Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)  (Read 1725 times)

Online MysteRy

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  வெள்ளி கிழமைக்கு (09-01-2015) முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.


Offline SaHaNa

ஊர் எங்கிலும் கொண்டாட்டம்
என் மனதிலோ திண்டாட்டம்
மாவிலை தோரணை அலங்காரம்
வாசல் யாவிலும்
மணம் வீசும் பலகாரம்
தெருவின் மூலையிலும்

புத்தாடை உடுத்தி
யாவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி
கிழிந்த பாவாடைசட்டை
என் விதியின் சுழற்சி

பொங்கல் பானை பொங்க
காத்துகொண்டு இருக்கிறாள்  முதலாளி அம்மா
நானும் காத்துகொண்டு இருக்கிறேன்
பொங்கல் திகட்டியபின்
என் தட்டில் படைப்பார்கள் என்று!!!

« Last Edit: January 05, 2015, 11:45:09 AM by SaHaNa »

Offline thamilan

இயத்திரங்களோடு இயந்திரமாய்
தரையில் கால் படாமல்
தட்டில் கை படாமல்
இயந்திர வாழ்க்கை வாழும்
நாம் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒன்று
நம்மால் முடியாத ஒன்று
உழவன் சேற்றில் கால் பதிப்பதால் தான்
நாம் சோற்றில் கை பதிக்கிறோம் என்பது

நம் பசி தீர
இந்த வானத்து மழை
பூமியில் விதை
உழவனின் நெற்றி வியர்வை
இவை நிலத்தில் விழுந்தாலொழிய
உணவு என்று எழுதி அந்த
கடதாசியை உண்டால் மட்டுமே முடியும்

வெறும் பண்டிகை அல்ல பொங்கல்
மனிதனையும் இயற்கையும் இணைந்து
உறவாடும் நன்னாள்
இயற்கைக்கு மனிதன் நன்றி சொல்லும்
ஒரு பொன் நாள்
விஞ்ஞானமும் மெய்ஞானத்தில்
முழ்கும் நாள்

உலகிற்கே உணவு படைத்திடும்
பூமித் தாய்க்கும்
அதற்கு உறுதுணையாக இருக்கும்
ஆதவனுக்கும்
ஏர் இழுத்து உழவனுக்கு உதவிடும்
எருதுகளுக்கும்
நன்றி சொல்லும் நன்னாள் இது

இந்த பொங்கல் திருநாளில்
நாமும் இயற்கைக்கு நன்றி சொல்வோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே
« Last Edit: January 07, 2015, 02:20:01 PM by thamilan »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இன்று பொங்கல் திருநாளாம்
பொங்கல் வைக்கலாம் என்று பார்த்தால்
அரிசியில் இருந்த தரத்தில் கலப்படம்
வெள்ளத்தில் சுண்ணாம்பு கலந்து கலப்படம்
கரும்பு வாங்கினால் கசக்கிறது
 அதிகளவு மருந்து போலும் !

மஞ்சள் வாங்கினால் அது மணக்கவில்லை
அடடா அதிலும் கலப்படம்
குங்குமம் வாங்கி நெற்றியில்
 வைத்தால் அரிகிறது நெற்றி அதிலும் கலப்படம்
சந்தனம் வாங்கினால் மரதூலில்
வண்ணமும் வாசனையும் சேர்த்து
அதுவும் கலப்படம் போல !

விவசாயியே நீ இந்த நாட்டின் முதுகெலும்பு
அதனால் தான் உன்னை ஒடிக்க பார்கிறார்கள்.
அரசியல் வாதியும் தொழிலதிபரும்
 பணத்திற்கு துணை நிற்பவன்
நீ நேராக நிமிர்ந்து நில் !
சாதுர்யமாக எதிர்த்து போராடு
இயற்கை உனக்கு எல்லாம் கொடுத்து இருக்கிறாள் ...

