Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 127155 times)

Online Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #510 on: March 15, 2025, 10:26:31 PM »
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   

நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது 


இம்மைப்......பிரியலம்.....
கண்நிறை...........

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #511 on: March 16, 2025, 12:40:57 PM »
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்



அடுத்த குறள்:-
_____ வாய்மை ______தவத்தொடு
________ வாரின் ______

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #512 on: March 16, 2025, 12:43:21 PM »
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.




அடுத்த குறள்
🪷 [யாரினும் ---------- என்------ ஊடி-------
யாரினும் ---------- என்று

Online Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #513 on: March 20, 2025, 07:39:54 AM »

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

யாரினும் நின்னையே விரும்புகின்றேம்’ என்று சொன்னேன் ஆக, அவள், ‘யாரினும்? யாரினும்?’ என்று கேட்டவளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள் 

🌹....... ஆயினும் .........மென்றோள்
அகறலின் ...........🌹

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #514 on: March 20, 2025, 07:50:04 AM »
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது..


அடுத்த குறள்:-
______ காக்க ______ தெரிந்தோம்பித்
_______ அஃதே ______

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #515 on: March 20, 2025, 12:11:24 PM »
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே



ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
— மு. வரதராசன்


தாமின் ப_____ உலகின் ப_______
காமுறுவர் ______ தார்

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #516 on: March 20, 2025, 12:19:21 PM »
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்...


அடுத்த குறள்:-
_______ செல்வங் _____ யொருவற்கு
மாடல்ல _______  _____.

Online Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #517 on: March 21, 2025, 11:51:34 AM »
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா 

🌹....... பொறியின் ..........எண்குணத்தான்
தாளை............

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #518 on: March 21, 2025, 03:20:47 PM »
கோளில் பொறியின்
                                  குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.



அடுத்த குறள்
🪷 பொறி------------ -----------தான் ------------ ஒழுக்க
நெறி----------  -----------  வார். 


Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #519 on: March 22, 2025, 07:57:55 AM »
பொறிவாயில் ஐந்தவித்தான் ஒழுக்கம்
அறிவினுள் எல்லை இலா வார்

ஐந்து புலன்களையும் அடக்கி, ஒழுக்கம் தவறாமல் வாழ்பவர்கள் மிகுந்த அறிவுடையவர்கள் எனப் போற்றப்படுகிறார்கள்...


Next:-_______இருவினையும் சேரா ______
பொருள்சேர்  _______ ____.

Offline Asthika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #520 on: March 22, 2025, 09:00:33 AM »
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு...

விளக்கம்:
    ‌‌.   கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை   

 அடுத்து :
      செல்லாமை உண்டேல் _____________ மற்றுநின்
வல்வரவு ____________...     

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #521 on: March 22, 2025, 10:18:35 AM »
செல்லாமை உண்டேல் சிறுதுணையும் உண்டேல்
வல்வரவு தேறிச் செயல்

வருமானம் இல்லையென்றால், சிறிய செலவுக்கூட தவிர்க்கவேண்டும். வருமானம் இருந்தால், அதன் அளவை மதிப்பீட்டு, விவேகத்துடன் செலவுகளைச் செய்ய வேண்டும்.


அடுத்த குறள்:-
_______கால்வல்லேம் ______ உடலோடா
_____ இல்லை____


Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #522 on: March 25, 2025, 01:11:14 PM »
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து


கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் 'தேர் கடலிலே ஓடாது''கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்


உறின்நட்டு அறினொருஉம் __________ கேண்மை
பெறினும் ____________ என்



Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #523 on: March 25, 2025, 04:07:36 PM »
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்


அடுத்த குறள்
🪷ஒழு-------  ------------- பெருமை ------பத்து
வேண்டும் ----------- துணிவு.

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #524 on: March 26, 2025, 09:40:22 AM »
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்...


அடுத்த குறள்:-
_______இன்னாத _______ இன்மையின்
_____ இன்னா ____