க்கவும். வெந்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீரில் கரைத்த சோள மாவை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். சூப் சிறிது கெட்டியாக வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு, வெங்காயத்தாள் சேர்த்து... உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இத்தாலியன் சாலட்



தேவையானவை:

நறுக்கிய லெட்யூஸ் கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட் - தலா ஒரு கப், நறுக்கிய கலர் குடமிளகாய், வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த கார்ன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா கால் கப், வால்நட் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.

சாலட் அலங்கரிக்க:

ஆலிவ் எண்ணெய் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (பொடித்தது), மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

 ‘சாலட் அலங்கரிக்க’ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். வேர்க்கடலை, கார்ன் உடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். இதனுடன் லெட்யூஸ் கீரை, வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, வால்நட், எலுமிச்சைச் சாறு  சேர்த்து... சாலட் அலங்கரிப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டோர்ட்டில்லா சூப்



தேவையானவை:

டோர்ட்டில்லா - 2 (செய்யும் விதம்: அடுத்த பக்கத்தில்), நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், ஸ்வீட் கார்ன் - கால் கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 5 பற்கள், தக்காளி - 3, நறுக்கிய ஜுக்கினி (வெள்ளரி போன்றிருக்கும்) - கால் கப், ராஜ்மா - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

டோர்ட்டில்லாக்களை இறுக்கமாக சுற்றி நூடுல்ஸ் போல வெட்டி... ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். அதில் ஒரு பாதியை எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நறுக்கிய குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி வைக்கவும். தக்காளியை வேகவைத்து, தோல் உரித்து மசித்து, வடிகட்டவும்.
வேறு ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளிச் சாறு சேர்க்கவும். அத னுடன் உப்பு, சீரகத்தூள், ஆரிகனோ, மிளகாய்த்தூள், மசித்த ராஜ்மா சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக, வதக்கி வைத்த குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து... ராஜ்மா, டோர்ட்டில்லா, தேவைக் கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டோர்ட்டில்லா



தேவையானவை:

 மைதா மாவு - முக்கால் கப், கோதுமை மாவு - கால் கப், பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளக் கட்டையால் மெலிதாக தேய்த்து... சூடான தோசைக்கல்லில் போட்டு (எண்ணெய் விடாமல்) இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓட்ஸ் - கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸ்



தேவையானவை:

ஓட்ஸ் - 2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பால் - தேவையான அளவு.

செய்முறை:

 வெறும் வாணலியில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சூடு செய்யவும். இதனுடன் பாதாம், வால்நட், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளவும். சிறிய பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் சேர்த்து நுரை வரும் வரை கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் உப்பு, வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். இதனை ஓட்ஸ் கலவையில் நன்றாகக் கலந்து `மைக்ரோவேவ் அவன்’-ல் 300 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். பரிமாறும் முன் பா

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓட்ஸ் - பனானா ஸ்மூத்தி



தேவையானவை:

 ஓட்ஸ் - கால் கப், வாழைப்பழம் - ஒன்று, கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்,  தேன் - 2 டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப்.

செய்முறை:

வாழைப் பழத்தை தோல் உரித்து துண்டு களாக வெட்டி முதல் நாள் இரவு ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸர் பகுதியில் வைக்கவும். ஓட்ஸ், தேன், கோகோ பவுடர், பட்டைதூள், பால் எல்லாம் கலந்து முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் ஓட்ஸ் கலவை, வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பருகவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சீஸ் ரோல்ஸ்



தேவையானவை:

பிரெட் - 4 ஸ்லைஸ், சீஸ் துண்டுகள் - 4, மிளகுத்தூள், வெண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

 பிரெட்டின் ஓரங்களை வெட்டி, அப்பளக் குழவியால் மெலிதாக தேய்த்து, சீஸ் துண்டுகளை மேல் வைத்து மிளகுத்தூள் தூவவும். பிறகு, இறுக்கமாக ரோல் செய்யவும். தோசைக்கல்லில் வெண்ணெய் ஊற்றி, ரோல்களைப் போட்டு எல்லா பக்கமும் பொன் நிறமாக ஆனதும் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாஸ்தா சாஸ்