ஊருக்கே சோறு போடுபவன் நீ
இயற்கை விவசாயத்தை மேற்கொள்!
உன் தலைமுறைக்கும் சொல்லி கொடு
நவீன தொழில் நுட்பத்திற்கு தடை சொல்!
 பாரம்பரிய  பயிர் சுழற்சி உழவு முறையை  மேற்கொள்
எவன் தடுப்பான் உன்னை!

இயற்கை விவசாயம் வாழ்வை மேம்படுத்தும்
சுற்று சுழலை பாதுகாக்கும் .
உன் வாழ்வை  செழிப்பாகும்
எதிர்கால சந்ததியின்  ஆயுளை  கூட்டும் .
அப்போது  கொண்டாடு ஆனந்தமாக  பொங்கலை ..!
« Last Edit: January 09, 2015, 06:36:15 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline CybeR

பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல்
போல் தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!
பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் போல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!
தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி சொல்லும் நல்மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!
புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

Offline Nick Siva

இமயமாக இருக்கும் வானுக்கு
நிகரான உயர்வு இல்லை
பூமி யின் உதயமாக இருக்கும் சூரியனுக்கு
நிகரான ஒளியும் இல்லை

வெண்மை நிறத்தை விட
தூய்மையாக இருக்கும் இயற்கைக்கு நிகரான
நிறமும் இல்லை
கரும்பை விட மிகவும் சுவையான
மனதினைக் கொண்ட உழவனுக்கு நிகரான
உழைப்பும் இல்லை

பெற்ற தாயின் பாசத்தை
மதிப்பதை போல
வெண்மை பொருந்திய பசுவின் ரத்தத்துக்கு
நிகராக ஏதும் இல்லை

இவை யாவும் ஒன்றாக சேர்ந்து வரும்
அற்புதமான நாள் தைதிருநாள்
இந்த திருநாளில்
தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து
இயற்கைக்கும் ஆதவனுக்கும்
உழவர்களுக்கும் அவர்களுக்கு உதவும்
எருதுகளுக்கும் சொல்லும் நன்றியை
விழாவாக  கொண்டாடும்
இனியநாள் தான் பொங்கல் திருநாள்,
இனிய பொங்கல் திருநாள் நண்பர்களே

Offline Dong லீ

தமிழன் பெருமை கொள்ள
ஆதவன் வாழ்த்து சொல்ல
மெல்ல மெல்ல உதித்து
வந்தாள் தை மகள்

உழவன் உளம் மகிழ
என்றுமே  அழியா
அவன் புகழை சொல்ல
துள்ளி துள்ளி குதித்து
வந்தாள் தை மகள்

ஆதவன் அயராது சிந்தும்
வெயில் துளிகளிலும்
சஹானா ராக இசையை
அனுபவிக்கும் ரசிகன் போல்
ஆனந்தமாய் உழைக்கும்
எருதுக்கு விருதுகளை
அள்ளி அள்ளி கொடுக்க
வந்தாள் தை மகள்

உழவனின் முகத்தில் மின்னும்
வியர்வை முத்துக்களுக்கு
ஒரு கிராம் தங்கமும் ஈடில்லை
என்றுரைக்க வந்தவள்
இந்த தை மகள்

நம் கண்மணி போன்ற நெல்மணியை
ஆண்டுகள் தோறும்
நம் தட்டிற்கு கொண்டு வரும்
உழவன் நமக்கு
சோறு போடும் அன்னை
என புத்தியில் உரைக்க
செய்கிறாள் தை மகள்

கேப்பை கூழ் உண்ணும்
தமிழனின் ஆதாரமாய் விளங்கும் 
உழவன் இருக்க
 பிற தெய்வங்களும் என்ன .
அழகாய் நம் மனதில்
குடிகொண்ட சுந்தர ஈசனும் அவனே
ஆணித்தரமாய் நிக்கும்(நிற்கும்)
சிவராசனும் அவனே
நம் வாழ்வை நடத்தி செல்லும்
கேப்டனும் அவனே 
அவன் இல்லாமல்
நாம் வெறும் சைபர் மட்டுமே
நன்றிகளுடன் ஸ்ரீ டாங் லீ
« Last Edit: January 10, 2015, 08:27:19 PM by Dong லீ »