Author Topic: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~  (Read 4874 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #30 on: April 27, 2015, 02:40:13 PM »
மேங்கோ அச்சார்



தேவையானவை:

புளிப்பான மாங்காய் துண்டுகள் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், சோம்பு - தேவைக்கேற்ப, உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அத்துடன் தேவையான மஞ்சள்தூள், உப்பு கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும். நன்கு சுண்டிய பிறகு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் நல்லெண்ணெயைக்  காயவைத்து, ஆறவைத்து அதனுடன் மாங்காய் கலவை, சோம்பு ஆகியவற்றை கலந்துவிடவும்.
இது ராஜஸ்தானி டிஷ். பயணங்களின்போது, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை டூர் ரெசிப்பி! ~
« Reply #31 on: April 27, 2015, 02:41:43 PM »
சிக்கன் - பனீர் சமோசா



தேவையானவை:

சிக்கன் (எலும்பில்லாதது) - கால் கிலோ, மைதா மாவு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், ,  சிக்கன் மசாலா - ஒரு டீஸ்பூன்,  மஞ்சள் தூள்,  கரம் மசாலா - தலா கால் டீஸ்பூன்,  மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு, பட்டை, ஏலக்காய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,  பனீர் துண்டுகள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவை வெந்நீர் விட்டு பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி... சோம்பு, பட்டை, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் சிக்கன் சேர்த்து, சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றும்வரை நன்றாக வதக்கி,  மஞ்சள் தூள்,  மிளகாய்த்தூள்,  சிக்கன் மசாலா,  கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும். இறக்குவதற்கு முன் பனீர் துண்டுகள் போட்டு கொஞ்சம் வேகவிட்டு, கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும். பிசைந்து வைத்த மைதா மாவை ரொட்டிபோல் இட்டு, அதை பாதியாக கட் செய்து, கோன் போல மடித்து, உள்ளே கொஞ்சம் சிக்கன் கலவையை வைத்து மடித்து சமோசாக்களாக செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன் சாஸ் வைத்துப் பரிமாறவும்.