தேவையானவை:

தக்காளி - 5, வெங்காயம் - ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் - ஒரு கப், பூண்டு - 5 பற்கள், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் டீஸ்பூன், இத்தாலிய சீஸனிங் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தக்காளியை வேகவைத்து தோல் உரித்து ஆறியவுடன் மசித்து, வடிகட்டி வைக்கவும். வெங்காயம், பூண்டு, கலர் குடமிளகாய் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, இத்தாலிய சீஸனிங் சேர்த்து... உடனே வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை கொதிக்கவிடவும். ஆறியபின் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கவும்.
இதை வெஜ் பாஸ்தா தயாரிக்கப் பயன்படுத்தலாம். பீட்ஸா செய்யும்போது, `பீட்ஸா பேஸ்’ மேல் தடவலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெஜ் பாஸ்தா



தேவையானவை:

பாஸ்தா - ஒரு பாக்கெட், கேரட் - 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் - தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், பாஸ்தா சாஸ் - 2 கப் (செய்யும் விதம்: முன்பக்கத்தில்), ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பற்கள், துருவிய சீஸ் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாஸ்தாவை வேகவைத்து வடித்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை சேமிக்கவும். கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்துக் கிளறி... கேரட், குடமிளகாய், வெள்ளரிக்காய், கீரையைப் போட்டு வதக்கவும். வெந்தவுடன் வேகவைத்த பாஸ்தா, பாஸ்தா சாஸ், உப்பு சேர்த்து, பாஸ்தா வேகவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி, துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்



தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பற்கள், வெங்காயத்தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்), சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத்தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர்விட்டு மலர வேகவைத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத்தாளைத் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கஸீடியா



தேவையானவை:

டோர்ட் டில்லா - 2 (செய்யும் விதம்: 107-ம் பக்கத்தில்), சீஸ் - தேவையான அளவு, வெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

தோசைக்கல்லை சூடு செய்து, வெண்ணெயை சேர்த்து டோர்ட்டில்லாவை போட்டு இருபக்கமும் லேசாக சூடுபடுத்தவும். ஒரு பாதியில் துருவிய சீஸ்
வைத்து அரை நிலா போல் மடிக்கவும். இருபக்கமும் நன்றாக அழுத்தி சூடு செய்யவும். அதை இரண்டாக வெட்டி, சல்சாவுடன் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஃபலாஃபெல்



தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கலர் குடமிளகாய் - கால் கப், துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,  பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கவும்), எள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பிரெட் - ஒரு ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். அதை தண்ணீர் இல்லாமல் வடித்து, தனியா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிரெட்டை எலுமிச்சைச் சாற்றில் நனைத்துப் பிழிந்து, உதிர்த்துக்கொள்ளவும். இவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லாவற்றையும்  (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பர்கர்



தேவையானவை:

பன் - ஒன்று, வெஜ் கட்லெட் - ஒன்று, வட்டமாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய்,  தக்காளி துண்டுகள் - தலா 2, தக்காளி கெச்சப் - சிறிதளவு, சீஸ் ஸ்ப்ரெட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்), ஆலிவ் துண்டுகள் - தேவைக்கேற்ப.

செய்முறை:

 பன்னை இருபுறமும் சூடு செய்து, இரண்டு துண்டுகளாக்க வும். ஒரு பாதியில் சீஸ் ஸ்ப்ரெட் தடவவும், இன்னொரு பாதியில் கெச்சப் தடவவும். அதற்கு மேல் கட்லெட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, ஆலிவ் துண்டுகள் வைத்து சீஸ் தடவிய பக்கம் கொண்டு மூடவும். சுவை. சத்துமிக்க பர்கர் தயார்.

குறிப்பு:

கட்லெட்டுக்குப் பதில் `ஃபலாஃபெல்’ உபயோகித்தும் பர்கர் தயாரிக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவகாடோ டிப்



தேவையானவை:

அவகாடோ (பட்டர் ஃப்ரூட்), வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அவகாடோவை நன்றாக மசித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.