Author Topic: என்னுள் நீ உன்னுள் நான்  (Read 578 times)

Offline thamilan

உன் கண்ணில்
ஒரு துளி கண்ணீராக
நான் இருந்தால்
உன் கன்னம் தழுவி
உன் உதட்டை சென்றடைந்திருப்பேன்
என் கண்ணில்
கண்ணீராக நீ இருந்தால்
கண்ணீர் சிந்தமாட்டேன்
என் கண்ணில் இருந்து
உன்னை வெளிவிட மாட்டேன்

உன் சுவாசக்காற்றாய்
நான் இருந்தால்
உன் சுவாசமாய் என்றும்
உன்னுள் உன்இதயம் முழுதும்
வியாபித்திருப்பேன்
என் சுவாசக்காற்றாய்
நீ இருந்தால்
உள்ளிழுத மூச்சை
வெளிவிட மாட்டேன்
வெளியே விட்டு
உன்னை தொலைக்கவும் மாட்டேன் 

Offline Maran

Re: என்னுள் நீ உன்னுள் நான்
« Reply #1 on: August 18, 2014, 09:54:06 PM »





மிகவும் எதார்த்தமான வரிகளுடன் கவிதை அருமை!