Author Topic: ~ 30 வகை கொழுக்கட்டை! ~  (Read 2527 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை கொழுக்கட்டை! ~
« Reply #30 on: August 28, 2014, 01:49:51 PM »
ஜவ்வரிசி கொழுக்கட்டை



தேவையானவை:
ஜவ்வரிசி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
ஜவ்வரிசியை 3 மணி நேரம் சுடுநீரில் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு இந்த ஜவ்வரிசி கலவையை உருண்டை கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.