« Reply #12 on: February 06, 2015, 01:22:16 PM »
தக்காளி சூப்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், ஊறவைத்த பச்சைப் பட்டாணி- 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீஸ்பூன், சோள மாவு ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா- 2 டேபிள்ஸ்பூன், பால் அரை கப், கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் 3 கப் நீர் விட்டு பச்சைப் பட்டாணி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, கேரட், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பாதியளவு காய்கள் வெந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் சோள மாவைப் பாலில் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். பின்னர் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
« Last Edit: February 06, 2015, 01:25:23 PM by MysteRy »

Logged