Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 173412 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1023
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #540 on: April 21, 2025, 05:13:20 PM »
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை


அடுத்த குறள்
🪷 தக்கார் ---------- என்பது அவ--------
எச்ச-----காணப்----------

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #541 on: April 21, 2025, 07:03:41 PM »
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்...


அடுத்த குறள்:-
______இன்சொலன் ____ ஒருவற்கு
_______ மற்றுப் ____.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1023
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #542 on: April 23, 2025, 12:53:02 PM »
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற


பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா 


அடுத்த குறள்
🪷 வைய----------- ------------ -------பவன் -------
தெய்வ------- வைக்கப் -----

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #543 on: May 03, 2025, 12:27:17 AM »
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான் 

NEXT 🌹.....றுலகம் வழங்கி......
தானமிழ்தம் .......பாற்று

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1023
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #544 on: May 03, 2025, 03:31:44 PM »
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்



அடுத்த குறள்
🪷விண்----- ------ விரிநீர்
விய----------- -----நின்று ...

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #545 on: May 03, 2025, 04:57:02 PM »
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் 

🌹ஏரின் ........ உழவர்........
வாரி வளங்குன்றிக்.......

Offline KS Saravanan

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #546 on: May 03, 2025, 05:09:39 PM »
ஏரின் நிலைத்ததூஉம் ஈனும் அறிகொன்று
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:
பயிர் அளவை நிலைநிறுத்துவது ஏரிக்குத் தான் வழி; ஆனால், அந்த ஏரிக்கே தண்ணீர் வழங்கும் வளம் குறைந்துவிட்டால், அது (பயிர்) கொடுக்கும் அளவு குறையும் என்பது உண்மை.

இந்தக் குறள் வளம் குறைவால் உண்டாகும் விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக வேளாண்மை சார்ந்த சூழ்நிலைகளை.


NEXT

இழுக்கல் உடையாரை ஒள்ளார்செய் தீமைகள்
பழிக்கும் தவியின்மை நூல்.

பொருள்:
நல்லோர் செய்யும் அற நூல்கள், தவறான பாதையில் செல்லும் பழிக்கத்தக்கவர்களுடைய செயல்களைக் கண்டிக்கின்றன; அவர்கள் தம் செயல்களுக்கு உரிய பழி நிச்சயமாக ஏற்படும்.



Next

.......... மாசற்றார் கேண்மைஒன் ......
ஒருவுக ஒப்பிலார் ......
« Last Edit: May 18, 2025, 02:20:34 PM by KS Saravanan »

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #547 on: May 20, 2025, 05:59:10 PM »
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.


குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும்

NEXT 🌹........ ஏகினான் .............
நிலமிசை நீடுவாழ்.....

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #548 on: May 20, 2025, 06:35:52 PM »
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்..


அடுத்த குறள்:-
____ வாழாதார் ______ தம்மை
_____நோவ ______.

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 262
  • Total likes: 609
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #549 on: May 21, 2025, 09:23:57 AM »
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், நம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ

அடுத்த குறள்: ____ செல்வமும்____அறத்தினூஉங்கு
ஆக்கம் ______..

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #550 on: May 21, 2025, 01:08:39 PM »
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை...


_____ தலைக்கூடி ______ பிரிதல்
_______ புலவர் ______.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1023
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #551 on: May 21, 2025, 04:48:11 PM »
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.



அடுத்த குறள்
🪷உடை---------- ----------போல் ---------- கற்றார்
கடையரே -----------தவர்

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3021
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #552 on: May 23, 2025, 08:09:12 AM »
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்


அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்
— மு. கருணாநிதி



அஞ்சாமை ______ அறிவூக்கம் ______
எஞ்சாமை _______ கியல்பு

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1213
  • Total likes: 1023
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #553 on: May 23, 2025, 05:28:52 PM »
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   


அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்


அடுத்த குறள்
🪷இய----------- ஈட்டலுங் ---------- காத்த
--------தலும் ------ தரசு.   

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #554 on: May 24, 2025, 10:33:50 AM »
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. 

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு 

NEXT🌹........பிறப்பில் பிரியலம் ...........
கண்நிறை ...........