Author Topic: ~ மொறுமொறு மெது வடை ~  (Read 396 times)

Offline MysteRy

~ மொறுமொறு மெது வடை ~
« on: January 31, 2015, 10:08:13 PM »
மொறுமொறு மெது வடை



தேவையானவை:

உளுந்து  500 கிராம், பச்சரிசி மாவு  100 கிராம், பச்சைமிளகாய்  2, பெரிய வெங்காயம்  2, கறிவேப்பிலை கொத்தமல்லி  சிறிதளவு, மிளகு  10 கிராம், உப்பு, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை:

உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும்.  இதில் பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் , கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:

உளுந்து பசியைப் போக்குவதுடன், உடலுக்கு அதிகக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். எலும்பு மற்றும் தசைகளை வலுவடையச் செய்யும். இளம் பெண்களின் இடுப்பு வலிக்கு, இயற்கை அளித்த வரப்பிரசாதம்.